முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » மந்திரமாலிகை முதல் - மயானக்கிரியை வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - மந்திரமாலிகை முதல் - மயானக்கிரியை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| மந்திரமாலிகை | காண்க : திருமந்திரம் . |
| மந்திரமாலை | காண்க : திருமந்திரம் . |
| மந்திரமூர்த்தி | மந்திரநாயகன் ; மந்திரவடிவமான கடவுள் ; மந்திரசித்தியால் பேயோட்டுதல் முதலியன செய்பவன் . |
| மந்திரர் | அமைச்சர் . |
| மந்திரவாதி | மந்திரவித்தைக்காரன் ; மந்திரசித்தியால் பேயோட்டுதல் முதலியன செய்பவன் . |
| மந்திரவித்தை | ஒரு தேவதையை அதற்குரிய மந்திரத்தால் வழிபடுகை ; மந்திரங்களைப் பற்றிய வித்தை ; மாயவித்தை . |
| மந்திரவிதி | மந்திரம் பயன்படுத்தும் முறை . |
| மந்திரவீதி | மாடவீதி . |
| மந்திரவோலை | அரசன் திருமுகம் . |
| மந்திராலோசனை | அரசன் அமைச்சர்களுடன் ஆராய்கை . |
| மந்திரி | அமைச்சன் ; வியாழன் ; சுக்கிரன் ; குபேரன் ; வரும்பொருள் உரைப்போன் ; படைத்தலைவன் ; புதன் ; பித்தம் ; காண்க : திராய் . |
| மந்திரித்தல் | மந்திர ஆற்றலால் அடக்குதல் ; மந்திரத்தால் சக்தியுண்டாகச்செய்தல் ; மந்திரத்தால் தியானித்தல் ; ஆலோசித்தல் ; மந்திரஞ்செபித்தல் ; தீயுரைசொல்லுதல் . |
| மந்தினி | தயிர்கடை தாழி ; காண்க : ஆடுதின்னாப்பாளை . |
| மந்து | அரசன் ; மனிதன் ; குற்றம் ; நாய்வேளைப் பூண்டு ; காண்க : மந்துகால் . |
| மந்துகால் | யானைக்கால்நோய் . |
| மந்துரம் | குதிரைப்பந்தி ; குதிரைச்சாலை ; தொழுவம் ; படுக்கை . |
| மந்துரை | குதிரைப்பந்தி ; குதிரைச்சாலை ; தொழுவம் ; படுக்கை . |
| மந்தை | ஆடுமாடுகளின் கூட்டம் ; பொதுமேய்ச்சலிடம் ; ஊர்ப்பொது வெளியிடம் ; சட்டையின் பின்பக்கத்து ஒட்டுத்துணி . |
| மந்தைக்கல் | காண்க : ஆவுரிஞ்சுதறி . |
| மந்தைமறித்தல் | மந்தையைக் காத்தல் . |
| மந்தையன் | அறிவுமழுங்கியவன் . |
| மந்தைவெளி | மேய்ச்சல்நிலம் ; கால்நடையை அடைத்துவைக்கும் அடைப்பிடம் . |
| மப்பன் | காண்க : மந்தையன் . |
| மப்பு | மேகமூட்டம் ; செரியாமை ; மயக்கம் ; மட்டித்தனம் ; செருக்கு . |
| மப்புமந்தாரம் | மேகமூட்ட நிலை . |
| மம்மட்டி | மண்வெட்டி ; சிற்றாமுட்டிச்செடி . |
| மம்மர் | அறியாமையாகிய மயக்கம் ; துயரம் ; கல்லாமை ; காமம் . |
| மம | நற்பேறு ; நீர் ; என்னுடைய . |
| மமகாரம் | செருக்கு . |
| மமதை | செருக்கு . |
| மயக்கடி | மயக்கம் ; குடிவெறி . |
