தமிழ் - தமிழ் அகரமுதலி - ஆத்தாடி முதல் - ஆதரணை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| ஆதம் | அன்பு ; ஆதரவு ; கூந்தற்பனை . |
| ஆதம்பேதி | செப்புநெருஞ்சில் பூண்டு . |
| ஆதமிலி | ஆதரவற்றவன் , திக்கற்றவன் . |
| ஆதர் | அறிவில்லாதவர் ; குருடர் . |
| ஆதரணை | ஆதரவு . |
| ஆத்திகம் | கடவுள் உண்டென்னும் கொள்கை ; யானைக்கூட்டம் . |
| ஆத்திகன் | கடவுள் உண்டென்னும் கொள்கை உடையவன் . |
| ஆத்திசூடி | ஆத்திமாலை சூடிய சிவபெருமான் ; ஔவையார் செய்த நீதிநூல்களுள் ஒன்று . |
| ஆத்திசூலை | குதிரை நோய்வகை . |
| ஆத்திட்டி | நீர்முள்ளி . |
| ஆத்தியந்தம் | காண்க : ஆதியந்தம் . |
| ஆத்தியந்திகபிரளயம் | பிரளயத்தால் உலகம் முடியும் காலம் . |
| ஆத்தியாத்துமிகம் | தன்னைப்பற்றி வரும் துன்பம் . |
| ஆத்தியான்மிகம் | தன்னைப்பற்றி வரும் துன்பம் . |
| ஆத்தியை | துர்க்கை . |
| ஆத்திரக்காரன் | அவசரப்படுபவன் . |
| ஆத்திரகம் | இஞ்சி . |
| ஆத்திரம் | பரபரப்பு ; சினம் . |
| ஆத்திரேயன் | சந்திரன் ; அத்திரி குலத்தில் பிறந்தவன் . |
| ஆத்திரேயி | பூப்புள்ளவள் ; ஓர் ஆறு . |
| ஆத்திரை | காண்க : யாத்திரை ; சுற்றுலா . |
| ஆத்திரையன் | அத்திரி குலத்தில் பிறந்தவன் . |
| ஆத்திறைப்பாட்டம் | கால்நடை வரி . |
| ஆத்தின்னி | பாணன் . |
| ஆத்துமகத்தியை | தற்கொலை . |
| ஆத்துமகுப்தா | காண்க : பூனைக்காலி . |
| ஆத்துமசக்தி | ஆன்மாவுக்குரிய ஆற்றல் . |
| ஆத்துமசன் | மகன் . |
| ஆத்துமசிநேகிதன் | உயிர்த்தோழன் . |
| ஆத்துமசுத்தி | ஆத்துமாவின் தூய்மை ; காண்க : ஆன்மசுத்தி . |
| ஆத்துமஞானம் | தன்னையறியும் அறிவு . |
| ஆத்துமஞானி | தன்னையறிந்தவன் . |
| ஆத்துமதரிசனம் | ஆன்மாவின் நிலையை அறிகை ; காண்க : ஆன்மதரிசனம் . |
| ஆத்துமநாசம் | தன்னைக் கெடுத்துக்கொள்ளுகை . |
| ஆத்துமநிவேதனம் | உயிர்ப்பலி ; தன்னை அர்ப்பணஞ் செய்கை . |
| ஆத்துமபந்து | ஆன்மாவின் உறுதிச் சுற்றம் ; அத்தை மகன் , அம்மான் மகன் முதலிய உறவுகள் . |
| ஆத்துமபுத்தி | தன் அறிவு . |
| ஆத்துமபோதம் | காண்க : ஆத்துமஞானம் . |
| ஆத்துமம் | உயிர் ; உயிரி ; அரத்தை ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று . |
| ஆத்துமராமன் | ஆத்ம திருப்தியுடையவன் . |
| ஆத்துமரூபம் | ஆன்மலாபம் ; காண்க : ஆன்மரூபம் . |
| ஆத்துமலாபம் | உயிர் உய்கை ; சொந்த இலாபம் ; தன்னையறிகை . |
| ஆத்துமவதம் | காண்க : ஆத்துமகத்தியை . |
| ஆத்துமவதிகாசனம் | நல்லிருக்கை என்னும் யோகாசனம் . |
| ஆத்துமவிசாரம் | ஆத்துமாவை அறியும் சிந்தனை . |
| ஆத்துமவிரக்கங்காட்டுதல் | மனப்பூர்த்தியாக அன்பும் அருளும் காட்டுதல் . |
| ஆத்துமா | உயிர் ; சீவான்மா ; உயிரி . |
| ஆத்துமாபகாரம் | ஆத்துமாவின் இயல்பினை வேறாக நினைக்கை ; பரதந்திரனான சீவனைச் சுதந்திரனாக நினைக்கை . |
| ஆத்துமார்த்தம் | ஆத்தும இலாபத்திற்குரியது ; தன்பொருட்டு ; மிக்க நட்பு . |
| ஆத்துமானந்தம் | தனக்குள் மகிழ்கை ; தற்போதத்தால் நிகழும் மகிழ்ச்சி . |
| ஆத்துமானுபவம் | தன்னைத் தான் அனுபவிக்கை . |
| ஆத்துமிகம் | காண்க : ஆத்தியாத்துமிகம் ; ஆன்மா சம்பந்தமுடையது . |
| ஆத்தை | தாய் ; வியப்பு அச்ச இரக்கங்களைக் குறிக்கும் சொல் . |
| ஆத்மா | காண்க : ஆத்துமா . |
| ஆதங்கம் | நோய் ; அச்சம் ; துன்பம் ; முரசின் ஓசை . |
| ஆதண் | நோய் ; வருத்தம் . |
| ஆதண்டை | காண்க : ஆதொண்டை . |
| ஆததாயிகள் | கொடியோர் ; அவராவார் ; தீக்கொளுவுவார் , நஞ்சிடுவார் , கருவியிற் கொல்வார் , கள்வர் , ஆறலைப்பார் , சூறைகொள்வார் , பிறனில் விழைவார் . |
| ஆதபத்திரம் | குடை ; வெண்குடை . |
| ஆதபம் | வெயில் ; பிரகிருதிகளுள் ஒன்று . |
| ஆதபயோகம் | வெயிற்கடுமை தாங்கும் யோகநிலை . |
| ஆதபன் | சூரியன் . |
| ஆத்தாடி | வியப்புக் குறிப்பு ; இளைப்பாறற் குறிப்பு . |
| ஆத்தாரமூத்தாள் | பூனைக்காலிக்கொடி . |
| ஆத்தா | தாய் ; பார்வதி . |
| ஆத்தாள் | தாய் ; பார்வதி . |
| ஆத்தானம் | அரசவை ; கோபுரவாயில் . |
| ஆத்தி | மரவகை ; திருவாத்தி ; செல்வம் ; அடைகை ; சம்பந்தம் ; இலாபம் ; பெண்பால் விகுதி ; அச்ச வியப்புக்குறிப்பு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 80 | 81 | 82 | 83 | 84 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆத்தாடி முதல் - ஆதரணை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, ஒன்று, தாய், துன்பம், உயிர், மகன், இலாபம், உயிரி, அறிவு, ஆன்மாவின், நினைக்கை, குறிப்பு, பார்வதி, நோய், அச்ச, ஆத்துமஞானம், ஆத்துமா, ஆத்துமகத்தியை, கொள்கை, ஆத்தியாத்துமிகம், உண்டென்னும், கடவுள், ஆதரவு, தன்னைப்பற்றி, வரும், சொல், பிறந்தவன், குலத்தில், அத்திரி, ஆத்துமாவின்

