தமிழ் - தமிழ் அகரமுதலி - பாசகரன் முதல் - பாசிமணி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| பாசகரன் | பாசத்தைக் கையிலுடைய யமன் . |
| பாசகன் | காண்க : பாகுவன் . |
| பாசகுசுமம் | இலவங்கமரம் . |
| பாசஞானம் | வாக்குகளாலும் கலாதி ஞானத்தாலும் அறியும் அறிவு ; அறியாமை . |
| பாசடம் | வெற்றிலை . |
| பாசடை | பசுமையான இலை . |
| பாசண்டச்சாத்தன் | சமயநூல்களில் வல்லவனான ஐயனார் . |
| பாசண்டம் | தொண்ணூற்றாறுவகைச் சமயசாத்திரக் கோவை ; புறச்சமயக் கொள்கை ; வேத ஒழுக்கத்திற்கு வேறான சமயம் . |
| பாசண்டிமூடம் | புறமதத்தவரைப் போற்றும் மடமை . |
| பாசத்தளை | காண்க : பாசக்கட்டு . |
| பாசத்தன் | யமன் ; வருணன் ; விநாயகன் . |
| பாசதரன் | யமன் ; வருணன் ; விநாயகன் . |
| பாசநாசம் | குருவின் அருளால் ஆணவம் , கன்மம் , மாயை என்னும் மும்மலங்களை நீக்குகை . |
| பாசநாசன் | கடவுள் . |
| பாசபந்தம் | காண்க : பாசக்கட்டு ; பாசக்கயிறு . |
| பாசபாணி | சிவன் ; வருணன் ; யமன் ; விநாயகன் . |
| பாசம் | ஆசை ; அன்பு ; கயிறு ; கயிற்று வடிவமான ஆயுதவகை ; படை அணிவகுப்புவகை ; தளை ; மும்மலம் ; ஆணவமலம் ; பற்று ; கட்டு ; பத்தி ; கவசம் ; தையல் ; ஊசித்துளை ; நூல் ; சுற்றம் ; பேய் ; சீரகம் . |
| பாசமாலை | கழுத்தணிவகை . |
| பாசமோசனம் | காண்க : பாசவிமோசனம் . |
| பாசருகம் | காண்க : அகில் . |
| பாசவர் | வெற்றிலை விற்போர் ; ஆட்டிறைச்சி விற்போர் ; இறைச்சி விற்போர் . |
| பாசவல் | செவ்வி அவல் ; பசுமையான விளைநிலம் . |
| பாசவிமோசனம் | உயிர் உலகப்பற்றிலிருந்து நீங்குகை . |
| பாசவினை | பந்தத்திற்கு ஏதுவாகிய வினை . |
| பாசவீடு | மும்மலங்களிலிருந்து விடுபடுகை . |
| பாசவைராக்கியம் | உலகப் பொருள்களில் வெறுப்பு . |
| பாசறவு | பற்றறுகை ; நிறத்தின் அழிவு ; துயரம் . |
| பாசறை | போர்க்களத்தில் படைகள் தங்கும் இடம் ; ஒரு மரவகை ; மணியாசிப்பலகை ; துன்பம் ; பசிய இலையால் செறிந்த முழை . |
| பாசறைமுல்லை | ஒருவகைத் துறை , பாசறையில் தலைமகன் தலைவியை நினைக்கும் புறத்துறை . |
| பாசன் | சிற்றுயிர் , சீவான்மா ; யமன் , வருணன் ; சிவபெருமான் . |
| பாசனக்கால் | நிலங்களுக்குப் பாயும் வாய்க்கால் . |
| பாசனம் | வெள்ளம் ; நீர்பாய்ச்சுதல் ; வயிற்றுப்போக்கு ; பாண்டம் ; உண்கலம் ; மட்கலம் ; மரக்கலம் ; தங்குமிடம் ; ஆதாரம் ; சுற்றம் ; பங்கு ; பிரிவுக்கணக்கு ; நீக்கம் ; நெருப்பு ; ஒரு மருந்துவகை ; புளிப்பு . |
