தமிழ் - தமிழ் அகரமுதலி - பூபாலன் முதல் - பூரணம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| பூபாலன் | அரசன் ; வேளாளன் ; உயர்சாதிக் குதிரை ; பூமியின் மகனான செவ்வாய் . |
| பூபாளம் | காலையில் பாடும் ஒரு பண்வகை . |
| பூம்பட்டு | மெல்லிய பட்டு . |
| பூம்பந்தர் | காண்க : பூப்பந்தல் . |
| பூம்பந்து | பூவினால் அமைந்த பந்து . |
| பூம்பறியல் | உணவுக்குறைவு . |
| பூம்பாளை | இளம்பாளை ; ஒரு நெல்வகை . |
| பூம்பிஞ்சு | இளம்பிஞ்சு . |
| பூம்பிடகை | பூங்கூடை . |
| பூம்பிடா | பூங்கூடை . |
| பூம்பிள்ளை | இளம்பிள்ளை . |
| பூம்புகை | மணப்புகை . |
| பூம்பொருக்கு | வாடற்பூ . |
| பூம்போர்வை | பூத்தொழிலையுடைய மேற்போர்வை . |
| பூமகள் | நிலமகள் ; திருமகள் ; கலைமகள் . |
| பூமகன் | பிரமன் ; பூமியின் மகனான செவ்வாய் . |
| பூமங்கை | காண்க : பூமகள் . |
| பூமடந்தை | காண்க : பூமகள் . |
| பூமடல் | வாழை முதலியவற்றின் பூவிலுள்ள மடல் . |
| பூமடை | காண்க : பூப்பலி . |
| பூமண்டலம் | நிலவுலகம் , நிலவட்டம் . |
| பூமத்தியரேகை | நிலநடுக்கோடு . |
| பூமருது | மருதமரவகை ; ஒரு மரவகை . |
| பூமழை | மலர்மாரி . |
| பூமன் | அரசன் ; பிரமன் ; காமன் ; செவ்வாய் . |
| பூமாதுளை | பூமாத்திரம் விடும் மாதுளை . |
| பூமாதேவி | நிலமகள் . |
| பூமாரி | பூமழை ; காண்க : வேம்பு . |
| பூமாலை | பூவினால் தொடுத்த மாலை . |
| பூமான் | அரசன் ; கணவன் ; திருமகள் . |
| பூமி | பூவுலகு ; மூவுலகத்துள் ஒன்று ; நிலமகள் ; நிலப்பகுதி ; மனை ; நாடு ; இடம் ; கோணங்களின் கீழ்வரி ; நிலை ; பொறிக்குரிய செய்தி ; நாக்கு ; ஒரு மருந்துப்பொடிவகை . |
| பூமிகதனாதல் | பிறத்தல் . |
| பூமிகுருவகம் | காண்க : வெள்ளெருக்கு . |
| பூமிகொழுநன் | நிலமகளின் கணவனான திருமால் . |
| பூமிசம் | பூமியிலுண்டானது ; நரகம் . |
| பூமிசம்பவை | பூமியினின்றும் பிறந்த சீதாபிராட்டி . |
| பூமிசன் | செவ்வாய் ; நரகாசுரன் , |
| பூமிசை | திருமகள் ; சீதாபிராட்டி . |
| பூமிசைநடந்தோன் | தாமரைப்பூவில் நடந்த அருகக்கடவுள் ; புத்தன் . |
| பூமித்தைலம் | மண்ணெண்ணெய் , கன்னெய் . |
| பூமிதேவி | காண்க : பூமாதேவி . |
| பூமிநாதம் | காந்தம் ; வெடியுப்பு ; ஒரு மருந்துப் பொடிவகை . |
| பூமிநாயகன் | திருமால் ; காஷ்மீரப் படிகம் ; காண்க : நிலவேம்பு ; அரசன் . |
| பூமிபரீட்சை | கலையறிவு அறுபத்து நான்கனுள் ஒன்றான நிலத்தியல்பு அறியும் வித்தை . |
| பூமிபாரம் | அரசபாரம் ; நிலத்திற்குப் பொறையாயிருப்பவரான தீயோர் . |
