முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » மணிச்சட்டி முதல் - மத்தங்காய்ப்புல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - மணிச்சட்டி முதல் - மத்தங்காய்ப்புல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| மணிச்சட்டி | விளிம்பில் மணிவடிவாய் அமைந்த மண்சட்டி . |
| மணிச்சிகை | குன்றிமணி . |
| மணிச்செப்பு | மணியிழைத்த செப்பு . |
| மணித்தக்காளி | ஒரு செடிவகை , மணத்தக்காளி . |
| மணிதனு | வானவில் . |
| மணிநா | மணியின் நாக்கு . |
| மணிநிறம் | கருநீலநிறம் . |
| மணிநிறவண்ணன் | திருமால் . |
| மணிநீர் | மணிபோலும் நிறத்தினையுடைய நீர் ; இரத்தினத்திலுள்ள நீர் . |
| மணிப்பாரி | இராக்காவலர்களின் பாட்டுவகை ; அரண்மனைவாயிலில் மணியடித்துக் காவல் புரியும் வேலை . |
| மணிப்பிடிப்பு | நெற்கதிரில் தானியமணி தோன்றுகை . |
| மணிப்பிரவாளம் | மணியும் பவளமும் கலந்தமை போன்று வடமொழியும் தென்மொழியும் கலந்த நடை . |
| மணிப்புறா | ஒரு புறாவகை . |
| மணிபந்தம் | காண்க : மணிக்கட்டு . |
| மணிபந்து | காண்க : மணிக்கட்டு . |
| மணிபிடித்தல் | கதிரில் தானியம் பிடித்தல் . |
| மணிபூரகம் | ஆறு நிலைக்களங்களுள் ஒன்றாகிய நாபித்தானம் . |
| மணிபூரம் | ஆறு நிலைக்களங்களுள் ஒன்றாகிய நாபித்தானம் . |
| மணிமகுடம் | இரத்தினமுடி ; ஏட்டுச் சுவடியைக் கட்டுங் கயிற்றின் தலைமுடிச்சு . |
| மணிமண்டபம் | காண்க : மணிக்கூண்டு ; சபைக்கூடம் . |
| மணிமந்தம் | இந்துப்பு . |
| மணிமலர் | குவளை . |
| மணிமலை | மேருமலை . |
| மணிமாடம் | சிறந்த மாளிகை ; திருநறையூர்த் திருமால்கோயில் . |
| மணிமாலை | முத்துவடம் ; ஒரு நூல்வகை ; திருமகள் ; திருவாசியாகிய பிரபை ; காதலியின் உடலில் காதலனாற் செய்யப்பட்ட பற்குறி . |
| மணிமாளிகை | காண்க : மணிமண்டபம் . |
| மணிமான் | கதிரவன் . |
| மணிமிடைபவளம் | மணியும் பவளமுங் கலந்த அணிகலன் ; அகநானூற்றின் இரண்டாம் பிரிவு . |
| மணிமுடி | இரத்தினகிரீடம் ; இறுகித் திரண்ட முடிச்சு . |
| மணிமேகலாதெய்வம் | இந்திரன் ஏவலால் தீவுகள் சிலவற்றைக் காவல்புரிந்து வந்த தெய்வம் . |
| மணிமேகலை | கோவலனுக்கு மாதவியிடம் பிறந்த மகள் ; சாத்தனார் இயற்றிய நூல் ; காண்க : மணிமேகலாதெய்வம் ; இடையில் அணியும் அணிவகை . |
| மணியக்காரன் | ஊர்க்கோயில் முதலியவற்றைக் கண்காணிப்பவன் ; ஊர்வரி வாங்குவோன் . |
| மணியகாரன் | ஊர்க்கோயில் முதலியவற்றைக் கண்காணிப்பவன் ; ஊர்வரி வாங்குவோன் . |
| மணியச்சட்டம் | அதிகாரம் . |
| மணியம் | ஊர் , கோயில் , மடம் முதலியவற்றை மேற்பார்க்கும் வேலை . |
| மணியம்பலம் | சபைமண்டபம் . |
| மணியரங்கம் | நிலாமுற்றம் . |
| மணியாசிக்கட்டை | சுவர்த்தலத்திற்கு மெருகிடும் பலகை . |
| மணியாசு | சுவர்த்தலத்திற்கு மெருகிடும் பலகை . |
| மணியாசுப்பலகை | சுவர்த்தலத்திற்கு மெருகிடும் பலகை . |
| மணியாட்டி | பூசாரி . |
| மணியாடி | குலகுரு . |
| மணியீரல் | குடலின் ஒரு பகுதி . |
| மணியுயிர் | வீடுபேறடைந்த உயிர் . |
| மணியெண்ணி | நென்மணி எண்ணுபவன் ; இவறலன் . |
| மணிரங்கு | ஒரு பண்வகை . |
| மணிலாக்கொட்டை | நிலக்கடலை . |
| மணிவட்டம் | வீரக்கழல் ; சிலம்பு ; சேகண்டி . |
| மணிவடம் | முத்துமாலை ; இரத்தினமாலை ; அக்கமாலை ; உருத்திராக்கம் முதலிய மணிகளாலான மாலை ; வீரக்கழல் ; பாதசாலம் . |
| மணிவண்ணன் | நீலமணிபோன்ற நிறமுடைய திருமால் . |
| மணிவலை | மீன்பிடிக்கும் ஒரு வலைவகை . |
| மணிவாசல் | அலங்காரத் தலைவாயில் . |
| மணிவினைஞர் | இரத்தின வேலைக்காரர் ; முத்துக்கோப்போர் . |
| மணிவீசம் | மாதுளை . |
| மணீசகம் | காண்க : சந்திரகாந்தக்கல் . |
| மணை | அமரும் பலகை ; சிறுபீடம் ; மணமேடை ; யானைமேற்றவிசு ; பலகை ; வெட்டுக்கருவியின் அடிக்கட்டை ; பாதம் வைக்கும் படி ; பருத்தியினின்று பஞ்சுபிரிக்குங் கருவி ; தேங்காய் துருவலகு ; மழுங்கலாயுதம் ; மழுங்கல் . |
| மத்தகக்குழிவு | மாணிக்கக் குற்றங்களுள் ஒன்று . |
| மத்தகங்குழிதல் | மாணிக்கக் குற்றங்களுள் ஒன்று . |
| மத்தகசம் | மதயானை . |
| மத்தகம் | தலை ; உச்சி ; நெற்றி ; தலைக்கோலம் ; யானையின் தலைநெற்றி ; முகப்பு ; மலைநெற்றி ; தரிசுநிலம் . |
| மத்தகன் | மதிமயங்கியவன் . |
| மத்தகுணம் | மதகுணம் ; யானை . |
| மத்தங்காய் | செஞ்சாமையரிசி ; கடுக்காய் ; பூசணி . |
| மத்தங்காய்ப்புல் | ஒரு புல்வகை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 842 | 843 | 844 | 845 | 846 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மணிச்சட்டி முதல் - மத்தங்காய்ப்புல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, பலகை, மெருகிடும், சுவர்த்தலத்திற்கு, வாங்குவோன், ஊர்வரி, கண்காணிப்பவன், ஒன்று, மாணிக்கக், வீரக்கழல், முதலியவற்றைக், குற்றங்களுள், மணிமேகலாதெய்வம், கலந்த, மணியும், வேலை, நீர், மணிக்கட்டு, நிலைக்களங்களுள், திருமால், மணிமண்டபம், நாபித்தானம், ஒன்றாகிய, ஊர்க்கோயில்

