தமிழ் - தமிழ் அகரமுதலி - மரணை முதல் - மருக்கட்டி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| மரணை | சாதல் ; நினைவு ; உணர்ச்சி . |
| மரத்தல் | காண்க : மரத்துப்போதல் . |
| மரத்தார் | பகுத்தறிவில்லாதவர் . |
| மரத்துப்பால் | கள் . |
| மரத்துப்போதல் | கால் முதலியன உணர்ச்சியற்றுப்போதல் ; விறைத்தல் ; திகைத்தல் . |
| மரத்தோல் | காண்க : மரப்பட்டை , மரவுரி . |
| மரந்தம் | பூந்தேன் . |
| மரந்தலை ஆயக்கட்டு | ஊரிலுள்ள மரங்களின் விவரங்குறிக்கும் பட்டி . |
| மரநாய் | விலங்குவகை . |
| மரப்பட்டை | மரத்தின்மேலுள்ள தோல் . |
| மரப்பத்தல் | இறைமரம் . |
| மரப்பந்தர் | சோலை . |
| மரப்பாச்சி | சிறுவர் விளையாட்டுக்குரிய மரப் பொம்மை . |
| மரப்பாவை | சிறுவர் விளையாட்டுக்குரிய மரப் பொம்மை . |
| மரப்புணை | மரத்தால் செய்யப்பட்ட தெப்பம் . |
| மரப்பெட்டி | மரத்தாலான பெட்டி . |
| மரப்பொது | சோலை . |
| மரபியல் | முன்னோர் வழங்கிய சொல்வழக்கைக் கூறும் இலக்கணப்பகுதி . |
| மரபினோர் | வழித்தோன்றியவர் ; மூதாதையர் ; ஒரு குடியினர் ; சுற்றத்தார் . |
| மரபு | முறைமை ; சான்றோரின் சொல்வழக்குமுறை ; பழைமை ; வமிசம் ; பாரம்பரியம் ; இயல்பு ; இலக்கணம் ; நல்லொழுக்கம் ; பெருமை ; பாடு ; நியாயம் ; வழிபாடு ; பருவம் . |
| மரபுச்சொல் | ஒன்றற்குத் தொன்றுதொட்டு வழங்கிவரும் பெயர் . |
| மரபுப்பெயர் | ஒன்றற்குத் தொன்றுதொட்டு வழங்கிவரும் பெயர் . |
| மரபுமயக்கம் | தொன்றுதொட்டு வழங்கி வரும் முறைமைக்கு மாறானது . |
| மரபுவழு | தொன்றுதொட்டு வழங்கி வரும் முறைமைக்கு மாறானது . |
| மரபுவழுவமைதி | மரபுவழுவை அமைதியுடையதென்று சான்றோர் அமைத்துக்கொள்வது . |
| மரபுளோர் | காண்க : மரபினோர் . |
| மரம் | உள்வயிரமுள்ள தாவரம் ; அறுக்கப்பட்ட மரம் ; மூலிகை ; தொழுமரம் ; மரக்கலம் ; காண்க : இயமரம் ; உழுத வயலைச் சமப்படுத்தும் பலகை . |
| மரமஞ்சள் | ஒரு கொடிவகை . |
| மரமுலை | ஆண் பெண்ணுருக் கொள்ளும்போது கட்டிக்கொள்ளும் பொய்ம்முலை . |
| மரமேறி | கள் இறங்குவதற்குத் தென்னை , பனை முதலிய மரமேறுஞ் சாணான் . |
| மரயம் | புளியம்புறணி . |
| மரல் | சிறு செடிவகை . |
| மரல்மஞ்சி | மரல்நார் . |
| மரலுகம் | குங்குமப்பூ . |
| மரவட்டணம் | மரத்தட்டு ; நெடும்பரிசை . |
| மரவட்டை | பூச்சிவகை ; மரவகை . |
| மரவடி | பாதக்குறடு . |
| மரவம் | குங்குமமரம் ; வெண்கடம்பு ; மரவகை . |
| மரவள்ளி | ஒரு செடிவகை . |
| மரவாடி | மரக்கடை . |
| மரவாணி | மரத்தாலாகிய ஆணி . |
| மரவிடை | பயன்தரும் மரம் ; பத்திரம் எழுதுவோர் விற்கும் நிலத்திலுள்ள மரங்களைக் குறிக்கும் சொல் . |
| மரவினைஞர் | தச்சர் . |
| மரவினையாளர் | தச்சர் . |
| மரவுப்பு | ஓர் உப்புவகை . |
| மரவுரல் | மரத்தாலான உரல் . |
| மரவுரி | மரப்பட்டையால் செய்த ஆடை ; முனிவர் உடுக்கும் மரப்பட்டை ஆடைவகை ; மரவகை ; காண்க : சீரகம் . |
| மரவை | மரத்தாலான பாண்டம் . |
| மராட்டம் | புறமயிர் ; பெண்மயிர் ; மகாராட்டிர மாநிலம் ; இடம் . |
| மராடி | மரத்தின் அடிப்பகுதி ; பாதுகை . |
| மராம் | வெண்கடப்பமரம் ; கடப்பமரம் ; காண்க : செங்கடம்பு . |
| மராமத்திலாகா | பொதுப்பணித்துறை . |
| மராமத்து | கட்டடம் முதலியவற்றின் சீர்திருத்த வேலை . |
| மராமரம் | அரசமரம் ; ஆச்சாமரம் . |
| மராளம் | அன்னம் ; பூநாரை ; பாம்பு ; மாதுளை . |
| மரிச்சம் | மாமரம் . |
| மரிசம் | மிளகு . |
| மரிசி | புது வரம்புவழி ; செடி . |
| மரிசிதம் | பொறுமை . |
| மரிசு | வரம்பு ; வரம்பருகு . |
| மரித்தல் | சாதல் ; நினைத்தல் . |
| மரியவர் | பின்பற்றி நடப்பவர் . |
| மரியாதை | சிறப்பான நடக்கை ; சாதியொழுக்கம் ; நேர்மையான ஒழுக்கம் ; நீதி ; விதம் ; வரம்பு ; நன்கொடை . |
| மரியாதைக்காரன் | நல்லொழுக்கமுள்ளவன் ; சிறப்பித்தற்குரியவன் . |
| மரியாதைப்பிழை | மதிப்புக் குறைவான நடத்தை . |
| மரீசம் | காண்க : மரிசம் . |
| மரீசி | பிரமன் புதல்வர்களுள் ஒருவரான முனிவர் ; மிளகு ; கதிர் ; வரம்பு . |
| மரீசிகை | கானல் . |
| மரீசினம் | வால்மிளகு . |
| மரு | மணம் ; மருக்கொழுந்து , ஒரு மணச்செடி ; மணமகனுக்குப் பெண்வீட்டார் இடும் முதல் விருந்து ; இடம் ; நீரும் நிழலுமற்ற இடம் ; மலை . |
| மருக்கட்டி | மச்சம் ; பாலுண்ணி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 850 | 851 | 852 | 853 | 854 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மரணை முதல் - மருக்கட்டி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, தொன்றுதொட்டு, மரவகை, இடம், மரத்தாலான, மரப்பட்டை, வரம்பு, மரம், முறைமைக்கு, வரும், செடிவகை, மாறானது, தச்சர், மிளகு, மரிசம், முனிவர், வழங்கி, வழங்கிவரும், சிறுவர், விளையாட்டுக்குரிய, சோலை, மரவுரி, மரத்துப்போதல், மரப், பொம்மை, சாதல், சொல், ஒன்றற்குத், மரபினோர், பெயர்

