முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » மல்லமார்க்கம் முதல் - மலர்க்காம்பு வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - மல்லமார்க்கம் முதல் - மலர்க்காம்பு வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| மல்லமார்க்கம் | காண்க : மல்லகதி . |
| மல்லயுத்தம் | அறுபத்துநான்கு கலைகளுள் ஒன்றான மற்போர் . |
| மல்லர் | மற்போர் செய்வோர் ; வலியர் ; திருக்குறள் உரையாசிரியருள் ஒருவர் . |
| மல்லரங்கம் | காண்க : மற்பயிலிடம் . |
| மல்லரி | பறைவகை . |
| மல்லல் | வளம் ; வலிமை ; மிகுதி ; பொலிவு ; அழகு ; செல்வம் . |
| மல்லன் | மற்போர் செய்வோன் ; பெருமையிற் சிறந்தோன் . |
| மல்லாக்கடித்தல் | காண்க : மல்லாத்தல் . |
| மல்லாட்டம் | சண்டை . |
| மல்லாடல் | திருமால் கூத்தினுள் ஒன்று . |
| மல்லாத்தல் | மேல்முகமாகக் கிடக்கச்செய்தல் ; தோற்றுப்போதல் . |
| மல்லாத்துதல் | முதுகுகீழாக முகம் மேலாகக் கிடக்கச்செய்தல் . |
| மல்லாய் | இரப்போர் கலம் . |
| மல்லாரி | பறைவகை ; பண்வகை ; சண்டைக்காரி . |
| மல்லி | குடமுல்லை ; காண்க : எருமைமுல்லை ; காட்டுமல்லி ; பருத்துத்தடித்தவள் ; தீர்த்தங்கரருள் ஒருவர் ; பேராமல்லிகை ; கொத்துமல்லி . |
| மல்லிகை | பூங்கொடிவகை ; குடமல்லிகை ; விளக்குத்தண்டு ; இரப்போர் கலம் ; பாண்டம் ; மகரந்தமல்லிகை . |
| மல்லிகைமொட்டு | மலராத மல்லிகைப்பூ ; மகளிர் தலையணிவகை ; மொட்டம்பு . |
| மல்லுக்கட்டுதல் | மற்போர்புரிதல் ; பொருதல் ; கட்டாயப்படுத்துதல் ; வற்புறுத்தல் . |
| மல்லுச்சட்டம் | குறுக்குவிட்டம் . |
| மல்லுப்பிடித்தல் | காண்க : மல்லுக்கட்டுதல் . |
| மல்லூகம் | புழு . |
| மல்லை | வளம் ; பெருமை ; காண்க : மல்லாய் ; வட்டம் ; மாமல்லபுரம் . |
| மல்வென்றி | வாகைத்திணையுள் மற்போரில் வெற்றியைக் கூறும் ஒரு புறத்துறை . |
| மலக்கட்டு | காண்க : மலச்சிக்கல் . |
| மலக்கடி | மனக்கலக்கம் . |
| மலக்கம் | காண்க : மலக்கடி ; துன்பம் ; மாறுபாடு . |
| மலக்கு | மயக்கம் ; தேவன் . |
| மலக்குண்ணுதல் | கலக்கப்படுதல் . |
| மலக்குதல் | கலக்குதல் . |
| மலகரி | குறிஞ்சிப்பண்வகை . |
| மலங்கல் | குளம் ; காண்க : மலங்கு . |
| மலங்கழித்தல் | உடல்மலத்தை வெளியேற்றுதல் ; ஆணவம் முதலிய மலம் நீக்குதல் . |
| மலங்கழிதல் | உடல்மலம் வெளியேறுதல் ; ஆணவம் முதலிய மலம் நீங்குதல் . |
| மலங்கு | விலாங்குமீன் . |
| மலங்குதல் | நீர் முதலியன குழம்புதல் ; கெடுதல் ; மனங்கலங்குதல் ; பிறழ்தல் ; ததும்புதல் . |
| மலச்சிக்கல் | மலவடைப்பு . |
| மலச்சிக்கு | மலவடைப்பு . |
| மலசகிதர் | மும்மலத்தோடு கூடியவர் . |
| மலசலம் | மலமூத்திரங்கள் . |
| மலட்டா | கன்று போடாத பசு . |
| மலட்டாறு | காடுகளில் ஓடுவதும் விரைவில் நீர் வற்றுவதுமான ஆறு . |
| மலடன் | பிள்ளையில்லாதவன் . |
| மலடி | மகப்பேறில்லாதவள் ; கருத்தரியாமை ; ஈனாதவள் ; ஈனாதது . |
| மலத்திரயம் | காண்க : மும்மலம் . |
| மலநானம் | தூய்மையான இடத்தில் எண்விரலுக்குக் கீழாகவுள்ள மண்ணையெடுத்து மந்திரஞ் சொல்லி உடம்பிற்றேய்த்து நீரில் மூழ்குகை . |
| மலநீர் | சிறுநீர் ; மலமூத்திரம் . |
| மலப்பு | கடவுள் திருமுன்னர் ஆடும் ஒரு கூத்து வகை . |
| மலப்பை | மலம் தங்குமிடம் ; உடம்பு . |
| மலபந்தம் | காண்க : மலச்சிக்கல் ; மும்மலத்தாற் கட்டுண்கை . |
| மலபரிபாகம் | மலங்கள் தேய்தற்குரிய காரணங்களோடு கூடிய நிலை . |
| மலபாண்டம் | உடம்பு . |
| மலம் | அழுக்கு ; பவ்வீ ; சுக்கிலம் ; தீட்டு ; மூத்திரம் முதலிய உடல்மாசு ; வண்டல் ; துரு ; காண்க : மும்மலம் ; பாவம் ; கருப்பூரம் . |
| மலம்பாதை | மலைவழி . |
| மலமலத்தல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
| மலமலெனல் | ஓர் ஒலிக்குறிப்பு , கண்ணீர் பெருகுதற்குறிப்பு . |
| மலயக்கால் | காண்க : மலையக்கால் . |
| மலயக்கோ | பொதியமலைக்குத் தலைவனான பாண்டியன் . |
| மலயசம் | காண்க : மலையசம் . |
| மலயம் | பொதியமலை ; சந்தனமரம் . |
| மலயமாருதம் | காண்க : மலையக்கால் ; பண்வகை . |
| மலயமுனி | அகத்தியர் . |
| மலர் | பூ ; தாமரை ; ஒரு பேரெண் ; ஆயுதம் முதலியவற்றின் மேற்குமிழ் ; வெண்பாவின் இறுதிச்சீர் வாய்பாடுகளுள் ஒன்று ; மும்மலமுடையவர் . |
| மலர்க்கடை | பூ விற்கும் கடை . |
| மலர்க்கணையோன் | பூக்களை அம்பாகவுடைய மன்மதன் . |
| மலர்க்கா | பூங்காவனம் . |
| மலர்க்காம்பு | பூவில் இதழின் கீழுள்ள பாகம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 853 | 854 | 855 | 856 | 857 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மல்லமார்க்கம் முதல் - மலர்க்காம்பு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, மலம், மலச்சிக்கல், மற்போர், முதலிய, மலங்கு, ஆணவம், மலவடைப்பு, ஒலிக்குறிப்பு, மலையக்கால், உடம்பு, மும்மலம், மலக்கடி, நீர், மல்லுக்கட்டுதல், மல்லாத்தல், வளம், பறைவகை, ஒருவர், ஒன்று, கிடக்கச்செய்தல், கலம், இரப்போர், மல்லாய், பண்வகை

