தமிழ் - தமிழ் அகரமுதலி - பாடம் முதல் - பாடுநர் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| பாடம் | படிக்கும் நூற்பகுதி ; படிப்பு ; மூலபாடம் ; வேதபாடம் ; பார்க்காமல் ஒப்பிக்கும்படி கைவந்தது ; தெரு ; இடையர் வீதி ; உடன்பாடு ; கடுமை ; மிகுதி ; பாரம் வைத்து அழுத்துகை ; பதப்படுத்துகை ; மணி முதலியவற்றின் ஒளி ; முடிமாலை ; வெற்றிலை ; சொல் . |
| பாடம்பண்ணுதல் | மனப்பாடமாக்கல் ; ஓலை முதலியவற்றை அடுக்கிவைத்தல் ; தோலைப்பதனிடுதல் ; புகையிலை முதலியவற்றைப் பக்குவப்படுத்துதல் . |
| பாடம்போற்றுதல் | படித்த பாடத்தைச் சிந்தித்தல் . |
| பாடல் | பாடுகை ; இசைப்பா ; இசை ; பாட்டு ; புகழ் ; படிக்கை ; பாகல் ; காண்க : பாடலிபுரம் . |
| பாடல்பெற்றதலம் | நாயன்மார்களாலேனும் ஆழ்வார்களாலேனும் பாடப்பெற்ற ஊர் . |
| பாடலம் | சிவப்பு ; வெண்சிவப்பு ; குங்குமம் ; குதிரை ; சேரன் குதிரை ; பாதிரிமரம் ; மழைக் காலத்தில் விளையும் நெல் ; சூளுரை . |
| பாடலி | பாதிரிமரம் ; பாடலிபுரம் என்னும் நகரம் ; கள் ; ஒரு நெல்வகை ; ஒரு கொடிவகை . |
| பாடலிபுரம் | கங்கை சோணையாறுகள் கலக்குமிடத்தில் இருந்த மகத நாட்டின் தலைநகர் . |
| பாடலை | ஒரு மரவகை ; துர்க்கை ; பாடலிபுரம் . |
| பாடவம் | வடவைத்தீ ; வல்லமை ; களிப்பு ; நலம் ; மகளிர் காலணி . |
| பாடவள் | பாடுபவள் ; மிதுனராசி . |
| பாடவன் | பாடுபவன் ; மிதுனராசி . |
| பாடவை | மிதுனராசி . |
| பாடற்பயன் | இன்பம் , தெளிவு , நிறைவு , ஒளி , வன்சொல் , இறுதி , மந்தம் , உச்சம் என்னும் எண்வகையான இசைப்பயன் . |
| பாடன்மகடூஉ | விறலி . |
| பாடன்மகள் | விறலி . |
| பாடனம் | பேசுகை ; போதிக்கை ; பாடுகை ; பிளக்கை . |
| பாடனுபவித்தல் | வருந்துதல் . |
| பாடாகுதல் | கெடுதியடைதல் ; அழுதல் . |
| பாடாண் | பாட்டுடைத் தலைவனது புகழ் , வலி , கொடை , அளி முதலியவற்றைப் புகழ்ந்து கூறும் புறத்துறை . |
| பாடாண்திணை | பாட்டுடைத் தலைவனது புகழ் , வலி , கொடை , அளி முதலியவற்றைப் புகழ்ந்து கூறும் புறத்துறை . |
| பாடாணம் | கல் ; மருந்துச் சரக்கு ; எண்வகை இன்பங்களுள் பாறைநிலமும் அவற்றில் உண்டாகும் பொருள்களும் . |
| பாடாந்தரம் | பாடவேறுபாடு ; வேற்றுமொழி . |
| பாடாய்முடிதல் | கெடுதியாய் முடிதல் . |
| பாடாயடித்தல் | கடுமையாகப் புடைத்தல் . |
| பாடாயழிதல் | மிகக் கேடுறுதல் . |
| பாடாவதி | துன்பம் ; பயனற்றது . |
| பாடாவறுதி | மிகுபாடு ; பேரிழப்பு ; அடிபட்டுப் படுக்கையாகக் கிடக்கை . |
| பாடாற்றுதல் | துன்பம் பொறுத்துக்கொள்ளுதல் . |
