தமிழ் - தமிழ் அகரமுதலி - புனிதம் முதல் - பூங்கு வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| புனிதம் | தூய்மை ; ஏழாவது நட்சத்திரமாகிய புனர்பூசம் . |
| புனிதன் | தூய்மையானவன் ; சிவன் ; இந்திரன் ; அருகன் ; புத்தன் . |
| புனிற்றா | ஈன்றணிமையுள்ள பசு அல்லது எருமை . |
| புனிற்றுமதி | இளமதி . |
| புனிறு | ஈன்றணிமை ; அண்மையில் ஈனப்பட்டது ; பிஞ்சுத்தன்மை ; மகப்பேற்றலான தீட்டு ; புதுமை ; தோல் . |
| புனுகு | புழுகு . |
| புனை | அழகு ; பொலிவு ; அலங்காரம் ; அணிகலன் ; கால்விலங்கு ; சீலை ; புதுமை ; நீர் . |
| புனைசுருட்டு | மோசம் . |
| புனைதல் | அணிதல் ; தரித்தல் ; அலங்கரித்தல் ; சித்தம்செய்தல் ; ஓவியம் வரைதல் ; கட்டுதல் ; முடைதல் ; சூடுதல் ; ஒழுங்காக அமைத்தல் ; சிறப்பித்தல் ; கற்பித்தல் ; செய்யுளமைத்தல் ; செய்தல் . |
| புனைந்துரை | கற்பனை ; அலங்கரித்துரைக்கும் வாசகம் ; பாயிரம் . |
| புனைந்தோர் | கம்மாளர் . |
| புனைபெயர் | கற்பித்துக்கொண்ட பெயர் . |
| புனைமொழி | அலங்காரச் சொல் . |
| புனையல் | மாலை . |
| புனையிறும்பு | செய்காடு . |
| புனைவன் | கம்மியன் . |
| புனைவலி | உவமானப் பொருள் . |
| புனைவு | அலங்காரம் ; அழகு ; செழிப்பு ; செய்கை . |
| புனைவுளி | உவமேயப் பொருள் . |
| பூ | ஒர் உயிர்மெய்யெழுத்து (ப்+ஊ) ; அழகு ; கொடிப்பூ ; கோட்டுப்பூ , நீர்ப்பூ , புதற்பூ என நால்வகைப்பட்ட மலர் ; தாமரைப்பூ ; பூத்தொழில் ; சேவலின் தலைச்சூடு ; நிறம் ; நீலநிறம் ; பொலிவு ; மென்மை ; யானையின் நுதற்புகர் ; யானையின் நெற்றிப்பட்டம் ; கண்ணின் கருவிழியில் விழும் வெண்பொட்டு ; விளைவுப் போகம் ; ஆயுதப் பொருக்கு ; தீப்பொறி ; நுண்பொடி ; தேங்காய்த் துருவல் ; சூரியனின் கதிர்படுதற்கு முன்னுள்ள பூநீற்றின் கதிர் ; இலை ; காண்க : முப்பூ ; இந்துப்பு ; வேள்வித் தீ ; கூர்மை ; நரகவகை ; பூப்பு ; பூமி ; பிறப்பு . |
| பூ | (வி) அலர் , மலர் . |
| பூக்கஞ்சா | ஒரு செடிவகை . |
| பூக்கட்டுதல் | மலர்மாலை தொடுத்தல் . |
| பூக்கம் | கமுகமரம் ; ஊர் ; மருதநிலத்தூர் . |
| பூக்கவர்ந்துண்ணி | குரங்கு . |
| பூக்காரன் | பூ விற்பவன் . |
| பூக்குட்டான் | நீளமாக முடைந்த பூக்கூடை வகை . |
| பூக்குடலை | நீளமாக முடைந்த பூக்கூடை வகை . |
| பூக்குதல் | நினைக்கை ; தோன்றுகை . |
| பூக்குழி | தீக்குழி . |
| பூக்குறடு | பூமாலை தொடுக்கும் மேடை . |
| பூக்கூடம் | பூமாலை தொடுக்கும் மேடை . |
| பூக்கொய்தல் | பூப்பறித்தல் . |
| பூக்கோணிலை | போரை மேற்கொள்ளும் போது வெட்சி முதலிய மலர்களை அரசனிடமிருந்து வீரன் பெற்றுக் கூறும் புறத்துறை . |
| பூக்கோள் | போரை மேற்கொள்ளும் போது வெட்சி முதலிய மலர்களை அரசனிடமிருந்து வீரன் பெற்றுக் கூறும் புறத்துறை . |
| பூகண்டகர் | உலகின் பகைவரான அசுரர் . |
| பூகண்டம் | பூவலயம் ; நிலப்பரப்பின் பெரும் பகுதி . |
| பூகதம் | கமுகமரம் ; பூமியை அடைந்தது . |
| பூகதம்பம் | நிலக்கடப்பஞ்செடி . |
| பூகதர் | புகழ்வோர் . |
| பூகதன் | பூமியை அடைந்தவன் . |
| பூகம் | பாக்குமரம் ; நேரம் ; ஒருவகைச் சாதிக்கூட்டம் ; திரட்சி ; திப்பிலிப்பனைமரம் ; இயல்பு ; இருள் ; நேரம் ; பிளப்பு ; கழுகு ; பலா . |
| பூகம்பம் | நிலநடுக்கம் ; சூரியன் நின்ற நாளுக்கு ஏழாம் நாள் . |
| பூகரம் | கையாந்தகரை . |
| பூகலம் | மதர்த்த குதிரை . |
| பூகாகம் | அன்றில் ; கரும்புறா . |
| பூகேசம் | ஆலமரம் ; நீர்ப்பாசி . |
| பூங்கஞ்சா | காண்க : பூக்கஞ்சா . |
| பூங்கணை | பூவாகிய அம்பு ; மன்மதபாணம் . |
| பூங்கதிர் | வெண்கதிர் ; ஒளி . |
| பூங்கரும்பு | செங்கரும்புவகை . |
| பூங்கருவி | ஒரு படைக்கலவகை . |
| பூங்கலன் | காண்க : பூக்குடலை . |
| பூங்கற்று | பூதம் ; அழகு . |
| பூங்கா | நந்தவனம் , பூஞ்சோலை . |
| பூங்காடு | இளங்காடு . |
| பூங்காரம் | பூநீற்றுக்காரம் ; மந்தாரம் . |
| பூங்காவனம் | காண்க : பூங்கா . |
| பூங்காவி | ஒரு காவிநிறவகை ; காவிக்கல்வகை . |
| பூங்கு | பல . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 792 | 793 | 794 | 795 | 796 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புனிதம் முதல் - பூங்கு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், அழகு, காண்க, முதலிய, மலர்களை, வெட்சி, போது, போரை, மேற்கொள்ளும், அரசனிடமிருந்து, வீரன், பூமியை, நேரம், புறத்துறை, கூறும், மேடை, பெற்றுக், பூங்கா, பூமாலை, மலர், யானையின், பொருள், அலங்காரம், புதுமை, பொலிவு, பூக்கஞ்சா, கமுகமரம், பூக்குடலை, சொல், பூக்கூடை, முடைந்த, நீளமாக, தொடுக்கும்

