தமிழ் - தமிழ் அகரமுதலி - பாக்குவெட்டி முதல் - பாசகம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| பாக்குவெட்டி | பாக்குச் சீவுங் கருவி . |
| பாக்குவெற்றிலை | தாம்பூலம் . |
| பாக்குவைத்தல் | தாம்பூலம் வைத்தல் ; பாக்கு வைத்து மணத்திற்கு அழைத்தல் ; பிறருக்குத் தீங்கு உண்டாகும்படி சூழ்ச்சிசெய்தல் . |
| பாக்கை | நெய்தல்நிலத்தூர் ; ஊர் . |
| பாகசாதனன் | இந்திரன் . |
| பாகசாதனி | இந்திரன் மகனான சயந்தன் ; அருச்சுனன் . |
| பாகசாலை | மடைப்பள்ளி . |
| பாகடை | காண்க : பாக்குவெற்றிலை . |
| பாகண்டன் | வெளிவேடக்காரன் . |
| பாகதம் | பிராகிருதமொழி . |
| பாகதாரி | காண்க : பாகுவன் . |
| பாகப்படுத்துதல் | சமைத்தல் ; பக்குவப்படுத்தல் . |
| பாகப்படுதல் | பக்குவப்படுதல் ; பதப்படுதல் . |
| பாகபத்திரம் | சொத்துப் பிரிவினை குறிக்கும் சீட்டு . |
| பாகபுடி | குயவன் சூளை . |
| பாகம் | பகுக்கை ; கூறு ; பாதி ; பாகை ; பக்கம் ; பங்கம் ; பிச்சை ; பறைவகை ; சமையல் ; சூடு படுத்தல் ; பக்குவம் ; மூவகைச் செய்யுள் நடை ; மனநிலை ; புயம் ; நான்கு முழம் கொண்ட நீட்டலளவை ; இடம் . |
| பாகமாதல் | உணவு முதலியன தயாராதல் ; மருந்து முதலியன பதமாதல் ; பங்கு பிரிக்கப்படுதல் . |
| பாகர் | யானை , குதிரை முதலியவற்றை நடத்துவோர் ; தேரின் மேல்தட்டைச் சுற்றியுள்ள மரக் கைப்பிடிச் சுவர் ; தேர் . |
| பாகரபிரபை | சூரிய ஒளி . |
| பாகல் | பாகற்கொடி ; பலாமரம் . |
| பாகலம் | யானைக்கு வரும் சுரநோய்வகை . |
| பாகலன் | உன்மத்தன் ; மயக்கமுடையவன் . |
| பாகவதநடனம் | வைணவ அடியார்கள் செய்யும் நடனம் . |
| பாகவதர் | திருமாலடியவர் ; இசையுடன் சமயக்கதைகள் சொல்வோர் ; பாடகர் . |
| பாகன் | யானைப்பாகன் ; தேர் முதலியன நடத்துவோன் ; புதன் ; பக்குவம் பெற்றவன் ; பக்கத்தில் கொண்டவன் ; செயலில் துணை செய்வோன் ; சுங்கம் வாங்கி . |
| பாகாரம் | வகுத்தல் . |
| பாகாரி | இந்திரன் . |
| பாகி | தகுதியானவன் ; சாரதிவேலை செய்யும் பெண் ; நாய் . |
| பாகிடுதல் | பிச்சையிடுதல் ; பங்கிடுதல் . |
| பாகித்தல் | பங்கிடுதல் . |
| பாகியம் | புறம்பானது ; மலங்கழிக்கை . |
| பாகினேயன் | உடன்பிறந்தாள் மகன் . |
| பாகீடு | பங்கிடுதல் . |
| பாகீரதி | கங்கை . |
| பாகு | குழம்பான உணவு ; இளகிய வெல்லம் ; சருக்கரை ; கற்கண்டு ; பால் ; பாக்கு ; பரணி நாள் ; பகுதி ; பிச்சை ; கரை ; உமை ; அழகு ; யானைப்பாகன் ; தேர் முதலியன நடத்துவோன் ; ஆளுந்திறன் ; கை ; தலைப்பாகை ; அழகு . |
