முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » பூசிதன் முதல் - பூட்டைவாங்குதல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - பூசிதன் முதல் - பூட்டைவாங்குதல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| பூசிதன் | பூசிக்கப்படுவோன் . |
| பூசிதை | வணக்கம் . |
| பூசிப்பு | வணக்கம் . |
| பூசிமெழுகுதல் | குற்றத்தை மறைக்கப் பார்த்தல் . |
| பூசு | பூசுகை ; தானியத்தின் உமி அல்லது தோல் ; ஒட்டடை ; தூசு . |
| பூசுசாந்தாற்றி | சிறு விசிறி . |
| பூசுத்தி | பூமியில் நீரைத் தெளித்துச் செய்யும் துப்புரவு . |
| பூசுதல் | தடவுதல் ; கழுவுதல் ; அலங்கரித்தல் ; மெழுகுதல் ; நீரால் அலம்புதல் ; இயைதல் . |
| பூசுதன் | பூமியின் புதல்வனான செவ்வாய் . |
| பூசுதை | பூமியின் புதல்வியாகிய சீதை . |
| பூசுரன் | பார்ப்பான் . |
| பூசுறுதல் | அலங்கரித்தல் . |
| பூசை | ஆராதனை ; அடியார் அமுதுசெய்கை ; பலத்த அடி ; நெட்டி ; பூனை ; காண்க : காட்டுப்பூனை . |
| பூசைப்பெட்டி | ஆன்மார்த்த இலிங்கம் வைக்கும் பெட்டி . |
| பூசைபண்ணுதல் | ஆராதனை செய்தல் ; உணவருந்தல் . |
| பூசைபோடுதல் | பலிகொடுத்தல் ; உணவருந்தல் ; பலமாக அடிகொடுத்தல் . |
| பூசைமுகம் | பூசை நடக்கும் இடம் . |
| பூசைவேளை | பூசை செய்வதற்குரிய காலம் . |
| பூஞ்சக்கல் | ஒருவித நீலக்கல் . |
| பூஞ்சணம் | மரம் முதலியவற்றின்மேல் ஈர நைப்பினால் உண்டாகும் பாசி ; ஒட்டடை . |
| பூஞ்சல் | மங்கல்நிறம் ; கண்ணொளி மங்கல் ; வலுவற்றவன் . |
| பூஞ்சலாடுதல் | கண்ணொளி மங்குதல் . |
| பூஞ்சற்கண் | குழிந்த கண் ; பீளைக்கண் ; ஒளி மங்கிய கண் . |
| பூஞ்சாளம் | காண்க : பூஞ்சணம் . |
| பூஞ்சான் | ஒரு புல்வகை . |
| பூஞ்சி | தூசி ; மங்கல் . |
| பூஞ்சிட்டு | ஒரு குருவிவகை . |
| பூஞ்சிறகு | பறவைக்குஞ்சின் சிறகு . |
| பூஞ்சு | ஒட்டடை ; மரத்தின்மீது ஈரத்தாலுண்டாகும் பாசி ; மங்கல்நிறம் ; பலாச்சுளையின் மேலுள்ள நார்ப்பகுதி . |
| பூஞ்சுண்ணம் | பூந்தாது . |
| பூஞ்சுமடு | பூவினாலாகிய சும்மாடு . |
| பூஞ்சை | மங்கல்நிறம் ; வலுவற்றவன் ; கண்ணொளி மங்கல் ; பாழ் ; ஒட்டடை . |
| பூஞ்சைநிலம் | பாழ்நிலம் . |
| பூஞ்சோலை | மலர்ச்சோலை . |
| பூஞை | பூனை ; காண்க : பூஞையாதனம் . |
| பூஞையாதனம் | பூனைபோல் முழங்காலை மடக்கிக் கைகளை ஊன்றி வானத்தைப் பார்த்திருக்கும் ஆசனவகை . |
| பூட்கை | கொள்கை ; மனவுறுதி ; வலிமை ; சிங்கம் ; யானை ; யானையாளி . |
