தமிழ் - தமிழ் அகரமுதலி - பூங்குடம் முதல் - பூசிதம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| பூங்குடம் | பூக்களால் அலங்கரிக்கப்பட்டபானை . |
| பூங்கொடி | மலர்களைக்கொண்ட கொடி ; அழகிய கொடி . |
| பூங்கொத்து | பூவின் தொகுதி . |
| பூங்கொல்லை | காண்க : பூங்கா . |
| பூங்கோயில் | திருவாரூர்ச் சிவாலயம் . |
| பூங்கோரை | கோரைவகை . |
| பூச்சக்கரம் | பூ மண்டலம் ; நிலநடுக்கோடு ; சக்கரவாணம் . |
| பூச்சக்கரவாளக்குடை | கோயில்மூர்த்திகட்குப் பிடிக்கும் பெரிய வெண்குடை . |
| பூச்சக்கரன் | அரசன் . |
| பூச்சாண்டி | குழந்தைகளுக்கு அச்சமுண்டாக்கும் உருவம் . |
| பூச்சாரம் | நிலவளம் ; தாதுப்பொருள் . |
| பூச்சி | சிற்றுயிர் ; குடற்புழு ; குழந்தைகளை அச்சுறுத்தற்கேனும் சிரிப்பிப்பதற்கேனும் சொல்லும் சொல் . |
| பூச்சிக்கடி | பூச்சியின் கடி ; பூச்சியால் உடலிற் படரும் பற்று ; புண்கட்டிவகை . |
| பூச்சிகாட்டுதல் | அச்சுறுத்தல் . |
| பூச்சிதம் | மதிப்பு . |
| பூச்சிப்பல் | சொத்தைப் பல் . |
| பூச்சிபிடித்தல் | பண்டம் புழுவுண்டாகிக் கெட்டுப்போதல் ; இச்சகமாக நடத்தல் ; வேண்டாத இடத்துக் கவனமாகச் செயல் புரிதல் . |
| பூச்சிபூச்சியெனல் | அச்சுறுத்தற் குறிப்பு ; அச்சுறுதற் குறிப்பு . |
| பூச்சியத்துவம் | சிறப்புத் தன்மை . |
| பூச்சியம் | பகட்டு ; வழிபடத்தக்கது ; நன்கு மதிப்பு ; இன்மை ; இன்மைப்பொருள் உணர்த்தும் சுன்னம் ; திருவுளச்சீட்டு ; பயனின்மை காட்டும் வெற்றுச்சீட்டு ; நற்பேறின்மை ; அருமை ; குற்றமறைக்கை ; மதிப்பின்மை . |
| பூச்சியம்பண்ணுதல் | சிறப்பித்தல் ; குற்றம் முதலியன மறைத்தல் ; பழைய வீடு முதலியவற்றைப் புதிதாகக் கட்டுதல் ; பாக்கியின்றிக் கணக்குத் தீர்த்தல் ; தகாத மதிப்பு வரும்படி நடத்தல் ; இல்லாமற் செய்தல் . |
| பூச்சியவார்த்தை | கண்ணியப்பேச்சு . |
| பூச்சியன் | வழிபடத்தக்கவன் ; கறுப்பும் வெள்ளையுமான வண்டிமாடு . |
| பூச்சிலை | கல்வகை . |
| பூச்சு | தடவுகை ; மேற்பூசுகை ; வெளிப்பகட்டு ; கஞ்சிப்பசை ; மருந்துப்பற்று ; குற்றம் முதலியன மறைக்கை ; இதமான செயல் முதலியன , |
| பூச்சுவேலை | சுவர்களில் சுண்ணந்தீற்றும் வேலை ; மெருகிடும் வேலை ; வெளிப்பகட்டு . |
| பூச்சூட்டு | முதற் கருவுற்ற மகளிர்க்குச் செய்யும் ஒரு சடங்கு . |
| பூச்செண்டு | பூவினால் அமைந்த செண்டு . |
| பூச்சேலை | பூவேலை அமைந்த புடைவை . |
| பூச்சை | பூனை . |
