தமிழ் - தமிழ் அகரமுதலி - பூரணமி முதல் - பூவந்தி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| பூரணமி | வளர்பிறைப் பதினைந்தாம் திதி . |
| பூரணவயசு | நூறு பிராயம் . |
| பூரணவித்தை | நிறைகல்வி ; குறைவில்லாத கலை . |
| பூரணன் | குணங்கள் நிரம்பினவன் ; கடவுள் ; மூர்த்தபாடாணம் . |
| பூரணாகுதி | வேள்விமுடிவுச் சடங்கு . |
| பூரணி | இலவமரம் ; பார்வதி ; பூமி ; காடு ; குணங்கள் நிரம்பினவன் . |
| பூரணை | நிறைவு ; முழுநிலா ; பஞ்சமி , தசமி , உவா என்னும் திதிகள் ; சமவசரணத்தின் வடபுறமுள்ள வாவி ; ஐயனார் தேவி . |
| பூரணைகேள்வன் | ஐயனார் . |
| பூரப்பாளை | தலைக்கோலத்தின் ஓர் உறுப்பு . |
| பூரபதி | பச்சைக்கருப்பூரம் . |
| பூரம் | கருப்பூரம் ; பச்சைக்கருப்பூரம் ; இரச கருப்பூரம் ; மருந்துவகை ; பூரநாள் ; ஒரு மணச்சடங்கு ; பூரான் ; தேள் ; பழம் ; பொன் ; நிறைவு ; வெள்ளம் ; வைப்புப் பாடாணவகை ; சமவசரணத்தின் வடபுறமுள்ள வாவி . |
| பூரவாகினி | கலைமகள் . |
| பூரா | முழுதும் ; முழுதுமான ; நேர்த்தியான பழுப்புச்சருக்கரைவகை . |
| பூராடம் | ஒரு நட்சத்திரம் . |
| பூராயக்கதை | பழங்கதை . |
| பூராயம் | ஆராய்ச்சி ; விசித்திரமானது ; குழந்தைகளின் கவனத்தைக் கவரும் பொருள் . |
| பூரான் | ஊரும் உயிரிவகை ; குதிரையில் உள்ள தீச்சுழி ; பனைமுளை . |
| பூரி | மிக்க ; மிகுதி ; சிறப்புக் காலங்களில் பார்ப்பனர்களுக்குக் கொடுக்கும் தட்சிணை ; பொன் ; மொத்தம் ; ஒரு பேரெண் ; ஊதுகருவி வகை ; வில்லின் நாண் ; குற்றம் ; கலப்புநெல் ; பலகாரவகை ; விரிந்த பாளையின் உள்ளிருக்கும் பூத்தொகுதி ; காண்க : பூரியரிசி ; பப்பரப்புளி ; பூரிசகந்நாதம் என்னும் தலம் . |
| பூரி | (வி) முழக்கு ; பெருகு ; தொனி ; மகிழ் . |
| பூரிகம் | அப்பவருக்கம் . |
| பூரிகலியாணி | ஒரு பண்வகை . |
| பூரிகா | அகில்மரம் . |
| பூரிகை | ஊதுகுழல் ; அப்பவருக்கம் ; நிரப்புகை ; பிராணாயாமத்துக்கு உறுப்பானதும் காற்றை உள்ளிழுப்பதுமான செயல் . |
| பூரித்தல் | நிறைதல் ; குறைவற நிரம்புதல் ; களித்தல் ; பருத்தல் ; பொலிதல் ; மிகுதல் ; பூரகஞ்செய்தல் ; நிறைத்தல் ; பொதிந்துள்ள கருத்தை வெளியிட உரிய சொற்களைச் சேர்த்தல் ; படைத்தல் . |
| பூரிதம் | நிரப்பப்பட்டது ; மிகுகளிப்பு ; மிகுதி . |
| பூரிப்பு | களிப்பு ; நிறைவு ; பருமன் ; மிகுமகிழ்ச்சி ; மிகுதி ; ஒளி . |
| பூரிமம் | தெருப்பக்கம் ; சாந்திட்டுக் கட்டிய தொட்டி . |
