தமிழ் - தமிழ் அகரமுதலி - ஆதரம் முதல் - ஆதித்தமண்டலம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| ஆதிச்சுவடி | காண்க : அரிச்சுவடி . |
| ஆதிசத்தி | பஞ்ச சக்திகளுள் ஒன்று ; ஆதியாகிய சக்தி . |
| ஆதிசேடன் | பூமியைத் தாங்கிக்கொண்டிருக்கிறது எனக் கூறும் 'அனந்தன்' என்கிற பாம்பு . |
| ஆதிசைவம் | சைவ சமயப் பிரிவுகள் பதினாறனுள் ஒன்று . |
| ஆதிசைவர் | சிவாலயங்களில் பூசை புரியும் அதிகாரிகளாகிய குருக்கள் . |
| ஆதிட்டம் | கட்டளையிடப்பட்டது , சொல்லப்பட்டது ; உண்டுகழிந்த மிச்சில் . |
| ஆதித்தநோக்கு | சூரியனுடைய பார்வை . |
| ஆதித்தபுடம் | சூரிய நிலையைக் குறிக்கும் இராசிபாகை . |
| ஆதித்தபுத்தி | சூரியனது நாட்கதி . |
| ஆதித்தம் | காவிக்கல் ; துரிசு . |
| ஆதித்தமண்டலம் | சூரிய வட்டம் ; இதயத்திலுள்ள ஒரு யோகத்தானம் ; சூரிய உலகம் . |
| ஆதரம் | அன்பு ; ஆசை ; உபசாரம் ; ஓடக்கூலி ; சிலம்பு . |
| ஆதரவு | அன்பு ; உதவி ; தோற்றுகை ; ஆதாரம் . |
| ஆதரவுச்சீட்டு | பற்றுச்சீட்டு . |
| ஆதரவுசொல்லுதல் | தேறுதல்சொல்லுதல் . |
| ஆதராதிசயம் | அன்புமிகுதி . |
| ஆதரிக்கை | அன்புசெய்தல் ; பேணுதல் . |
| ஆதரிசம் | கண்ணாடி ; உரை ; மூல ஏடு . |
| ஆதரிசனம் | கண்ணாடி ; உரை ; மூல ஏடு . |
| ஆதரித்தல் | ஆசைகூர்தல் ; உபசரித்தல் ; பாதுகாத்தல் ; உதவிசெய்தல் ; தழுவிப் பேசுதல் . |
| ஆதல் | ஆவது எனப் பொருள்படும் இடைச்சொல் ; நூல் ; கூத்து ; தரிசனம் ; நுணுக்கம் ; ஆசை ; உண்டாதல் ; நிகழ்தல் ; முடிதல் ; இணக்கமாதல் ; வளர்தல் ; அமைதல் ; ஒப்பாதல் . |
| ஆதலால் | ஆகையால் . |
| ஆதவம் | காண்க : ஆதபம் ; ஒளி ; கொன்றைப்பூ . |
| ஆதவன் | காண்க : ஆதபன் ; வேதியன் ; சூரியகாந்தி . |
| ஆதளை | காண்க : ஆமணக்கு ; காட்டாமணக்கு வகை ; மாதுளை ; பெருந்துன்பம் . |
| ஆதளைமாதளை | மயக்கம் ; வருத்தம் . |
| ஆதன் | ஆன்மா ; அறிவில்லாதவன் ; குருடன் ; பழைய காலத்து மக்கள் இயற்பெயர் வகை ; அருகன் ; ஆரியன் ; வாதனை . |
| ஆதன்மை | பேதைமை . |
| ஆதன்மையால் | ஆகையால் . |
| ஆதனம் | காண்க : ஆசனம் ; யோகாசனம் ; பிருட்டம் ; பீடம் ; தரை ; சீலை ; சொத்து ; யானைக்கழுத்து . |
| ஆதனமூர்த்தி | படிமம் ; இலிங்கம் . |
| ஆதாபாதா | மகமதியர்களிடையே வரவேற்குங் காலத்தில் சொல்லும் உபசாரவார்த்தை . |