| பூச்சொக்காய் | பூவேலையுள்ள துணியில் தைத்த சட்டை . |
| பூசகன் | அருச்சகன் . |
| பூசங்கள் | புனர்பூச பூச நாள்கள் . |
| பூசணம் | காண்க : பூஞ்சணம் ; அழுக்கு ; நேர்த்திக்கடனாக முடித்துவைக்கும் காசு முதலியன ; அணிகலன் . |
| பூசணி | கொடிவகை . |
| பூசந்தி | கடலைப் பிரிக்கும் சிறுநிலம் . |
| பூசம் | எட்டாம் நட்சத்திரம் . |
| பூசல் | போர் ; பேரொலி ; பலரறிகை ; கூப்பீடு ; வருத்தம் ; ஒப்பனை . |
| பூசல்நெற்றி | போர்முகம் . |
| பூசலிசைத்தல் | கலகச்சொல்லால் சண்டை மூட்டுதல் . |
| பூசலிடுதல் | முறையிடுதல் ; பேரொலிபடக் கதறுதல் ; கூட்டுதல் . |
| பூசற்களம் | போர்க்களம் . |
| பூசற்களரி | போர்க்களம் . |
| பூசற்பறை | பாலைநிலத்துப் பறையுள் ஒன்று . |
| பூசற்றுடி | பாலைநிலத்துப் பறையுள் ஒன்று . |
| பூசறுத்தல் | வாய் முதலியன கழுவும் தொழிலை முடித்தல் . |
| பூசன்மாற்று | நிரைகவர்ந்த வெட்சியார் மீட்க வந்த கரந்தையாரைப் போரில் அழித்தமை கூறும் புறத்துறை . |
| பூசனம் | ஆராதனை ; மரம் முதலியவற்றின்மேல் ஈர நைப்பினால் உண்டாகும் பாசி . |
| பூசனி | அடைக்கலாங்குருவி ; கொடிவகை ; மரம் முதலியவற்றின்மேல் ஈர நைப்பினால் உண்டாகும் பாசி . |
| பூசனை | நாள் வழிபாடு ; சிறப்பித்தல் . |
| பூசனைபடைத்தல் | வணக்கஞ்செய்தல் . |
| பூசாகாலம் | பூசைக்குரிய வேளை . |
| பூசாந்திரம் | அருமைபண்ணுகை ; மரவகை . |
| பூசாபலம் | பூசையின் பலன் ; தெய்வ வழிபாட்டால் உண்டாகும் பலன் . |
| பூசாரி | கோயிற்பூசை பண்ணுபவன் ; பேயோட்டும் மந்திரவாதி . |
| பூசாலி | கோயிற்பூசை பண்ணுபவன் ; பேயோட்டும் மந்திரவாதி . |
| பூசாவிதி | பூசைமுறை . |
| பூசாவிருத்தி | கோயிற்பூசைக்கு விடப்பட்ட இறையிலிநிலம் . |
| பூசித்தல் | பூசைசெய்தல் ; மரியாதை காட்டுதல் ; கொண்டாடுதல் . |
| பூசிதம் | காண்க : பூசிதை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 793 | 794 | 795 | 796 | 797 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பூங்குடம் முதல் - பூசிதம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், முதலியன, உண்டாகும், மதிப்பு, காண்க, ஒன்று, நைப்பினால், முதலியவற்றின்மேல், மரம், பலன், பேயோட்டும், மந்திரவாதி, பண்ணுபவன், கோயிற்பூசை, பறையுள், பாசி, கொடிவகை, குறிப்பு, சிறப்பித்தல், செயல், நடத்தல், கொடி, குற்றம், வெளிப்பகட்டு, போர்க்களம், சொல், அமைந்த, வேலை, பாலைநிலத்துப்

