தமிழ் - தமிழ் அகரமுதலி - பாது முதல் - பாய்கலைப்பாவை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| பாது | பங்கு ; கதிரவன் ; காவல் . |
| பாதுகம் | காண்க : பாதுகை . |
| பாதுகாத்தல் | காப்பாற்றுதல் ; வாராமல் தடுத்தல் ; ஓம்புதல் . |
| பாதுகாப்பு | ஆதரித்தல் ; காப்பாற்றுதல் . |
| பாதுகாவல் | ஆதரித்தல் ; காப்பாற்றுதல் . |
| பாதுகை | செருப்பு ; சிறுசெருப்படைப்பூடு . |
| பாதுகைக்கொட்டை | மிதியடியின் குமிழ் . |
| பாதேயம் | கட்டுச்சோறு . |
| பாதை | வழி ; ஒற்றையடி வழி ; முறை ; மிதவை ; துன்பம் . |
| பாதோதகம் | பெரியோரின் திருவடிகளைக் கழுவிய நீர் . |
| பாந்தம் | உறவுமுறை ; சாதிக்கட்டு ; இணக்கம் ; ஒழுங்கு ; பகரவிறுதி . |
| பாந்தல் | பதுங்கல் ; துன்பம் . |
| பாந்தவம் | உறவுமுறை . |
| பாந்தவியம் | உறவுமுறை . |
| பாந்தள் | பாம்பு ; மலைப்பாம்பு . |
| பாந்தன் | வழிச்செல்வோன் . |
| பாந்து | பொந்து ; சுவர்க்கற்களின் இடையிலுள்ள சந்து ; மேற்கட்டடத்தில் கட்டைகளுக்கு மத்தியிலுள்ள இடம் ; எருதுகள் ; வளைவுக்கும் சுவருக்குமிடையிலுள்ள பாகம் . |
| பாந்துக்கிணறு | பக்கங்களில் பொந்துவிழுந்த கிணறு . |
| பாந்துதல் | பதுங்குதல் ; பிறாண்டுதல் . |
| பாந்தை | பொந்து . |
| பாப்படுத்தல் | பரப்பி விரித்தல் . |
| பாப்பம் | சோறு . |
| பாப்பா | பாவை ; சிறுகுழந்தை ; கண்ணின் கருவிழி . |
| பாப்பாச்சி | பாவை ; ஒரு மிதியடிவகை . |
| பாப்பாத்தி | காண்க : பார்ப்பனி ; வண்ணத்துப் பூச்சி ; கழுகுவகை . |
| பாப்பான் | காண்க : பார்ப்பான் . |
| பாப்பு | காண்க : பார்ப்பான் ; ரோமன் கத்தோலிக்க மதகுரு . |
| பாப்புப்பகை | பாம்பின் பகையான கருடன் . |
| பாப்புரி | காண்க : பாம்புரி . |
| பாபக்கிரகம் | இராகு , சனி , செவ்வாய் என்னும் தீக்கோள்கள் . |
| பாபசங்கீர்த்தனம் | பாவம் நீங்க அவற்றைக் குருவிடம் தெரிவித்தல் . |
| பாபத்தி | வேட்டை . |
| பாபதத்தம் | தீவினைகளிற் செலவழிக்கப்படும் பொருள் ; கள்வர் முதலியோரால் கவரப்படும் பொருள் . |
| பாபம் | காண்க : பாவம் . |
| பாபமூர்த்தி | வேடன் . |
| பாபி | காண்க : பாவி . |
| பாபு | மேன்மைப்பொருளில் வரும் ஒரு பட்டப்பெயர் ; தலைவன் ; கதவு ; பகுதி ; கணக்கின் தலைப்பு . |
| பாம்பணை | ஆதிசேடனாகிய படுக்கை . |
| பாம்பாட்டி | பாம்பைப் பிடித்துப் பழக்கி ஆட்டுபவன் ; பாம்பாட்டிச்சித்தர் ; வரிக்கூத்துவகை . |
| பாம்பாடி | காளிங்கன் என்னும் பாம்பின்மீது ஆடிய கண்ணன் . |
| பாம்பு | ஊரும் உயிர்வகை ; இராகு அல்லது கேது ; நாணலையும் வைக்கோலையும் பரப்பி மண்ணைக் கொட்டிச் சுருட்டப்பட்ட திரணை ; ஆயிலியநாள் ; நீர்க்கரை ; தாளக்கருவிவகை . |
| பாம்புக்கண்ணி | காண்க : சங்கங்குப்பி . |
| பாம்புக்குத்தச்சன் | பாம்புக்கு மனைகட்டும் தச்சனாகிய கறையான் . |
| பாம்புத்தச்சன் | பாம்புக்கு மனைகட்டும் தச்சனாகிய கறையான் |
| பாம்புகண்டசித்தன் | கறையானை உண்ணப்புற்றில் வாய்வைத்து உறிஞ்சும்போது பாம்பைக் காணும் சித்தனாகிய கரடி . |
| பாம்புச்செவி | கூர்மையான செவியுணர்வு . |
| பாம்புண்பறவை | பாம்பை உண்ணும் கருடன் . |
| பாம்புணிக்கருங்கல் | ஒரு கல்வகை . |
| பாம்புத்திசை | மேற்கு . |
| பாம்புப்புற்று | பாம்பின் வளை . |
| பாம்புரி | பாம்புத்தோல் ; அகழி ; மதிலுறுப்பு ; அகழில் இறங்க உதவும் படிக்கட்டு . |
| பாம்புவயிறு | நீண்டு ஒட்டிய வயிறு . |
| பாம்புவிரல் | நடுவிரல் . |
| பாமகள் | கலைமகள் . |
| பாமடந்தை | கலைமகள் . |
| பாமம் | பரப்பு ; சிரங்கு ; புண் ; கோபம் ; ஒளி . |
| பாமரம் | மூடத்தனம் ; மூடன் . |
| பாமரன் | அறிவிலான் ; இழிந்தோன் ; அரசற்குத் துணைவன் . |
| பாமன் | சூரியன் ; மைத்துனன் . |
| பாமாரி | கந்தகம் . |
| பாமாலை | பாக்களால் தொடுக்கப்பெற்ற மாலை . |
| பாமினி | பெண் . |
| பாமை | சிரங்கு ; சத்தியபாமை . |
| பாய் | கோரை முதலியவற்றால் முடைந்த விரிப்புவகை ; கப்பற்பாய் ; வேலைக்காரன் ; பரவுதல் ; பரப்பு . |
| பாய் | (வி) தாவு ; தாண்டு ; குதி ; பரவு . |
| பாய்க்கிடை | நோயால் படுத்தபடுக்கையாய் இருக்கும் நிலை . |
| பாய்கலைப்பாவை | பாயும் கலைமானை ஊர்தியாக உடைய கொற்றவை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 747 | 748 | 749 | 750 | 751 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாது முதல் - பாய்கலைப்பாவை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, உறவுமுறை, காப்பாற்றுதல், பாம்புக்கு, மனைகட்டும், பொருள், தச்சனாகிய, பாவம், கலைமகள், பாய், சிரங்கு, பரப்பு, என்னும், கறையான், கருடன், பாம்பு, துன்பம், ஆதரித்தல், பாதுகை, பொந்து, பரப்பி, பாம்புரி, பாம்பின், பார்ப்பான், பாவை, இராகு