| மயக்கம் | அறிவின் திரிபு ; அவித்தை ; பிழைபட உணர்கை ; விரகநோய் ; மூர்ச்சை ; படைப்பில் அலித்தன்மை முதலிய கலப்பு ; கூடல் ; கலப்பு ; எழுத்துப்புணர்ச்சி ; சாவுச்சடங்கினுள் ஒன்று ; சோம்பேறித்தனம் . |
| மயக்கவணி | ஒற்றுமைபற்றி ஒரு பொருளை வேறொரு பொருளென மயங்குவதாகக் கூறும் அணி . |
| மயக்கிடை | காண்க : மயக்கம் . |
| மயக்கிமாலை | தந்திரக்காரி , விரகி . |
| மயக்கு | காண்க : மயக்கம் ; போர்செய்கை ; வியக்கச்செய்யும் செயல் . |
| மயக்குதல் | மனங்குழம்பச் செய்தல் ; மலைக்கச் செய்தல் ; தன்வயமிழக்கச் செய்தல் ; கலத்தல் ; சேர்த்தல் ; சிதைத்தல் ; நிலைநெகிழ்த்துதல் ; ஊடல் உணர்த்துதல் ; மூர்ச்சையடையச் செய்தல் . |
| மயங்கக்கூறல் | நூற்குற்றம் பத்தனுள் இன்னது என்று துணியக்கூடாமற் கூறும் குற்றம் . |
| மயங்கவைத்தல் | நூற்குற்றம் பத்தனுள் இன்னது என்று துணியக்கூடாமற் கூறும் குற்றம் . |
| மயங்கியோர் | அறிவுதிரிந்தோர் . |
| மயங்குகால் | சுழல்காற்று . |
| மயங்குதல் | மருளுதல் ; தன்னை மறத்தல் ; வெறிகொள்ளுதல் ; மாறுபடுதல் ; நிலையழிதல் ; வருந்துதல் ; தாக்கப்படுதல் ; ஐயுறுதல் ; தயங்குதல் ; கலத்தல் ; போலுதல் ; நெருங்குதல் ; கைகலத்தல் ; அறிவுகெடுதல் ; கலக்கமுறுதல் ; உணர்ச்சியிழத்தல் . |
| மயங்குதிணைநிலைவரி | வரிப்பாட்டுவகை . |
| மயத்தல் | மயங்குதல் . |
| மயம் | அழகு ; தன்மை ; நிறைவு ; சொத்து ; பொருள் ; மகிழ்ச்சி ; செருக்கு ; கோமயம் ; ஒட்டகம் . |
| மயர் | மயக்கம் . |
| மயர்தல் | மயங்குதல் , உணர்வறுதல் ; சோர்தல் ; திகைத்தல் . |
| மயர்வு | அறியாமை ; சோர்வு ; அறிவுமயக்கம் . |
| மயரி | உன்மத்தன் ; காமுகன் ; அறிவீனன் . |
| மயல் | மயக்கம் ; பைத்தியம் ; ஆசை ; காமவிருப்பு ; மாயை ; ஐயம் ; அச்சம் ; செத்தை ; நெருப்பு ; மந்தம் ; பிசாசம் . |
| மயற்கை | செத்தை ; மயக்கம் . |
| மயற்பகை | பித்து ; பித்துக்குக் காரணமாகிய மருந்து . |
| மயன் | தச்சன் ; சிற்பி ; அசுரத்தச்சன் ; கின்னரன் . |
| மயானக்கரை | காண்க : மயானம் . |
| மயானக்கிரியை | ஈமச்சடங்கு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 847 | 848 | 849 | 850 | 851 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மந்திரமாலிகை முதல் - மயானக்கிரியை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, மயக்கம், செய்தல், செருக்கு, குற்றம், கூறும், அரசன், மந்திரத்தால், மயங்குதல், கலப்பு, செத்தை, துணியக்கூடாமற், இன்னது, பத்தனுள், நூற்குற்றம், கலத்தல், படுக்கை, முதலியன, பேயோட்டுதல், மந்திரசித்தியால், திருமந்திரம், செய்பவன், மந்துகால், தொழுவம், குதிரைச்சாலை, குதிரைப்பந்தி, மந்தையன்