| பூரிமாயன் | நரி . |
| பூரிமாயு | நரி ; பழைமை . |
| பூரியம் | ஊர் ; மருதநிலத்தூர் ; வேந்தர் வீதி ; அரசிருக்கை ; கலப்புநெல் ; பப்பரப்புளி . |
| பூரியமாக்கள் | கீழ்மக்கள் ; கொடியவர் . |
| பூரியர் | கீழ்மக்கள் ; கொடியவர் . |
| பூரியரிசி | மட்டையரிசி ; தசராப் பண்டிகையில் வழங்கப்படும் கொடையரிசி ; வெள்ளையரிசி . |
| பூரியார் | காண்க : பூரியர் . |
| பூரு | குருகுலத்தரசருள் ஒருவன் ; புருவம் . |
| பூருகம் | பூமியில் முளைக்கும் மரம் . |
| பூருண்டி | மல்லிகைச்செடி ; வேலிப்பருத்தி ; காண்க : தேட்கொடுக்கி . |
| பூருவகங்கை | நருமதை . |
| பூருவகருமம் | ஊழ்வினை . |
| பூருவகன்மம் | ஊழ்வினை . |
| பூருவகௌளம் | ஒரு பண்வகை . |
| பூருவஞானம் | முன்னனுபவத்தையறியும் அறிவு . |
| பூருவதிக்கு | கிழக்கு . |
| பூருவதிசை | கிழக்கு . |
| பூருவபக்கம் | வளர்பிறைப்பக்கம் ; பிராது . |
| பூருவம் | பழைமை ; கிழக்கு ; முன்பு ; காண்க : பூர்வாகமம் . |
| பூரை | நிறைவு ; போதியது ; முடிவு ; இன்மை ; ஒன்றுக்கும் உதவாதவர் ; ஒன்றுக்கும் உதவாதது . |
| பூரைபூரையெனல் | போதும் போதுமெனல் . |
| பூரையிடுதல் | முடிவடைதல் ; அலுப்புண்டாக்குதல் . |
| பூல் | காண்க : பூலா . |
| பூலத்தி | மருதமரம் . |
| பூலதை | பூநாகம் ; காண்க : கோடாஞ்சி . |
| பூலா | செடிவகை ; மரவகை . |
| பூலாச்செண்டு | பூச்செண்டு ; திருமணத்தில் நலங்கில் மணமக்கள் நிகழ்த்தும் பூச்செண்டாட்டம் . |
| பூலித்தல் | உடம்பு பூரித்தல் . |
| பூலோககயிலாயம் | திருக்குற்றாலம் , சிதம்பரம் போன்ற சிவதலங்கள் . |
| பூலோகம் | மேலேழு உலகத்துள் மூன்றாவது . |
| பூலோகவைகுண்டம் | திருவரங்கம் . |
| பூவணி | பூமாலை ; சதுக்கம் . |
| பூவணை | மலர்ப்பள்ளி . |
| பூவந்தி | புன்கமரம் ; ஒரு மரவகை ; பலகாரவகை ; ஒருமருந்துவகை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 798 | 799 | 800 | 801 | 802 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பூரணமி முதல் - பூவந்தி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, நிறைவு, மிகுதி, கிழக்கு, பூரித்தல், பண்வகை, அப்பவருக்கம், பப்பரப்புளி, பழைமை, கொடியவர், பூலா, மரவகை, ஒன்றுக்கும், ஊழ்வினை, பூரியரிசி, பூரியர், கீழ்மக்கள், பலகாரவகை, வடபுறமுள்ள, வாவி, சமவசரணத்தின், என்னும், நிரம்பினவன், ஐயனார், பச்சைக்கருப்பூரம், பூரி, கலப்புநெல், பொன், பூரான், கருப்பூரம், குணங்கள்

