தமிழ் - தமிழ் அகரமுதலி - மதமத்தம் முதல் - மதிநுட்பம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| மதமத்தம் | ஒரு செடிவகை . |
| மதமத்தன் | மதத்தினால் மயங்கிக் கிடப்போன் . |
| மதமத்தை | ஒரு செடிவகை . |
| மதமதக்கத்தாழி | முதுமக்கட்டாழி . |
| மதமதப்பு | உணர்ச்சியின்மை ; திமிர் ; செழிப்பு . |
| மதமதர்த்தல் | களிப்பு மிகுதல் . |
| மதமதெனல் | மதமுறுதற்குறிப்பு ; உடல் உறுப்பு மரத்துப்போதற்குறிப்பு ; செழித்து வளர்தற்குறிப்பு ; நீர் குடிக்கும்போதுண்டாகும் ஒலிக்குறிப்பு ; விரைவுக்குறிப்பு . |
| மதமலை | யானை . |
| மதமொய் | யானை . |
| மதர் | மிகுதி ; செருக்கு ; மகிழ்ச்சி ; வீரம் ; பாய்ச்சல் ; மதநீர் . |
| மதர்த்தல் | செழித்தல் ; மரஞ்செடி முதலியன பயனறும்படி மிதமிஞ்சிக் கொழுத்தல் ; மதங்கொள்ளுதல் ; செருக்குதல் ; களித்தல் ; மிகுதல் . |
| மதர்ப்பு | செழிப்பு ; இறுமாப்பு ; உள்ளக்களிப்பு ; ஆசைப்பெருக்கம் ; அழகு ; வலிமை ; மிகுதி ; புலவி ; இடம் ; பூமி . |
| மதர்வு | செழிப்பு ; இறுமாப்பு ; உள்ளக்களிப்பு ; ஆசைப்பெருக்கம் ; அழகு ; வலிமை ; மிகுதி ; புலவி ; இடம் ; பூமி . |
| மதர்வை | மயக்கம் ; செழிப்பு ; செருக்கு ; களிப்பு . |
| மதரணி | ஒளிமிக்க அணிகலன் . |
| மதலிகை | அணிகலத்தொங்கல் ; அலங்காரத்தொங்கல் . |
| மதலை | மகன் ; குழந்தை ; மழலைமொழி ; பாவை ; பற்றுக்கோடு ; தூண் ; வேள்வித்தூண் ; வீட்டின் கொடுங்கை ; பற்று ; மரக்கலம் ; கொன்றைமரம் ; காண்க : சரக்கொன்றை . |
| மதலைக்கிளி | இளங்கிளி . |
| மதலைத்தூக்கு | இருசீருடைய இசைத்தூக்கு . |
| மதலைப்பள்ளி | கொடுங்கையைத் தாங்கும் பலகையாகிய கபோதகத்தலை . |
| மதவலி | மிகுவலி ; மிக்க வலிவுடையவன் ; முருகன் . |
| மதவாதி | சமயவாதஞ் செய்வோன் . |
| மதவு | வலிமை ; அழகு ; மிகுதி ; மடமை ; மதகு . |
| மதளை | மழலைமொழி . |
| மதன் | அழகு ; மாட்சிமை ; மிகுதி ; செருக்கு ; வலிமை ; மதவெழுச்சி ; மடமை ; கலக்கம் ; மன்மதன் . |
| மதன்றாய் | மன்மதன் தாயாகிய திருமகள் . |
| மதனகீதம் | காமப்பாடல் . |
| மதனபாடகம் | காமத்தைத் தூண்டும் பாட்டினை உடையதான குயில் . |
| மதனம் | காமம் ; மன்மதன் கணைகளுள் புணர்ச்சி விருப்பத்தைத் தருவது ; பெருமிதம் ; இளவேனில் ; வசந்தகாலம் ; தேனீ ; தேன்மெழுகு ; காண்க : மருக்காரை ; கடைகை ; அழிக்கை ; மனக்கலக்கம் ; மௌனம் ; கடல் மீன்வகை . |
| மதனல¦லை | காமவிளையாட்டு . |
| மதனவேள் | மன்மதன் . |