| பாடி | நகரம் ; சேரி ; முல்லைநிலத்தூர் ; காண்க : பாடிவீடு ; கவசம் ; படை ; உளவாளி ; பாடுபவர் ; பாடிப் பிச்சையெடுப்போன் ; ஒரு பண்வகை ; ஓர் ஊர் . |
| பாடிக்கதை | வீண்பேச்சு . |
| பாடிக்கொடுத்தல் | பிறனுக்காகப் பாடலியற்றித் தருதல் ; பாடல் இயற்றுதல் . |
| பாடிகாப்பார் | ஊர்காவலர் . |
| பாடிகாவல் | ஊர்காவல் ; தலையாரி ஊர் காவற்கு வாங்கும் வரி ; பாதுகாவல் ; வழக்கு விசாரித்து ஒப்பநாடிச் செய்யும் ஒறுப்பு . |
| பாடிசொல்லுதல் | உளவை வெளிப்படுத்துதல் . |
| பாடிதம் | உச்சரிக்கப்படுவது . |
| பாடிமாற்றம் | வழக்குச் சொற்கள் . |
| பாடிமிழ்தல் | ஒலித்தல் . |
| பாடியகாரர் | பேருரைகாரர் ; பதஞ்சலி ; பிரமசூத்திரத்திற்குப் பேருரை இயற்றிய இராமானுசாசாரியர் . |
| பாடியம் | பேருரை . |
| பாடிரம் | ஒரு கிழங்குவகை ; சந்தனம் ; துத்தநாகம் ; முகில் ; மூங்கிலரிசி ; கீல்வாதம் ; வயல் . |
| பாடிலம் | நாடு . |
| பாடிவீடு | பாசறை . |
| பாடிவீரர் | படைவீரர் . |
| பாடினி | பாணர்சாதிப் பெண் . |
| பாடீரம் | சந்தனம் ; முகில் ; கீல்வாதம் ; மூங்கிலரிசி ; கிழங்குவகை ; துத்தநாகம் ; வயல் . |
| பாடு | உண்டாகை ; நிகழ்ச்சி ; அனுபவம் ; முறைமை ; நிலைமை ; செவ்வி ; கடமை ; கூறு ; பயன் ; உலகவொழுக்கம் ; குணம் ; பெருமை ; அகலம் ; ஓசை ; உடல் ; உழைப்பு ; தொழில் ; வருத்தம் ; படுக்கைநிலை ; விழுகை ; தூக்கம் ; சாவு ; கேடு ; குறைவு ; பூசுகை ; மறைவு ; நீசராசி ; இடம் ; பக்கம் ; அருகு ; ஏழாம் வேற்றுமையுருபு . |
| பாடுகாட்டுதல் | சாய்ந்துவிழுதல் . |
| பாடுகாயம் | படுகாயம் . |
| பாடுகிடத்தல் | வரங்கிடத்தல் . |
| பாடுதல் | பண் இசைத்தல் ; வண்டு முதலியன இசைத்தல் ; பாட்டியற்றல் ; பாட்டு ஒப்பித்தல் ; பாராட்டுதல் ; துதித்தல் ; கூறுதல் ; வைதல் . |
| பாடுதாங்குதல் | துணைநிற்றல் . |
| பாடுதுறை | புலவர் பாடுதற்குரிய போர்த்துறை ; தத்துவராயர் செய்த ஒரு நூல் . |
| பாடுநர் | புலவர் ; இசைபாடுவோர் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 743 | 744 | 745 | 746 | 747 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடம் முதல் - பாடுநர் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், பாடலிபுரம், புகழ், மிதுனராசி, முதலியவற்றைப், பேருரை, கிழங்குவகை, பாடிவீடு, புறத்துறை, துன்பம், சந்தனம், மூங்கிலரிசி, இசைத்தல், புலவர், வயல், கீல்வாதம், முகில், கூறும், துத்தநாகம், தலைவனது, காண்க, குதிரை, பாட்டு, பாடுகை, பாடல், பாதிரிமரம், என்னும், சொல், கொடை, பாட்டுடைத், விறலி, நகரம், புகழ்ந்து

