முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » மயிற்கொன்றை முதல் - மரணித்தல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - மயிற்கொன்றை முதல் - மரணித்தல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| மயிற்கொன்றை | ஒரு செடிவகை ; ஒரு மரவகை . |
| மயிற்கொன்றைமரம் | கொன்றை மரவகை . |
| மயிற்சிகை | மயிலின் கொண்டை ; ஒரு கொடிவகை . |
| மயிற்பகை | பச்சோந்தி . |
| மயிற்பிச்சம் | மயிலிறகால் செய்த குடை ; மயில்தோகை விசிறி . |
| மயிற்பீலி | மயிலிறகு ; மயில்தோகை விசிறி . |
| மயிற்பீலிக்குடை | மயிலிறகாற் செய்த குடை . |
| மயிற்றுத்தம் | ஒரு மருந்துவகை . |
| மயிற்றோகை | வாலாக நீண்ட மயிலின் இறகு . |
| மயூகம் | அழகு ; நாழிகைவட்டத்தின் ஊசிநிழல் ; கதிர் ; சுடர் ; ஒளி . |
| மயூரகதி | குதிரைநடை ஐந்தனுள் ஒன்று . |
| மயூரகம் | மயில் ; மருந்துவகை ; நாயுருவிச்செடி ; நாய்வேளைப்பூண்டு ; காண்க : மயூரகதி ; செடிவகை . |
| மயூரம் | மயில் ; சிறுமரம் ; ஆசனவகை ; காண்க : மயூரகதி ; செடிவகை . |
| மயூராரி | பல்லி ; பச்சோந்தி . |
| மயேச்சுரன் | சிவபிரான் ; யாப்பிலக்கண நூலாசிரியருள் ஒருவர் . |
| மயேசன் | சிவபிரான் . |
| மயேசுரன் | சிவபிரான் . |
| மயேசுவரன் | சிவபிரான் . |
| மயேசுவரி | பார்வதி . |
| மயேடம் | இலவம்பிசின் . |
| மயேந்திரசாலம் | மாயவித்தைகளுள் ஒன்று ; வியத்தகு செயல் செய்யும் வித்தை . |
| மயேனம் | வால்மிளகு . |
| மர்க்கடகம் | பெருங்காயம் . |
| மர்க்கடம் | குரங்கு . |
| மர்க்கடமுட்டி | குரங்குப்பிடி . |
| மர்த்தித்தல் | காண்க : மத்தித்தல் . |
| மர்த்தியம் | நிலவுலகம் . |
| மர்மம் | காண்க : மருமம் . |
| மரக்கண் | காண்க : மரக்கணு ; புலனற்ற கண் ; மரப்பாவையின் கண் . |
| மரக்கணு | மரத்தில் கிளையுண்டாகும் முடிச்சு . |
| மரக்கரி | அடுப்புக்குப் பயன்படும் கரி . |
| மரக்கலம் | கப்பல் . |
| மரக்கறி | காய்கறி ; சமைத்த காய்கறியுணவு . |
| மரக்கன்று | இளமரம் . |
| மரக்கா | பூஞ்சோலை ; ஓர் அளவுவகை . |
| மரக்காயர் | தமிழ்த் துலுக்கவகையினர் ; மரக்கலம் ஓட்டுபவர் . |
| மரக்கால் | முகத்தலளவைக் கருவி ; ஓர் அளவு வகை ; ஒரு மரக்கால் விதைப்பாடு ; ஒரு குறுணி ; ஆண்டுமழையின் அளவு ; மரத்தாற் செய்த பாதம் ; திருமால் கூத்துவகை ; கொற்றவை மரத்தால் செய்த காலைக்கொண்டு ஆடிய கூத்து ; உப்பளம் ; ஆயிலியநாள் ; சோதிநாள் . |
| மரக்காலாடல் | கொற்றவை மரத்தால் செய்த காலைக்கொண்டு ஆடிய கூத்து . |
| மரக்காழ் | மரவயிரம் . |
| மரக்காளான் | மரத்தில் முளைக்கும் காளான் வகை . |
| மரக்காற்கூத்து | திருமால் கூத்து ; காண்க : மரக்காலாடல் . |
| மரக்கானாரை | நாரைவகை . |
| மரக்கோவை | காண்க : மரக்கலம் . |
| மரகதக்குணம் | நெய்த்தல் , கிளிக்கழுத்தொத்தல் , மயிற்கழுத்தொத்தல் , பயிரிற் பசுத்தல் , பொன்மையுடன் பசுத்தல் , பத்திபாய்தல் , பொன்வண்டின் வயிறொத்தல் , தெளிதல் என்னும் எட்டுவகைப் பச்சைமணிக்குணம் . |
| மரகதக்குற்றம் | கருகல் , வெள்ளை , கல் , மணல் , கீற்று , பொரிவு , தராசம் , இறுகுதல் என்னும் எண்வகையான பச்சைமணிக் குற்றம் . |
| மரகதநாயகம் | நடுவிற் பச்சைக்கல் வைத்து இழைத்த காலாழிவகை . |
| மரகதப்பச்சை | நாகப்பச்சை . |
| மரகதம் | ஒன்பதுவகை மணியுள் ஒன்றான பச்சைமணி ; பச்சைநிறம் . |
| மரகதமேனியன் | திருமால் . |
| மரகதவல்லி | பார்வதி ; அறக்கடவுள் . |
| மரகதன் | குபேரன் . |
| மரங்கொத்தி | ஒரு பறவைவகை . |
| மரச்சக்கை | சிறாய் . |
| மரச்செவி | மரப்பாவையின் காது ; சற்றுங் கேளாத காது . |
| மரச்செறிவு | சோலை . |
| மரணக்கொடி | இறப்பச்சம் . |
| மரணசனி | சாவைக் குறிப்பதும் வாழ்நாளுள் மூன்றுமுறை வருவதுமான ஏழரையாண்டுச் சனி . |
| மரணசாசனம் | சாகுந்தறுவாயில் ஒருவன் தன் சொத்தைப் பிரித்துக் கொடுப்பதைக் குறித்து எழுதிவைக்கும் ஆவணம் , இறுதிமுறி . |
| மரணதண்டணை | உயிர்நீக்குமாறு கொடுக்கப்படும் தூக்குத்தண்டனை . |
| மரணம் | சாவு ; ஐவகை அவத்தையுள் மிகு மயக்கமும் அயர்ச்சியும் உண்டாகும் நிலை . |
| மரணயோகம் | கெடுதியை விளைவிக்கும் யோகவகை ; தீங்கைக் குறிக்கும் வேளை . |
| மரணவாக்குமூலம் | சாவு நேர்வதாகக் கருதப்படுங் காலத்தில் கொடுக்கும் உறுதிமொழி . |
| மரணவேதனை | சாகும்வேளையிற் படும் அவத்தை . |
| மரணித்தல் | சாதல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 849 | 850 | 851 | 852 | 853 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மயிற்கொன்றை முதல் - மரணித்தல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, செய்த, சிவபிரான், செடிவகை, மரக்கலம், திருமால், கூத்து, மயூரகதி, என்னும், காது, அளவு, சாவு, கொற்றவை, பசுத்தல், மரக்கால், காலைக்கொண்டு, மரத்தால், மரக்காலாடல், ஆடிய, மரக்கணு, குடை, மயில்தோகை, பச்சோந்தி, மயிலின், மரவகை, விசிறி, மருந்துவகை, மரப்பாவையின், பார்வதி, மயில், ஒன்று, மரத்தில்