| ஆதாயஞ்செலவு | வரவுசெலவு . |
| ஆதாயப்பங்கு | இலாபப் பங்கு . |
| ஆதாயம் | இலாபம் ; இலக்கினத்திற்குப் பதினோராம் இடம் . |
| ஆதாரசக்தி | சிவசக்தி . |
| ஆதாரசிலை | கற்சிலையைத் தாங்கும் அடிக்கல் . |
| ஆதாரணை | ஆராதனை செய்யும்போது உண்டாகும் தெய்வ ஆவேசம் . |
| ஆதாரதண்டம் | முதுகெலும்பு . |
| ஆதாரநிலை | பற்றுக்கோடு . |
| ஆதாரபீடம் | காண்க : ஆதாரசிலை . |
| ஆதாரம் | பற்றுக்கோடு ; ஆதரவுச்சாதனம் ; பிரமாணம் ; உடல் ; மழை ; ஆறாதாரம் ; மூலம் ; அடகு ; ஏரி ; பாத்தி ; அதிகரணம் . |
| ஆதாரலக்கணை | இடவாகுபெயர் . |
| ஆதாளி | பேரொலி ; கலக்கடி ; வீம்புப் பேச்சு . |
| ஆதாளிக்காரன் | வீம்பு பேசுகின்றவன் . |
| ஆதாளித்தல் | ஆயாசப்படுதல் . |
| ஆதாளிமன்னன் | கரடி . |
| ஆதாளை | காண்க : ஆதளை . |
| ஆதானம் | வைக்கை ; பற்றுகை ; குதிரையணி . |
| ஆதானும் | எதுவாயினும் . |
| ஆதி | தொடக்கம் ; தொடக்கமுள்ளது ; காரணம் ; பழைமை ; கடவுள் ; எப்பொருட்கும் இறைவன் ; சூரியன் ; சுக்கிரன் ; திரோதான சக்தி ; காண்க : ஆதிதாளம் ; அதிட்டானம் ; ஒற்றி ; காய்ச்சற்பாடாணம் ; மிருதபாடாணம் ; நாரை ; ஆடாதோடை ; குதிரையின் நேரோட்டம் ; மனநோய் . |
| ஆதிக்கடுஞ்சாரி | நவச்சாரம் . |
| ஆதிக்கப்பேறு | வரிவகை . |
| ஆதிக்கம் | தலைமை ; அரசாளிடம் ; உரிமை ; மிகுதி . |
| ஆதிக்கற்பேதம் | அன்னபேதி . |
| ஆதிக்கன்னாதம் | அன்னபேதி . |
| ஆதிக்கன் | சிறப்புடையோன் ; மரபோன் . |
| ஆதிக்கியம் | தலைமை ; மேன்மை ; உரிமை ; காண்க : ஆதிக்கம் . |
| ஆதிக்குடி | சவர்க்காரம் . |
| ஆதிக்குரு | பூவழலை . |
| ஆதிகம் | சிறுகுறிஞ்சாக்கொடி முதலியன . |
| ஆதிகவி | முதற்புலவன் ; வான்மீகி முனிவர் . |
| ஆதிகாரணம் | முதற்காரணம் . |
| ஆதிகாலம் | பண்டைக்காலம் . |
| ஆதிகாவியம் | முதலில் தோன்றிய காவியம் ; வால்மீகி இராமாயணம் . |
| ஆதிச்சனி | காண்க : மகம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 81 | 82 | 83 | 84 | 85 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆதரம் முதல் - ஆதித்தமண்டலம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, சூரிய, பற்றுக்கோடு, அன்னபேதி, ஆதிக்கம், தலைமை, ஆதாரசிலை, உரிமை, ஆகையால், சக்தி, ஒன்று, அன்பு, ஆதாரம், கண்ணாடி, ஆதளை

