தமிழ் - தமிழ் அகரமுதலி - ஆதித்தர் முதல் - ஆதுரசாலை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| ஆதிரம் | நெய் ; நெய்ச்சிட்டி . |
| ஆதிரவிச்சிலை | செங்கழுநீர்க்கல் . |
| ஆதிரன் | பெரியோன் . |
| ஆதிரை | திருவாதிரை நாள் ; மணிமேகலைக் காப்பியத்தில் வரும் சாதுவன் மனைவி . |
| ஆதிரை முதல்வன் | சிவன் . |
| ஆதிரையான் | சிவன் . |
| ஆதிவராகம் | பன்றிப் பிறப்பு எடுத்த திருமால் . |
| ஆதிவராகன் | பன்றிப் பிறப்பு எடுத்த திருமால் . |
| ஆதிவாகியம் | நுண்ணுடம்பு . |
| ஆதிவாரம் | ஞாயிற்றுக்கிழமை . |
| ஆதிவிந்து | கார்முகில்பாடாணம் . |
| ஆதிவிராகன் | சோரபாடாணம் . |
| ஆதிவிராட்டியன் | சூதபாடாணம் ; சோரபாடாணம் . |
| ஆதிவேதனிகம் | கணவன் இரண்டாந் தாரம் கொள்ளும்போது மூத்தாளுக்கு உரிமையாக்கும் பொருள் . |
| ஆதீண்டுகுற்றி | ஆவுரிஞ்சுதறி , பசுக்கள் உராய்ந்து தினவு தீர்க்க நடப்படும் கல்தூண் . |
| ஆதீனகர்த்தன் | நிலக்கிழார் . |
| ஆதீனகர்த்தா | சைவ மடாதிபதி . |
| ஆதீனத்தர் | காண்க : ஆதீனகர்த்தா . |
| ஆதீனம் | சைவமடம் ; உரிமை ; வசம் . |
| ஆது | பாகர் யானையைத் தட்டிக் கொடுக்கையில் கூறும் ஒரு குறிப்புச் சொல் ; ஆறாம் வேற்றுமையுருபு ; தெப்பம் . |
| ஆதும் | ஒன்றும் , சிறிதும் . |
| ஆதுமம் | அரத்தை . |
| ஆதுரசாலை | அறச்சாலை . |
| ஆதித்தர் | தேவர் ; பன்னிரு சூரியர் . |
| ஆதிவாரம் | ஞாயிற்றுக்கிழமை . |
| ஆதித்தவாரம் | ஞாயிற்றுக்கிழமை . |
| ஆதித்தன் | சூரியன் ; உவர்மண் . |
| ஆதித்தியம் | விருந்தோம்பல் ; ஒரு சோதிடநூல் . |
| ஆதித்தியன் | சூரியன் ; விருந்தோம்புவோன் . |
| ஆதிதாசர் | சிவபெருமானின் அணுக்கத் தொண்டர் , சண்டேசுவரர் . |
| ஆதிதாளம் | தாளவகை . |
| ஆதிதிராவிடர் | தமிழகப் பழங்குடி மக்கள் . |
| ஆதிதேயம் | உண்டி , நீர் முதலியன அளித்து வழிபடல் . |
| ஆதிதேயன் | விருந்தினரைப் போற்றுவோன் ; தேவன் . |
| ஆதிதேவன் | கடவுள் . |
| ஆதிதைவிகம் | தெய்வத்தால் வருந்துன்பம் . |
| ஆதிநாடி | ஆதாரமாயுள்ள நாடி . |
| ஆதிநாதர் | நவநாத சித்தருள் ஒருவர் ; முதல் தீர்த்தங்கரராகிய விருஷபதேவர் . |
| ஆதிநாதன் | கடவுள் . |
| ஆதிநாராயணன் | திருமால் ; வயிரக்கல் . |
| ஆதிநாள் | வாரத்தின் முதல் நாளாகிய ஞாயிற்றுக்கிழமை . |
| ஆதிநித்தியர் | படைக்கப்பட்டும் ஒரு நாளும் அழியாதவர் . |
| ஆதிநூல் | முதனூல் ; வேதம் . |
| ஆதிபகவன் | கடவுள் . |
| ஆதிபத்தியம் | தலைமை ; இராசிச் சக்கரத்துள் குறிப்பிட்ட வீட்டுக்குடையவன் . |
| ஆதிபரன் | கடவுள் . |
| ஆதிபலம் | சாதிக்காய் . |
| ஆதிபன் | இறைவன் . |
| ஆதிபுங்கவன் | கடவுள் ; அருகன் . |
| ஆதிபுரி | திருவொற்றியூர் . |
| ஆதிபூதன் | பிரமன் , முன்பிறந்தவன் , முன்னுள்ளவன் . |
| ஆதிபூமி | திருமண வேள்வி நடத்தும் இடம் . |
| ஆதிபௌதிகம் | பஞ்ச பூதங்களாலும் தன்னை ஒழிந்த உயிரினங்களாலும் உண்டாகும் துன்பம் . |
| ஆதிமகாகுரு | துரிசு . |
| ஆதிமகாநாதம் | உலோகமணல் . |
| ஆதிமடக்கு | அடியின் முதலில் சொல் மடங்கி வருவது . |
| ஆதிமருந்து | திரிகடுகம் ; சுக்கு , மிளகு , திப்பிலி . |
| ஆதிமலை | இமயமலை . |
| ஆதிமீன் | காண்க : அசுவினி . |
| ஆதிமுத்தன் | ஆணவமலம் மட்டும் உள்ள ஆன்மா . |
| ஆதிமூர்த்தி | முதற் கடவுள் . |
| ஆதிமூலபுத்தகம் | அரிச்சுவடி . |
| ஆதிமூலம் | முதற்காரணம் , மூலகாரணமானது . |
| ஆதிமொழி | முதன்மொழி , தமிழ்மொழி ; வடமொழி . |
| ஆதியங்கடவுள் | முதற்கடவுள் ; அருகன் . |
| ஆதியந்தகாலநாடி | நாழிகை விநாடிகளில் சொல்லிய கிரகணத்தின் கால அளவு . |
| ஆதியந்தகாலம் | நாழிகை விநாடிகளில் சொல்லிய கிரகணத்தின் கால அளவு . |
| ஆதியந்தணன் | பிரமதேவன் . |
| ஆதியந்தம் | முதலும் முடிவும் , அடிமுடி . |
| ஆதியரிவஞ்சம் | போகபூமிவகை . |
| ஆதியாகமம் | பகுசுருதியாகமம் ; விவிலிய நூலில் முதற்பகுதி . |
| ஆதியாமம் | சங்கஞ்செடி . |
| ஆதியூழி | கிருதயுகம் . |
| ஆதியெழுத்து | முதலெழுத்துகள் ; உயிர் 12 , மெய் 18 . |
| ஆதிரசாலை | காண்க : ஆதுலர்சாலை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 82 | 83 | 84 | 85 | 86 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆதித்தர் முதல் - ஆதுரசாலை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், கடவுள், ஞாயிற்றுக்கிழமை, காண்க, சொல், திருமால், அருகன், நாழிகை, அளவு, கிரகணத்தின், சொல்லிய, விநாடிகளில், சூரியன், சோரபாடாணம், சிவன், ஆதிரை, பன்றிப், பிறப்பு, ஆதிவாரம், எடுத்த, ஆதீனகர்த்தா

