முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » பன்னீர்க்குடம் முதல் - பனைவெல்லம் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - பன்னீர்க்குடம் முதல் - பனைவெல்லம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| பன்னீர்க்குடம் | கருவைச் சூழ்ந்த நீர்ப்பை . |
| பன்னீர்க்குப்பி | பன்னீர்தூவுங் கருவி ; பன்னீர் அடைத்துள்ள புட்டி . |
| பன்னீர்ச்செம்பு | பன்னீர்தூவுங் கருவி ; பன்னீர்ச் செம்புபோல் செய்யப்பட்ட தாலியுருவகை ; பன்னீர்ச்செம்பு உருவமைந்த மதிலுறுப்பு . |
| பன்னீர்வடித்தல் | மண எண்ணெய் இறக்குதல் . |
| பன்னு | வரிப்பணம் . |
| பன்னுதல் | பஞ்சுநூற்றல் ; ஆராய்ந்து செய்தல் ; புகழ்தல் ; பேசுதல் ; படித்தல் ; நின்றுநின்று பேசுதல் அல்லது படித்தல் ; பாடுதல் ; நரப்புக்கருவி வாசித்தல் ; பின்னுதல் ; அரிவாளைக்கூராக்குதல் ; நெருங்குதல் . |
| பன்னை | தறி ; சூடன் ; ஒரு செடிவகை . |
| பன்னொன்று | பதினொன்று . |
| பனங்கட்டி | பனைவெல்லம் . |
| பனங்கதிர் | காண்க : பனம்பிடுக்கு . |
| பனங்கருக்கு | பனைமட்டையின் கூர்மையுள்ள விளிம்பு ; இளம்பனை . |
| பனங்கள் | பனைமரத்திலிருந்து இறக்கும் மது . |
| பனங்கற்கண்டு | பனஞ்சாற்றைக் காய்ச்சிச் செய்யப்படும் கற்கண்டுவகை . |
| பனங்காடு | பனைமரம் அடர்ந்த தோப்பு . |
| பனங்கிழங்கு | பனங்கொட்டையிலிருந்து உண்டாவதும் உண்ணுதற்குரியதுமான நீண்ட முளை . |
| பனங்கிளி | பனைமரத்தில் வாழும் அன்றிற்பறவை ; ஒரு கிளிவகை . |
| பனங்குடை | பதநீர் ; சோறு முதலியவற்றை வைப்பதற்குப் பனையோலையால் செய்தபட்டை . |
| பனங்குருத்து | பனையின் இளவோலை . |
| பனங்கை | பனைமரத்துக் கழி . |
| பனங்கொட்டை | பனம்பழத்தின் உள்ளீடு . |
| பனசம் | பலாமரம் ; பாற்சோற்றிச்செடி ; முள் . |
| பனசை | ஒருவிதக் கொப்புள அம்மை ; ஒரு நச்சுப்பாம்புவகை ; திருப்பனந்தாள் என்னும் ஊர் . |
| பனஞ்சக்கை | பனம்பழத்தின் சாறெடுக்கப்பட்ட பண்டம் ; பனைவரிச்சல் . |
| பனஞ்சட்டம் | பனைவரிச்சல் . |
| பனஞ்சாறு | காண்க : பதநீர் . |
| பனஞ்சுளை | நுங்கு . |
| பனஞ்செறும்பு | பனைமரத்திற் செறிந்துள்ள நரம்பு . |
| பனத்தி | பார்ப்பனத்தி . |
| பனந்தாமன் | பனம்பூ மாலையனாகிய பலபத்திரன் . |
| பனந்தாரான் | சேரன் ; பலராமன் ; பனம்பூ மாலை தரித்தோன் . |
| பனந்தோடு | பனையின் குருத்தோலை . |
| பனம் | பருமை . |
| பனம்பட்டை | பனஞ்சட்டம் ; நீரிறைக்கும் பனையோலைப் பட்டை ; பனையுத்திரம் . |
| பனம்பிடுக்கு | பனம்பூ . |
| பனம்புடையல் | பனம்பூ மாலை . |
| பனம்பெட்டி | சில்லுக் கருப்பட்டி வைக்கும் பெட்டி ; கள்ளிறக்கும் நார்ப்பெட்டி . |
| பனம்போந்தை | காண்க : பனங்குருத்து . |
| பனர் | கிளை . |
| பனவன் | பார்ப்பான் . |
| பனாட்டு | பனைவெல்லக்கட்டி ; பனம்பழத்தின் பாகு . |
| பனாத்து | துணிவகை . |
| பனி | குளிர்ந்துவிழுந் துளி ; காண்க : பனிக்கட்டி ; குளிர் : குளிர்ச்சி நீர் : கண்ணீர் ; மழை ; மஞ்சு ; இனிமையானது ; அச்சம் ; நடுக்கம் ; நோய்வகை ; சுரம் ; துன்பம் . |
| பனிக்கஞ்சி | தாமரை . |
| பனிக்கட்டி | உறைந்த நீர் ; ஆலங்கட்டி . |
| பனிக்கதிர் | குளிர்ந்த கதிரையுடைய சந்திரன் . |
| பனிக்காடு | மேகமூட்டம் . |
| பனிக்காலம் | காண்க : பனிப்பருவம் . |
| பனிக்காற்று | வாடைக்காற்று . |
| பனிக்குடமுடைதல் | மகப்பேற்றின் முன்நிகழ்ச்சியாகப் பனிக்குடநீர் வெளிப்படுகை . |
| பனிச்சை | ஐம்பால் மயிர்முடிகளுள் ஒன்று ; கழுத்தின் பின்குழி ; ஒரு பிளவைவகை ; காட்டத்திமரம் . |
