தமிழ் - தமிழ் அகரமுதலி - மதிநெறி முதல் - மதுரேசன் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| மதிநெறி | சந்திரமரபு . |
| மதிப்ப | ஓர் உவம வாய்பாடு . |
| மதிப்பகை | இராகு . |
| மதிப்பாகம் | பிறைச்சந்திரன் . |
| மதிப்பாகு | பிறைச்சந்திரன் . |
| மதிப்பிள்ளை | பிறைச்சந்திரன் . |
| மதிப்பிளவு | பிறைச்சந்திரன் . |
| மதிப்பு | அளவிடுகை ; சிறப்பிக்கை ; கருத்து ; கடைகை ; கொழுத்திருக்கை . |
| மதிமகன் | புதன் . |
| மதிமண்டலம் | புருவமத்தி ; நாபித்தானம் ; உச்சித்துளையின் நுனிப்பகுதி . |
| மதிமணல் | வெள்ளிமணல் . |
| மதிமயக்கம் | புத்திமாறாட்டம் . |
| மதிமான் | புத்திமான் . |
| மதிமுகம் | சந்திரன்போன்ற முகம் ; மந்திர வித்தைவகை . |
| மதிமேகக்கல் | குருவிந்தக்கல் . |
| மதிமை | அறிவு . |
| மதிமோசம் | அறிவின்மை . |
| மதியங்கு | ஒரு மணப்பண்டவகை . |
| மதியந்திரும்புதல் | பொழுதுசாய்தல் . |
| மதியப்பூப்பு | சந்திரோதயம் . |
| மதியம் | சந்திரன் ; முழுநிலா ; மாதம் ; நடு ; மத்தியானம் ; மதிப்பு . |
| மதியாணி | காண்க : பகலாணி , நுகத்தின் நடுவாணி . |
| மதியாணிக்கட்டை | காண்க : பகலாணி , நுகத்தின் நடுவாணி . |
| மதியிலி | அறிவில்லாதவர் ; அறிவற்றது . |
| மதியீனம் | புத்திக்குறைவு . |
| மதியுடம்படுதல் | தலைவி தலைவன் கருத்தோடு இணங்கியவளாதல் ; தலைவன் தலைவியர் இருவர்க்கும் கூட்டமுண்மையை அவர்தம் கருத்தொற்றுமைபற்றித் தோழியுணர்தல் . |
| மதியுணி | இராகு . |
| மதியுப்பு | வளையலுப்பு ; காண்க : இந்துப்பு . |
| மதியையழைத்தல் | காண்க : அம்புலிப்பருவம் . |
| மதிரம் | கள் . |
| மதிரை | கள் . |
| மதில் | கோட்டைச்சுவர் ; சுவர் ; சுவரின் மேற்கட்டு ; இஞ்சி . |
| மதிலரண் | நால்வகை அரண்களுள் ஒன்று . |
| மதிலுண்மேடை | கொத்தளம் . |
| மதிவல்லோர் | அறிவாளர் ; அமைச்சர் . |
| மதிற்சுற்று | சுற்றுமதில் ; பிராகாரம் . |
| மதிற்சூட்டு | கோட்டைமதிலின் தலையீடான உறுப்பு . |
| மதின்மரம் | கோட்டைமதிலின் கதவிலிடுங் கணையமரம் . |
| மதினி | காண்க : மதனி ; மைத்துனி ; மாமன் மகளிருள் தனக்கு மூத்தவள் . |
| மது | தேன் ; கள் ; இலுப்பைப்பூ முதலியவற்றினின்று வடிக்கும் செய்நீர் ; மகரந்தம் ; இனிமை ; நீர் ; அமுதம் ; பால் ; இளவேனில் ; அசோகமரம் ; காண்க : அதிமதுரம் ; திருமாலால் கொல்லப்பட்ட ஓர் அசுரன் . |
| மதுகந்தம் | இருப்பைமரம் ; மகிழமரம் . |
| மதுகம் | வண்டு ; செடிவகை ; தித்திப்பு ; தரா என்னும் உலோகம் ; இருப்பைமரம் ; மதிரை ; எட்டிமரம் ; அழகு . |
| மதுகரம் | தேனீ ; ஆண்வண்டு ; கள் ; வச்சநாபி ; எட்டிமரம் . |
| மதுகரன் | அன்பன் . |
| மதுகை | அறிவு ; வலிமை . |
| மதுங்குதல் | இனிமையாதல் . |
| மதுசகன் | வசந்தனின் நண்பனான மன்மதன் . |
| மதுசூதனன் | மதுவென்னும் அசுரனைக் கொன்ற திருமால் . |
| மதுசூதன் | மதுவென்னும் அசுரனைக் கொன்ற திருமால் . |
| மதுத்தண்டு | கள்ளடைக்கும் மூங்கிற்குழாய் . |
| மதுத்திருமணம் | கரும்பு . |
| மதுப்பிரமேகம் | நீரிழிவு . |
| மதுபதி | காளி ; பார்வதி . |
| மதுபம் | கள் ; வண்டு . |
| மதுபர்க்கம் | தேன் ; பழம் ; பால் முதலியவற்றோடு கூடிய உணவு . |
| மதுபருக்கம் | தேன் ; பழம் ; பால் முதலியவற்றோடு கூடிய உணவு . |
| மதுபானம் | கள் ; கட்குடிக்கை . |
| மதுபானி | கட்குடியன் . |
| மதுமா | மாமரம் . |
| மதுமாமிசம் | கள்ளும் இறைச்சியும் . |
| மதுரகவி | நாற்கவிகளுள் இனிமை பெருகப்பாடுங் கவி ; சொற்சுவை ; பொருட்சுவை முதலியன நிரம்பிய பாட்டு ; பன்னிருஆழ்வாருள் ஒருவர் . |
| மதுரகிரந்தம் | இனிய நூல் . |
| மதுரசம் | கரும்பு ; காண்க : கொடிமுந்திரிகை ; சாராயம் ; இனிமை ; பேரீந்து ; பனை . |
| மதுரம் | இனிமை ; நாற்கவிகளுள் இனிமை பெருகப் பாடுங் கவி ; இன்குணம் ; சமனிசை ; செடிவகை ; காண்க : கொடிமுந்திரிகை ; செஞ்சந்தனமரம் ; முளை ; நஞ்சு ; எட்டிமரம் ; துத்தநாகம் . |
| மதுரவசனம் | இனிமையாகப் பேசுந் திறமை ; வாய்ப்பாட்டு . |
| மதுரவள்ளி | கொம்மட்டிக்கொடி ; சருக்கரை ; வள்ளிக்கொடி . |
| மதுரவாக்கு | இன்சொல் . |
| மதுரித்தல் | தித்தித்தல் ; செவிக்கினியவாதல் ; இனிப்பாகச் செய்தல் . |
| மதுரேசன் | கண்ணபிரான் ; பாண்டியன் ; மதுரையிற் கோயில்கொண்டிருக்குஞ் சோம சுந்தரக் கடவுள் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 845 | 846 | 847 | 848 | 849 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மதிநெறி முதல் - மதுரேசன் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, இனிமை, பிறைச்சந்திரன், எட்டிமரம், தேன், பால், கொன்ற, மதுவென்னும், அசுரனைக், திருமால், பழம், நாற்கவிகளுள், கொடிமுந்திரிகை, உணவு, கூடிய, முதலியவற்றோடு, கரும்பு, இருப்பைமரம், நுகத்தின், பகலாணி, அறிவு, மதிப்பு, நடுவாணி, தலைவன், வண்டு, இராகு, கோட்டைமதிலின், மதிரை, செடிவகை

