முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » பார்வதம் முதல் - பாராட்டுக்காரன் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - பார்வதம் முதல் - பாராட்டுக்காரன் வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
பார்வதம் | காண்க : வாலுளுவை ; வேம்பு . |
பார்வதி | பருவதராசன் மகளான உமை ; திரௌபதி ; இடைச்சி ; காவிமண் ; ஆனைநெருஞ்சி . |
பார்வதேயம் | மலையிற் பிறப்பன . |
பார்வல் | பார்க்கை ; காவல் ; பறவைக்குஞ்சு ; மான் முதலியவற்றின் கன்று ; காண்க : பார்வைவிலங்கு . |
பார்வை | காட்சி ; கண் ; தோற்றம் ; நேர்த்தி ; மதிப்பு ; நோக்கி மந்திரிக்கை ; சூனியம் ; கண்ணோட்டம் ; சோதனை ; மேல்விசாரிப்பு ; கவனம் ; காண்க : பார்வைவிலங்கு . |
பார்வைக்காரன் | மந்திரித்து நோய் தீர்ப்போன் ; மதிப்பிடுவோன் ; மேலதிகாரி ; அஞ்சனமிட்டுப் புதையல் காண்போன் . |
பார்வைக்குறைவு | கட்புலன் மங்குகை ; பேணுதலில் உண்டாகும் குறை . |
பார்வைத்தாழ்ச்சி | அசட்டை ; பேணுதலில் உண்டாகும் குறை . |
பார்வைபார்த்தல் | நோய் தீர்க்க மந்திரமுச்சரித்தல் ; மதித்தல் ; ஆராய்தல் ; ஏவல்வைத்தல் . |
பார்வைமான் | காண்க : பார்வைவிலங்கு . |
பார்வையிடுதல் | காண்க : பார்வைபார்த்தல் . |
பார்வைவிலங்கு | விலங்குகளைப் பிடிப்பதற்காகப் பழக்கப்பட்ட விலங்கு . |
பாரகம் | பூமி ; திரைச்சீலை ; தோணி . |
பாரகன் | சுமப்பவன் ; தாங்குபவன் ; கல்விமிகக் கற்றவன் . |
பாரகாவியம் | பெருங்காப்பியம் . |
பாரங்கதன் | கல்விக்கடலில் கரைகண்டவன் . |
பாரங்கம் | இலவங்கப்பட்டை . |
பாரங்கு | சிறுதேக்கு ; காட்டிலவு ; நரிவாழை . |
பாரச்சுமை | கனத்த சுமை . |
பாரசிகை | பருந்து . |
பாரணம் | உண்ணுகை ; பட்டினியிருந்து உண்ணல் ; மனநிறைவு ; மேகம் . |
பாரணை | காண்க : பாரணம் ; பாரிப்பு . |
பாரத்தனம் | பெருமிதம் . |
பாரத்துவாசம் | வலியன்குருவி , கரிக்குருவி ; காண்க : காடை ; கற்பநூலுள் ஒன்று ; எலும்பு . |
பாரத்தொந்தரை | தொந்தரவுமிக்க பெருஞ்செயல் . |
பாரதகண்டம் | இந்திய நாடு . |
பாரதந்திரியம் | பிறன்வயமாதல் . |
பாரதப்போர் | பாண்டவ கௌரவர் போர் ; பெருஞ்சச்சரவு . |
பாரதம் | இந்திய நாடு ; பாரதப்போர் ; மகாபாரதம் ; மிக விரிவுடைய செய்தி ; பாதரசம் . |
பாரதர் | பாண்டவர் கௌரவர் உள்ளிட்ட பரதவமிசத்தவர் ; பாரத நாட்டினர் . |
பாரதவருடம் | காண்க : பாரதகண்டம் . |
பாரதாரிகம் | காண்க : பாரதாரியம் . |
பாரதாரிகன் | பிறன்மனைவியை விரும்புபவன் . |
பாரதாரியம் | பிறன்மனை விழைகை . |
பாரதி | கலைமகள் ; பைரவி ; பண்டிதன் ; சொல் ; மரக்கலம் . |
பாரதிக்கை | இணைக்கைவகை . |
பாரதியரங்கம் | சுடுகாடு . |
பாரதிவிருத்தி | கூத்தன் தலைவனாகவும் நடன் நடிகை பொருளாகவும் வரும் நாடகவகை . |
பாரதூரம் | மிகத் தொலைவு ; முதன்மையானது ; ஆழ்ந்த முன்யோசனை . |
பாரப்படுதல் | பொறுப்புமிகுதல் ; சுமைமிகுதல் ; நீதிமன்றத்தில் விசாரணைக்கு வைக்கப்படுதல் . |
பாரப்பழி | பெருங்குற்றம் . |
பாரப்புரளி | பெரும்பொய் ; பெருங்குறும்பு . |
பாரபட்சம் | ஒரு தலைச்சார்பு . |
பாரபத்தியக்காரன் | மேல்விசாரணை செய்யும் அதிகாரி ; வரி வசூலிக்கும் அதிகாரி முதலியோர் ; அலுவலகன் ; பொறுப்பான வேலையுள்ளவன் . |
பாரபத்தியம் | மேல்விசாரணை ; நீதிபதியின் அதிகாரம் ; பொறுப்புமிக்க வேலை ; கொடுக்கல் வாங்கல் . |
பாரம் | பூமி ; பருத்திச்செடி ; பொறுக்கை ; கனம் ; சுமை ; ஒரு நிறைவகை ; பொறுப்பு ; பெருங்குடும்பம் ; கொடுமை ; சுரத்தால் வரும் தலைக்கனம் ; பெருமை ; கடமை ; ஒப்புவிக்கை ; குதிரைக்கலணை ; கவசம் ; தோணி ; காவுதடி ; கரை ; முடிவு ; விளையாட்டுவகை ; பாதரசம் . |
பாரம்பரம் | காண்க : பாரம்பரியம் . |
பாரம்பரியநியாயம் | மரபுவழியாக வரும் வழக்கம் . |
பாரம்பரியம் | மரபுவழி , பரம்பரை ; முறைமை . |
பாரம்பரியரோகம் | மரபுவழியாய் வரும் நோய் . |
பாரம்பரை | காண்க : பாரம்பரியம் . |
பாரமார்த்திகம் | முடிவில் உண்மையானது ; உண்மை அறிவிற்குரியது ; கபடமற்ற தன்மை ; ஈடுபாடு . |
பாரமிதம் | மேலானது . |
பாரமேட்டி | ஒருவகைத் துறவி . |
பாரவதம் | புறா . |
பாரவம் | வில்லின் நாண் . |
பாராசாரி | பெருங்குதிரை . |
பாராட்டு | புகழ்ச்சி ; அன்புசெய்தல் ; விரித்துரைக்கை ; பகட்டுச்செயல் ; கொண்டாடுதல் . |
பாராட்டுக்காரன் | பகட்டன் ; புனைந்து கூறுவோன் . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 749 | 750 | 751 | 752 | 753 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பார்வதம் முதல் - பாராட்டுக்காரன் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, பார்வைவிலங்கு, வரும், பாரம்பரியம், நோய், கௌரவர், பாரதப்போர், நாடு, பாதரசம், மேல்விசாரணை, அதிகாரி, இந்திய, பாரதாரியம், பாரணம், குறை, உண்டாகும், பேணுதலில், பார்வைபார்த்தல், பூமி, சொல், சுமை, தோணி, பாரதகண்டம்