தமிழ் - தமிழ் அகரமுதலி - பூவம்பர் முதல் - பெட்டன் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| பூவம்பர் | ஒரு மணப்பொருள்வகை . |
| பூவம்பன் | மன்மதன் . |
| பூவமளி | எண்வகைப் புணர்ச்சிக்கு இயைந்த மலர்ப்படுக்கை . |
| பூவமுதம் | தேன் . |
| பூவர்க்கம் | பூத்திரள் . |
| பூவரசு | ஒரு மரவகை . |
| பூவராகம் | திருமாலின் பன்றிப்பிறப்பு . |
| பூவராகன் | பன்றியின் அடையாளம் குறித்த பொன்நாணயம் . |
| பூவல் | சிவப்பு ; செம்மண் ; துரவு ; பூத்திடுகை . |
| பூவல்லிகொய்தல் | பூக்கொய்தாடும் மகளிர் விளையாட்டுவகை . |
| பூவலியம் | மண்ணுலகம் . |
| பூவழலை | காண்க : பூநீறு . |
| பூவன் | பிரமன் ; காண்க : செவ்வாழை ; வாழைவகை . |
| பூவாடைக்காரி | மாங்கலியத்துடன் இறந்து தெய்வமான மாது . |
| பூவாடையம்மன் | மாங்கலியத்துடன் இறந்து தெய்வமான மாது . |
| பூவாணியன் | வெற்றிலை , காய்கறி , முதலியன விற்போன் . |
| பூவாளி | மன்மதன் ; மன்மதனின் மலர்க்கணை . |
| பூவிதழ் | மலரேடு . |
| பூவிந்து | அப்பிரகம் ; வீரம் என்னும் மருந்துச் சரக்கு . |
| பூவிந்துநாதம் | அப்பிரகம் . |
| பூவிரணம் | ஆண்குறி மலரிலுள்ள புண் . |
| பூவில் | மன்மதனது மலர்வில் . |
| பூவிலி | பிறப்பற்றவர் . |
| பூவிலை | விலைமாதர் பெறும் அற்றைக்கூலி . |
| பூவிழுதல் | கண்ணின் கருவிழியில் வெள்ளை விழுகை ; சுரசுரப்பு நீங்குகை . |
| பூவிற்கொம்பு | திருமகள் . |
| பூவின்கிழத்தி | திருமகள் . |
| பூவினன் | பிரமன் . |
| பூவுக்கிடுதல் | காதலன் காதலிக்குப் பரிசங் கொடுத்தல் . |
| பூவுயிர்த்தல் | மலர்தல் . |
| பூவுலகம் | நிலவுலகம் . |
| பூவுலகு | நிலவுலகம் . |
| பூவெடுத்தல் | கோயிற்பூசைக்கு மலரெடுத்தல் ; கண்ணில் விழுந்த பூவை நீக்குதல் . |
| பூவேலை | பூப்போன்ற சித்திரவேலை . |
| பூவை | நாகணவாய்ப்புள் ; காயாமரம் ; குயில் ; பெண் . |
| பூவைசியர் | உழவர் ; வேளாளர் . |
| பூவைநிலை | காயாம்பூவை மாயவன் நிறத்தோடு உவமித்துப் புகழும் புறத்துறை ; அரசனைத் தேவரோடு ஒப்புக்கூறும் புறத்துறை . |
| பூவைவண்ணன் | காயாம்பூ மேனியனாகிய திருமால் . |
| பூவொல்லி | உள்ளீடற்ற தேங்காய்வகை . |
| பூழ் | காடைவகை ; கானாங்கோழி ; துளை . |
| பூழ்க்கை | யானை . |
| பூழ்தி | இறைச்சி ; முடைநாற்றம் ; புழுதி ; கொடுமை . |
| பூழான் | கவுதாரி ; கானாங்கோழி . |
| பூழி | குழைசேறு ; சேற்றிலெழுங் குமிழி ; புழுதி ; தூள் ; திருநீறு ; கொடுந்தமிழ் நாட்டினுள் ஒன்று . |
| பூழியன் | பூழி நாட்டுக்குத் தலைவனான சேரன் ; பாண்டியன் . |
| பூழியான் | திருநீறு அணிந்த சிவபிரான் ; புழுதியிடத்துள்ளவன் . |
| பூழில் | அகில்மரம் ; பூமி . |
| பூழை | சிறுவாயில் ; மலைக்கணவாய் ; துளை . |
| பூளம் | பூவரசமரம் . |
| பூளை | இலவமரம் ; செடிவகை ; வெற்றிப்பூ ; பீளை . |
| பூளைசூடி | பூளை அணிந்த சிவபிரான் . |
| பூளைப்பூ | பூளைப்பஞ்சு ; பூளைச்செடி . |
| பூன்றம் | முழுமை . |
| பூன்றாகுதி | காண்க : பூரணாகுதி . |
| பூனதம் | பொன் . |
| பூனை | ஒரு விலங்குவகை . |
| பூனைக்கண் | வைடூரியவகை ; பூனையின் கண் போன்ற கண் . |
| பூனைக்காய்ச்சி | தீய்ந்த பயிர் ; கொடிவகை . |
| பூனைக்காலி | ஒரு செடிவகை ; கொடிவகை ; காண்க : சிமிக்கிப்பூ . |
| பூனைத்திசை | தென்கிழக்கு . |
| பூனைப்பிடுக்கன் | ஒரு கொடிவகை ; ஒரு செடிவகை . |
| பூனைமயிர் | பூனையின் மயிர்போன்ற வெண்மயிர் ; கொடிவகை . |
| பூனைமூலி | குப்பைமேனி . |
| பூனைவணங்கி | குப்பைமேனி ; நாயுருவி . |
| பெ | ஒர் உயிர்மெய்யெழுத்து (ப் + எ) . |
| பெகுலம் | மிகுதி . |
| பெங்கு | தீயொழுக்கம் ; ஒரு கள்வகை . |
| பெட்டகம் | பெட்டி ; வரிசைப்பெட்டி . |
| பெட்டல் | விருப்பம் . |
| பெட்டன் | பொய்யன் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 799 | 800 | 801 | 802 | 803 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பூவம்பர் முதல் - பெட்டன் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, கொடிவகை, செடிவகை, திருநீறு, பூழி, புழுதி, அணிந்த, சிவபிரான், பூனையின், துளை, பூளை, குப்பைமேனி, புறத்துறை, தெய்வமான, இறந்து, மாங்கலியத்துடன், பிரமன், மாது, அப்பிரகம், மன்மதன், பூவை, நிலவுலகம், திருமகள், கானாங்கோழி