| பூமியதிர்ச்சி | நிலநடுக்கம் . |
| பூமிவேர் | நாக்குப்பூச்சி . |
| பூமின் | காண்க : பூமகள் . |
| பூமுகம் | பொலிந்த முகம் ; வீட்டு முன்முகப்பு . |
| பூயம் | சீழ் ; வெறுக்கத்தக்க பொருள் . |
| பூர்ணகர்ப்பம் | காண்க : பூரணகர்ப்பம் . |
| பூர்ணம் | பூரணம் ; முழுமை ; நிறைவு . |
| பூர்ணிமை | பௌர்ணமி , முழுநிலாநாள் . |
| பூர்த்தி | நிறைவு ; திருப்தி ; கடவுளிடத்து ஐக்கியம் . |
| பூர்த்திபண்ணுதல் | செய்துமுடித்தல் ; நிரப்புதல் . |
| பூர்த்தியன் | வேலைசெய்து கூலிபெறுவோன் . |
| பூர்தல் | நுழைதல் . |
| பூர்வகதை | பண்டைக்கால வரலாறு ; கதையின் முன்தொடர்ச்சி . |
| பூர்வகாலம் | சென்ற காலம் . |
| பூர்வசைவன் | தீட்சையினால் வீடுபேறு அடையலாம் என்னும் கொள்கையுள்ள சைவமதப் பிரிவினன் . |
| பூர்வஞானம் | முற்பிறப்புணர்ச்சி . |
| பூர்வபதம் | தொகைமொழியுள் முதலிலுள்ள சொல் . |
| பூர்வம் | ஆதி ; பழைமை ; முதன்மை ; முற்காலம் ; கிழக்கு ; சமண ஆகமம் மூன்றனுள் ஒன்று ; முன்னிட்டு . |
| பூர்வாகமம் | சமண ஆகமம் மூன்றனுள் ஒன்று . |
| பூர்வாசிரமம் | துறவியின் முந்திய நிலை . |
| பூர்விகம் | முற்காலம் ; மூலவரலாறு . |
| பூர்வீகன் | பழமையோன் ; வயதுமுதிர்ந்தவன் . |
| பூர்வோத்தரம் | முன்வரலாறு ; வடகிழக்கு . |
| பூரகம் | நிரப்புகை ; மூச்சை உள்ளிழுத்தல் ; மத்தங்காய்ப் புல் . |
| பூரட்டாதி | இருபத்தைந்தாம் நட்சத்திரம் . |
| பூரணகர்ப்பம் | முதிர்ந்த சூல் . |
| பூரணகர்ப்பிணி | நிறைசூலி . |
| பூரணகலசம் | மாவிலை வைத்த நீர்நிறைந்த குடம் . |
| பூரணகுடம் | மாவிலை வைத்த நீர்நிறைந்த குடம் . |
| பூரணகும்பம் | மாவிலை வைத்த நீர்நிறைந்த குடம் . |
| பூரணம் | முழுமை ; நிறைவு ; மிகுதி ; முடிவு ; மனநிறைவு ; அபிநயக்கைவகை ; இரண்டாவது மூன்றாவது என எண்கள் நிறுத்தமுறையைக் குறிக்கும் எண் ; பலகாரத்தின் உள்ளீடு பிதிர்ப்பிண்டம் ; ஆடையின் குறுக்கிழை ; மழை ; வளர்பிறைப் பதினைந்தாம் திதி ; பூஞ்சணம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 797 | 798 | 799 | 800 | 801 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பூபாலன் முதல் - பூரணம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, பூமகள், செவ்வாய், அரசன், நிறைவு, மாவிலை, வைத்த, திருமகள், குடம், நீர்நிறைந்த, ஒன்று, நிலமகள், ஆகமம், முற்காலம், மூன்றனுள், பூங்கூடை, பூமியின், மகனான, பூவினால், முழுமை, பூரணம், சொல், பூமாதேவி, பூமழை, நிலை, திருமால், பூரணகர்ப்பம், சீதாபிராட்டி, பிரமன்