| பனித்தல் | பனிகொள்ளுதல் ; துளித்தல் ; இடைவிடாது மழைபெய்தல் ; குளிரால் நடுங்குதல் ; நடுங்கல் ; அஞ்சுதல் ; வருந்துதல் ; ததும்புதல் ; நடுங்கச்செய்தல் ; வருத்துதல் ; அடித்தல் . |
| பனித்து | கருப்பூரம் . |
| பனிதாங்கி | ஒரு பூண்டுவகை . |
| பனிநத்தை | மழைக்காலத்துத் தோன்றும் நத்தைவகை . |
| பனிநீர் | பனித்துளி ; காண்க : பன்னீர் . |
| பனிப்பகை | பனியின் பகையான சூரியன் . |
| பனிப்பகைவானவன் | பனியின் பகையான சூரியன் . |
| பனிப்படலம் | திரண்ட மேகம் . |
| பனிப்பருவம் | பனி பெய்யக்கூடிய மார்கழி , தை , மாசி , பங்குனி மாதங்கள் . |
| பனிப்பாறை | பெரும் பனிக்கட்டி . |
| பனிப்பு | நடுக்கம் ; அச்சம் . |
| பனிப்புக்கட்டுதல் | வருத்தமுண்டாக்குதல் . |
| பனிப்புழு | கம்பளிப்பூச்சி ; சேற்றுப்புழு . |
| பனிப்பூங்காரம் | வெயிலுடன்கூடிய மந்தாரம் . |
| பனிப்பெயர்தல் | பனி சொரிதல் . |
| பனிமலை | இமயமலை . |
| பனிமாசு | வெண்மேகம் . |
| பனிமுகில் | வெண்மேகம் . |
| பனிமேகம் | வெண்மேகம் . |
| பனிமேய்ச்சல் | காலை மேய்ச்சல் ; அளவுக்கு மிஞ்சி இன்பம் நுகர்கை . |
| பனியெதிர்பருவம் | மார்கழி , தை மாதங்களாகிய முன்பனிப் பருவம் . |
| பனிவெடிப்பு | பித்தவெடிப்பு ; பனியால் கைகால்களில் உண்டாகும் புண் . |
| பனிற்றுதல் | தூவுதல் . |
| பனுக்குதல் | துளித்தல் . |
| பனுவல் | பன்னப்பட்ட பஞ்சு ; பஞ்சிநூல் ; சொல் ; பாட்டு ; நூல் ; கேள்வி ; கல்வி ; ஆராய்ச்சி . |
| பனுவல்வாழ்த்து | ஒரு நூலைப் புலவர் புகழ்தலைக் கூறுந் துறை . |
| பனுவல்வென்றி | பிற நூல்களினும் ஒரு நூல் சிறப்புடைத்தெனக் கூறுந் துறை . |
| பனுவலாட்டி | கலைமகள் . |
| பனுவுதல் | சொல்லுதல் . |
| பனை | ஒரு மரவகை ; ஒரு பேரளவு ; அனுட நாள் ; ஒரு மீன்வகை . |
| பனைக்கொடியோன் | பனையெழுதப்பெற்ற கொடியை உடைய பலராமன் ; வீடுமன் . |
| பனைத்துணை | பனையளவு ; பேரளவு . |
| பனைநார் | பனைமட்டையிலிருந்து எடுக்கப்படும் நார் . |
| பனைப்போழ் | பனையின் குருத்தோலை . |
| பனைமடல் | பனங்குருத்து ; பனையோலை . |
| பனைமுகிழ் | பனங்காயின் மேல்தோல் . |
| பனையன் | ஒரு நோய்வகை ; ஒரு பாம்புவகை ; ஒரு மீன்வகை . |
| பனையிடுக்குதல் | சாறு வழியும்படி பனம் பாளையை நசுக்குதல் ; கள்ளிறக்குதல் . |
| பனையிதக்கை | காண்க : பனைமுகிழ் . |
| பனையூசல் | பனைமரங்களிற் கட்டி ஆடப்பெறும் ஊசல் . |
| பனையேறி | பனையேறுஞ் சாணாரச்சாதி ; ஒரு பாம்புவகை ; பெரியம்மைவகை ; ஒரு மீன்வகை . |
| பனைவட்டு | காண்க : பனைவெல்லம் . |
| பனைவாரை | பனஞ்சட்டம் . |
| பனைவெட்டு | பனஞ்சாற்றைக் காய்ச்சி எடுக்கும் வெல்லம் . |
| பனைவெல்லம் | பனஞ்சாற்றைக் காய்ச்சி எடுக்கும் வெல்லம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 738 | 739 | 740 | 741 | 742 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பன்னீர்க்குடம் முதல் - பனைவெல்லம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, பனம்பூ, பனையின், பனஞ்சாற்றைக், பனம்பழத்தின், பனஞ்சட்டம், பனிக்கட்டி, வெண்மேகம், பனங்குருத்து, பனைவெல்லம், மீன்வகை, சூரியன், மார்கழி, வெல்லம், பகையான, பனியின், எடுக்கும், துளித்தல், காய்ச்சி, பனிப்பருவம், துறை, பனைமுகிழ், கூறுந், பேரளவு, பாம்புவகை, நூல், பனம், பேசுதல், படித்தல், பனம்பிடுக்கு, பன்னீர்ச்செம்பு, பன்னீர், பன்னீர்தூவுங், கருவி, பதநீர், பனைவரிச்சல், நீர், அச்சம், நடுக்கம், சொல், குருத்தோலை, பலராமன், மாலை, நோய்வகை