| பூட்சி | பூணுகை ; அணிகலன் ; உடல் ; புணர்ப்பு ; கொள்கை ; மனவுறுதி ; வரிவகை ; உரிமை . |
| பூட்டகம் | வீண்பெருமை ; போலிவேலை ; வஞ்சகம் ; கமுக்கம் . |
| பூட்டகம்பண்ணுதல் | வீண்பெருமை பாராட்டுதல் ; வீம்படித்தல் . |
| பூட்டங்கம் | வஞ்சகம் ; அகப்படுத்துகை ; வில்லங்கம் . |
| பூட்டழித்தல் | கட்டுக்குலைத்தல் . |
| பூட்டறுதல் | கட்டுக்குலைதல் ; நுகத்தினின்றும் விடுபடுதல் . |
| பூட்டன் | பாட்டனுக்குத் தந்தை . |
| பூட்டாங்கயிறு | எருதைப் பிணைக்கும் நுகக்கயிறு . |
| பூட்டி | பாட்டனைப் பெற்ற தாய் . |
| பூட்டு | பிணிப்பு ; திறவுகோல் ; பூட்டுங்கருவி ; கொக்கி ; நாண்கயிறு ; உடற்பொருத்து ; மல்லுக்கட்டு ; இறுக்கம் ; கேடு ; மகளிர் தலையணிவகை ; சேனைக்கட்டு ; தளைக்கும் விலங்கு ; அடுக்கு . |
| பூட்டுதல் | மாட்டுதல் ; இணைத்தல் ; வைத்தல் ; எருது முதலியவற்றைப் பிணைத்தல் ; தொழுவில் அடித்தல் ; விலங்கு மாட்டுதல் ; பொறுப்பேற்றுதல் ; அணிதல் ; இறுகக்கட்டுதல் ; பொருத்திக் கூறுதல் ; அகப்படுத்துதல் ; நாணேற்றுதல் ; இறுக்குதல் ; வழக்குத் தொடுத்தல் . |
| பூட்டுநழுவுதல் | காண்க : பூட்டுவிலகுதல் . |
| பூட்டுநோவு | உடற்சந்துகளில் ஏற்படும் வலி . |
| பூட்டுப்போடுதல் | திறவுகோலாற் பூட்டிடுதல் ; பேசவொட்டாது செய்தல் . |
| பூட்டுவாய் | திறவுகோல் புகும் துளை ; நெருக்கடியான சமயம் . |
| பூட்டுவிடுதல் | உடற்பொருத்துவாய் விலகிப் போதல் . |
| பூட்டுவிலகுதல் | உடற்பொருத்துவாய் விலகிப் போதல் . |
| பூட்டுவிற்பொருள்கோள் | செய்யுள் முதலினும் இறுதியினும் நிற்குஞ் சொற்கள் தம்முள் இயையப் பொருள்கொள்ளும் முறை . |
| பூட்டை | ஏற்றமரம் ; இராட்டினத்தின் சக்கரம் ; இறைகூடை ; நீர்இறைக்குங் கருவிவகை ; செக்கு ; பூட்டாங்கயிறு ; சோளக்கதிர் . |
| பூட்டைப்பொறி | நீர் இறைக்கும் கருவிவகை . |
| பூட்டைவாங்குதல் | சோளப்பயிர் முதலியன கதிர்விடுதல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 794 | 795 | 796 | 797 | 798 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பூசிதன் முதல் - பூட்டைவாங்குதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, ஒட்டடை, மங்கல்நிறம், கண்ணொளி, மங்கல், பூசை, திறவுகோல், விலங்கு, பூட்டாங்கயிறு, வஞ்சகம், வீண்பெருமை, மாட்டுதல், பூட்டுவிலகுதல், கருவிவகை, போதல், விலகிப், உடற்பொருத்துவாய், மனவுறுதி, கொள்கை, பூஞ்சணம், உணவருந்தல், செய்தல், பூனை, பாசி, பூமியின், பூஞையாதனம், வலுவற்றவன், வணக்கம், அலங்கரித்தல், ஆராதனை