| பாசாங்கடித்தல் | போலியாக நடித்தல் . |
| பாசாங்கு | போலி நடிப்பு ; வஞ்சகம் . |
| பாசாங்குக்காரன் | பாசாங்கு செய்வோன் . |
| பாசாங்குக்காரி | பாசாங்கு செய்பவள் . |
| பாசாங்குசதரன் | பாசத்தையும் அங்குசத்தையும் தாங்கியிருப்பவனாகிய கணபதி . |
| பாசாங்குசன் | பாசத்தையும் அங்குசத்தையும் தாங்கியிருப்பவனாகிய கணபதி . |
| பாசாண்டி | புறச்சமயநூல் வல்லோன் . |
| பாசாணபேதி | நெருஞ்சிமுள் ; சிறுநெருஞ்சி . |
| பாசி | பசுமையுடையது ; நீர்ப்பாசி ; கடற்பாசி ; நெட்டிப்புல் ; பூஞ்சணம் ; காண்க : சிறுபயறு ; குழந்தைகளின் கழுத்தணிக்கு உதவும் மணிவகை ; மேகம் ; காண்க : பாசிநிலை ; வருணன் ; யமன் ; நாய் ; ஆன்மா ; கிழக்கு ; மீன்பிடிப்பு ; மீன் சமைத்தல் . |
| பாசித்தீர்வை | மீன் பிடித்துக்கொள்வதற்குக் கொடுக்கும் வரி . |
| பாசிதம் | பிரிக்கப்பட்ட பங்கு ; வகுத்த ஈவு . |
| பாசிதூர்த்துக்கிடத்தல் | அழுக்குப் பிடித்துக் கிடத்தல் . |
| பாசிநிலை | பகைவருடைய வலிகெட அவருடைய அகழிடத்துப் பொருதலைக் கூறும் புறத்துறை . |
| பாசிநீக்கம் | சொல்தோறும் அடிதோறும் பொருள் ஏற்றுவரும் பொருள்கோள் . |
| பாசிநீக்கு | சொல்தோறும் அடிதோறும் பொருள் ஏற்றுவரும் பொருள்கோள் . |
| பாசிப்படை | திடீரென்று தாக்கும் படை ; பலமுள்ள படை ; கைவிட்ட நம்பிக்கை . |
| பாசிப்பயறு | ஒரு பயறுவகை . |
| பாசிப்பருவம் | மீசையின் இளம்பருவம் . |
| பாசிப்பாட்டம் | மீன்பிடிப்பதற்கு இடும் வரி . |
| பாசிபடர்தல் | பாசிபிடித்தல் . |
| பாசிபந்து | தோளணிவகை . |
| பாசிபற்றினபல் | ஊத்தையும் பசுமைநிறமும் பிடித்த அழுக்குப் பல் . |
| பாசிபற்றுதல் | பாசியுண்டாதல் . |
| பாசிபிடித்தல் | பாசியுண்டாதல் . |
| பாசிபூத்தல் | காண்க : பாசிபற்றுதல் ; பழமையாதல் . |
| பாசிமணி | கரிய மணிவடம் ; பச்சை மணிவடம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 741 | 742 | 743 | 744 | 745 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாசகரன் முதல் - பாசிமணி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, யமன், வருணன், விற்போர், பாசாங்கு, விநாயகன், பொருள், அழுக்குப், அடிதோறும், சொல்தோறும், பொருள்கோள், பாசியுண்டாதல், மணிவடம், பாசிபற்றுதல், பாசிபிடித்தல், மீன், ஏற்றுவரும், அங்குசத்தையும், சுற்றம், பாசக்கட்டு, பசுமையான, வெற்றிலை, பாசவிமோசனம், புறத்துறை, கணபதி, தாங்கியிருப்பவனாகிய, பாசத்தையும், பங்கு, பாசிநிலை