| மதனன் | மன்மதன் ; காமுகன் . |
| மதனாங்குசம் | பெண்குறி ; நகம் . |
| மதனாலயம் | தாமரை ; பெண்குறி . |
| மதனாவத்தை | பிரிவுத்துயர் . |
| மதனி | அண்ணன் மனைவி . |
| மதனைவென்றோன் | அருகக்கடவுள் . |
| மதாசாரம் | சமயவொழுக்கம் . |
| மதாணி | கழுத்தணியின் தொங்கல் ; அணிகலன் . |
| மதாபிமானி | சமயப்பற்றுள்ளவன் . |
| மதார் | செருக்கு . |
| மதாரம் | கத்தூரி ; பன்றி ; யானை . |
| மதாலம் | கொன்றைமரம் . |
| மதாவளம் | யானை . |
| மதாளித்தல் | செழித்து வளர்தல் ; பயிர் முதலியன பயன்படாதபடி கொழுத்துக் கெடுதல் . |
| மதி | சந்திரன் ; மாதம் ; ஒன்று என்னும் எண்ணைக் குறிக்கும் குழூஉக்குறி ; இராசி ; குபேரன் ; இடைகலை ; காண்க : மதிநாள் ; மதிஞானம் ; கற்கடகராசி ; இயற்கையறிவு ; பகுத்தறிவு ; வேதத்தின்படி நடத்தல் ; மதிப்பு ; காசியபரின் மனைவி ; அசோகமரம் ; அதிமதுரம் ; ஒரு முன்னிலை யசைச்சொல் ; ஒரு படர்க்கை யசைச்சொல் ; யானை . |
| மதிக்கண்ணியான் | சிவபிரான் . |
| மதிக்கணம் | காண்க : சந்திரகணம் . |
| மதிக்கலை | சந்திரகலை ; பதினாறு . |
| மதிக்கொழுந்து | இளஞ்சந்திரன் . |
| மதிகம் | செடிவகை . |
| மதிகூர்மை | காண்க : இந்துப்பு . |
| மதிகேடன் | அறிவில்லாதவன் . |
| மதிகேடி | அறிவில்லாதவள் . |
| மதிகேடு | புத்திக்குறைவு . |
| மதிச்சடையன் | சந்திரனைச் சடையிலே தரித்த சிவபிரான் . |
| மதிசகன் | சந்திரனது தோழனாகிய மன்மதன் . |
| மதிசூடி | காண்க : மதிச்சடையன் . |
| மதிஞன் | அறிஞன் . |
| மதிஞானம் | இயற்கையறிவு . |
| மதித்தல் | அளவிடுதல் ; பொருட்படுத்துதல் ; கருதுதல் ; தியானித்தல் ; துணிதல் ; கடைதல் ; கொழுத்தல் ; மதங்கொள்ளுதல் ; சாதல் ; உப்புதல் . |
| மதிதம் | மோர் ; தயிர் . |
| மதிதிசை | வடக்கு . |
| மதிநாள் | மிருகசீரிடநாள் . |
| மதிநுட்பம் | இயற்கை நுண்ணறிவு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 844 | 845 | 846 | 847 | 848 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மதமத்தம் முதல் - மதிநுட்பம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, மன்மதன், மிகுதி, யானை, அழகு, செழிப்பு, வலிமை, செருக்கு, செடிவகை, பெண்குறி, மடமை, கொன்றைமரம், மதிஞானம், சிவபிரான், மதிச்சடையன், யசைச்சொல், இயற்கையறிவு, மதிநாள், மழலைமொழி, மனைவி, புலவி, முதலியன, கொழுத்தல், செழித்து, மிகுதல், களிப்பு, மதங்கொள்ளுதல், இறுமாப்பு, பூமி, இடம், ஆசைப்பெருக்கம், உள்ளக்களிப்பு, அணிகலன்