| பாகுடம் | அரசிறை ; கையுறை . |
| பாகுடி | மிகத் தொலைவு . |
| பாகுபடுதல் | பிரிவுபடுதல் . |
| பாகுபாடு | பிரிவுபடுகை ; பகுப்பு . |
| பாகுலம் | கார்த்திகைமாதம் . |
| பாகுவலயம் | தோள்வளை . |
| பாகுவன் | சமையற்காரன் . |
| பாகுளி | புரட்டாசி மாதத்து முழுமதிநாள் . |
| பாகை | ஊர் ; பகுதி ; வட்டத்தில் 1/360 பங்கு ; ஒரு காலஅளவு ; தலைப்பாகை ; யானையின் உடலில் மதநீர் ஊறும் இடம் . |
| பாங்கர் | இடம் ; பக்கம் ; தோழர் ; கணவர் ; பாங்கர்க்கொடி ; உகாமரம் . |
| பாங்கற்கூட்டம் | தோழனது உதவியால் தலைவியைத் தலைவன் குறியிடத்துக்கூடுகை . |
| பாங்கன் | தோழன் ; கணவன் . |
| பாங்கானவன் | மரியாதை உள்ளவன் . |
| பாங்கி | தலைவியின் தோழி ; பணம் கொடுக்கல் வாங்கல் செய்யும் நிதிச்சாலை . |
| பாங்கினம் | ஆயம் . |
| பாங்கு | அழகு ; பக்கம் ; இடம் ; ஒப்பு ; நன்மை ; தகுதி ; நலம் ; இயல்பு ; ஒழுக்கம் ; தோழமை ; துணையானவர் ; இணக்கம் ; ஒருசார்பு ; நாணயம் ; வழி ; தொழுமிடம் ; ஆட்டுக்கிடை மறிப்பதற்குரிய விரியோலை முதலியன . |
| பாங்குபண்ணுதல் | நல்லுடை தரித்தல் . |
| பாங்கோர் | நட்பினர் ; பக்கத்திலுள்ளவர் ; சார்பாயுள்ளவர் . |
| பாச்சல் | காண்க : பாய்ச்சல் . |
| பாச்சி | தாய்ப்பால் . |
| பாச்சிகை | சூதாடுகருவி . |
| பாச்சியம் | பகுதி ; வகுக்கப்படும் எண் . |
| பாச்சுருட்டி | நெய்த ஆடையைச் சுருட்டும் நெசவுத் தறிமரம் . |
| பாச்சுற்றி | நெய்த ஆடையைச் சுருட்டும் நெசவுத் தறிமரம் . |
| பாச்சை | புத்தகப்பூச்சி ; தத்துப்பூச்சிவகை ; சுவர்க்கோழி ; கரப்பு . |
| பாசக்கட்டு | பிறப்பிற்குக் காரணமான உயிர்த்தளை . |
| பாசக்கயிறு | சுருக்குக்கயிறு . |
| பாசகம் | உண்ட உணவைச் செரிப்பதற்காக இரைப்பையில் உண்டாகும் நீர் ; வகுக்குமெண் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 740 | 741 | 742 | 743 | 744 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாக்குவெட்டி முதல் - பாசகம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், முதலியன, இடம், பக்கம், பகுதி, அழகு, காண்க, பங்கிடுதல், செய்யும், இந்திரன், தேர், நெய்த, நெசவுத், தறிமரம், சுருட்டும், ஆடையைச், நடத்துவோன், தலைப்பாகை, பங்கு, பாகுவன், பாக்கு, தாம்பூலம், பாகை, பிச்சை, பாக்குவெற்றிலை, உணவு, பக்குவம், யானைப்பாகன்

