தமிழ் - தமிழ் அகரமுதலி - பாடுபடுத்துதல் முதல் - பாணா வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| பாடுபடுத்துதல் | துன்பப்படுத்துதல் ; கடின வேலை வாங்குதல் . |
| பாடுபடுதல் | மிக உழைத்தல் ; வருத்தப்படுதல் . |
| பாடுபறப்பு | கவலை . |
| பாடுபார்த்தல் | தன் வேலையைக் கவனித்தல் ; நிமித்தம்பார்த்தல் . |
| பாடுபெயல் | விடாமழை . |
| பாடுவன் | பாடகன் ; பாணன் . |
| பாடுவான் | பாடகன் ; பாணன் . |
| பாடுவி | புகழ்பவள் . |
| பாடுவிச்சி | பாண்மகள் . |
| பாடுவித்தல் | பாடச்செய்தல் . |
| பாடேடு | தாயேடு ; மூலப் படி . |
| பாடை | பிணக்கட்டில் ; மொழி ; ஆணை ; சூள் ; குறிஞ்சி யாழ்த்திறவகை ; காண்க : வட்டத்திருப்பி ; பருத்தி . |
| பாடைகுலைத்தான் | பாகற்கொடி . |
| பாடைகூறுதல் | சூளுரைத்தல் ; ஆணையிடுதல் . |
| பாடைப்பாடல் | அகநாடகங்களுக்கும் புற நாடகங்களுக்கும் உரிய செய்யுள் உருக்கள் . |
| பாடோடிக்கிடத்தல் | காண்க : பாடுகிடத்தல் ; துயரத்தினால் கிடையாய்ப் படுத்திருத்தல் . |
| பாண் | பாட்டு ; காண்க : பாணாற்றுப்படை ; பாணர்சாதி ; புகழ்ச்சொல் ; தாழ்ச்சி ; பாழாக்குவது . |
| பாண்டம் | கொள்கலம் ; பாத்திரம் ; மட்கலம் ; உடம்பு ; வயிற்றுவீக்கநோய் ; காண்க : பாண்டரங்கம் . |
| பாண்டரங்கம் | முப்புரத்தை எரித்த காலத்தில் சிவன் வெண்ணீறணிந்து ஆடிய கூத்து . |
| பாண்டரங்கன் | பாண்டரங்கக் கூத்தாடிய சிவன் . |
| பாண்டரம் | வெண்மை ; செஞ்சுண்ணாம்பு ; காண்க : பாண்டல் . |
| பாண்டரம்பிடித்தல் | அழுக்குப்பிடித்தல் . |
| பாண்டல் | பழமை ; பாசிபிடித்து நாறுகை . |
| பாண்டல்நாற்றம் | தீநாற்றம் . |
| பாண்டல்நெய் | நாற்ற நெய் . |
| பாண்டலடித்தல் | தீநாற்றம் வீசுதல் . |
| பாண்டவர் | பாண்டுவின் மைந்தர்களான தருமன் , வீமன் , அருச்சுனன் , நகுலன் , சகாதேவன் ஆகியோர் . |
| பாண்டவர்படுக்கை | சமணத் துறவியரின் மலைக் கற்படுக்கை . |
| பாண்டாகாரம் | பண்டசாலை ; நிதி அறை , கருவூல அறை . |
| பாண்டி | பாண்டிய நாடு ; கூடாரப்பண்டி ; மாட்டு வண்டி ; எருது ; பல்லாங்குழிப் பலகை ; சிறு பிள்ளை விளையாட்டு ; தக்கேசிப் பண் . |
| பாண்டிக்குறவன் | மலைநாட்டுத் தமிழ்க் குறவன் . |
| பாண்டிகம் | பறைவகை . |
| பாண்டிகன் | திருப்பள்ளியெழுச்சி பாடுவோன் . |
| பாண்டித்தியம் | கல்வித்திறம் . |
| பாண்டிமண்டலம் | பாண்டிய நாடு . |
| பாண்டியம் | பாண்டிய நாடு ; எருது ; உழவு . |
| பாண்டியன் | பாண்டியநாட்டு வேந்தன் . |
| பாண்டில் | வட்டம் ; விளக்குத்தகழி ; கிண்ணி ; கஞ்சதாளம் ; குதிரைபூட்டிய தேர் ; இரண்டு உருளையுடைய வண்டி ; தேர்வட்டை ; வட்டக்கட்டில் ; கண்ணாடி ; வட்டத்தோல் ; நாடு ; குதிரைச் சேணம் ; எருது ; இடபராசி ; விளக்கின் கால் ; வாகைமரம் ; காண்க : சாத்துக்குடி ; மூங்கில்மரம் . |
| பாண்டில்விளக்கு | கால்விளக்கு . |
| பாண்டிவடம் | கண்ணபிரான் கன்றுகள் மேய்த்த பகுதி . |
| பாண்டிற்காசு | வட்டக்காசு என்ற அணிகலவகை . |
| பாண்டீரம் | ஆல் ; வெண்மை . |
| பாண்டு | வெண்மை ; காமாலை ; ஒரு நோய் வகை ; நீர்க்கோவை ; பஞ்ச பாண்டவர்களின் தந்தை ; காண்க : சிறுபூளை . |
| பாண்டுகம் | வெண்மை ; நோய்வகை . |
| பாண்டுகம்பளம் | இந்திரன் இருக்கை . |
| பாண்டுநாகம் | வெள்ளையானையாகிய ஐராவதம் . |
| பாண்டுரம் | காண்க : பாண்டுகம் . |
| பாண்டுராகம் | வெண்மை . |
| பாண்டுரை | பாதிரிமரம் . |
| பாண்டுரோகம் | நோய்வகை . |
| பாண்டை | தீநாற்றம் . |
| பாண்டைநாறி | கெட்ட நாற்றம் வீசுகிற பெண் ; முன்கோபி . |
| பாண்மகள் | பாடுபவள் , பாடினி . |
| பாண்மகன் | பாணன் . |
| பாண்மை | பாணன் தன்மை ; தாழ்ச்சி . |
| பாணக்கலப்பை | இராமபாணமென வழங்கப்படும் பூச்சியாகிய கலப்பை . |
| பாணச்சி | காண்க : பாணிச்சி . |
| பாணத்தி | காண்க : பாணிச்சி . |
| பாணந்தொடுத்தல் | அம்பெய்தல் ; கெடுக்க வழி தேடுதல் ; வசைமாரி பொழிதல் . |
| பாணம் | அம்பு ; ஆகாசவாணம் ; காண்க : திப்பிலி ; செடிவகை ; ஓரங்க நாடகவகை ; பட்டாடை ; காண்க : இராமபாணம் . |
| பாணன் | பாடுங்குலத்தான் ; தையற்காரன் ; வீணன் ; காண்க : காட்டாமணக்கு ; சிவபக்தனான ஓரசுரன் . |
| பாணா | வயிறுபருத்த பானை ; பருத்த பீசம் ; மண்சட்டி ; சிலம்பக்கழி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 744 | 745 | 746 | 747 | 748 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடுபடுத்துதல் முதல் - பாணா வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, பாணன், வெண்மை, நாடு, எருது, தீநாற்றம், பாண்டிய, வண்டி, பாண்டுகம், பாணிச்சி, நோய்வகை, பாண்டல், பாண்மகள், தாழ்ச்சி, பாண்டரங்கம், சிவன், பாடகன்

