முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » பயணங்கட்டுதல் முதல் - பயிலுதல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - பயணங்கட்டுதல் முதல் - பயிலுதல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| பயணங்கட்டுதல் | பயணத்துக்கு ஆயத்தம் பண்ணுதல் . |
| பயணப்படுதல் | பயணத்துக்கு ஆயத்தம் பண்ணுதல் . |
| பயணம் | யாத்திரை ; இறப்பு . |
| பயத்தல் | விளைதல் ; உண்டாதல் ; பலித்தல் ; கிடைத்தல் ; படைத்தல் ; பெறுதல் ; கொடுத்தல் ; பூத்தல் ; இயற்றுதல் ; நிறம்வேறுபடுதல் ; அச்சமுறுதல் . |
| பயதம் | காண்க : பமரம் . |
| பயந்தாள் | தாய் . |
| பயந்தோர் | பெற்றோர் . |
| பயந்தோர்ப்பழிச்சல் | தலைவியின் பெற்றோரைத் தலைவன் வாழ்த்திப் புகழும் துறை . |
| பயந்தோன் | தந்தை . |
| பயப்படுத்துதல் | அச்சுறுத்துதல் . |
| பயப்படுதல் | அஞ்சுதல் . |
| பயப்பய | மெல்ல மெல்ல . |
| பயப்பாடு | பயன்படுகை ; அச்சம் . |
| பயப்பு | பயன் ; அருள் ; நிறம் வேறுபடுகை ; பொன்னிறம் . |
| பயபக்தி | ஒடுக்கவணக்கம் . |
| பயம் | அச்சம் ; அச்சச்சுவை ; வாவி ; அமுதம் ; பால் ; நீர் ; பலன் ; வினைப்பயன் ; பழம் ; இன்பம் ; அரசிறை ; தன்மை . |
| பயம்பகர்தல் | பயன்படுதல் . |
| பயம்பு | பள்ளம் ; குழி ; யானையை அகப்படுத்தும் குழி ; நீர்நிலை ; காண்க : வசம்பு . |
| பயமுறுத்துதல் | அச்சமுண்டாக்குதல் ; கண்டித்தல் . |
| பயரை | ஒரு மரவகை . |
| பயல் | சிறுபிள்ளை ; இழிஞன் ; பாதி ; பங்கு ; பள்ளம் ; குறிப்புச்சொல் . |
| பயலாள் | வாலிபப் பருவத்தவர் . |
| பயற்றங்காய் | பயறு உள்ளடங்கிய காய் ; பயறு வகை ; பூணூலின் நீளத்தைக் குறைக்க இடும் முடிச்சுவகை . |
| பயற்றம்மை | காண்க : சிச்சிலுப்பை ; சின்னம்மை நோய் . |
| பயறு | பாசிப்பயறு ; தானியவகை ; சித்திரை நாள் . |
| பயன் | பலன் ; வினைப்பயன் ; சொற்பொருள் ; செல்வம் ; பழம் ; அகலம் ; சாறு ; பால் ; வாவி ; அமுதம் ; நீர் . |
| பயன்சொல்லுதல் | பலன் இன்னதென்று சொல்லுதல் ; பொருளுரைத்தல் . |
| பயன்படுதல் | உதவியாயிருத்தல் . |
| பயன்மரம் | பயன்படுபொருள் தரும் மரம் . |
| பயனில்சொல் | இழிசொல் நான்கனுள் ஒன்றாகிய வீண்சொல் . |
| பயனிலாள் | விலைமகள் . |
| பயனிலி | ஒன்றுக்கும் உதவாதவன்(ள்) . |
| பயனிலை | சொற்றொடரில் எழுவாய் கொண்டு முடியும் சொல் . |
| பயனுவமம் | பயனைப்பற்றி வரும் உவமை . |
| பயனுவமை | பயனைப்பற்றி வரும் உவமை . |
| பயானகம் | வினைப்பயன் ; அச்சம் ; நரகவகை . |
| பயிக்கம் | பிச்சை . |
| பயிட்டம் | முத்துவகை . |
| பயித்தியக்காரன் | பித்துப்பிடித்தவன் ; மூடன் . |
| பயித்தியம் | காண்க : பைத்தியக்காரன் ; பித்து ; மதிகேடு ; தீராமோகம் . |
| பயிர் | விலங்கொலி ; ஒலிக்குறிப்பு ; அழைப்பு ; பறவைக்குரல் ; ஒலி ; வாச்சியம் ; சைகை ; விதந்து கட்டிய வழக்கு ; அருவருப்பு ; பயன்படுத்தத்தகும் செடிகள் ; பைங்கூழ் ; குருத்து ; காண்க : இடலை . |
| பயிர்க்குடி | பயிரிடுங் குடி . |
| பயிர்த்தல் | அருவருத்தல் ; மனங்கொள்ளாதிருத்தல் . |
| பயிர்த்தொழில் | உழுதொழில் . |
| பயிர்தல் | விலங்கு முதலியன ஒன்று ஒன்றனைக் குறியிட்டு அழைத்தல் ; அழைத்தல் ; இசைத்தல் . |
| பயிர்ப்பு | அருவருப்பு ; பெண்டிர் குணம் நான்கனுள் ஒன்று , பயிலாத பொருளில் வரும் அருவருப்பு ; மனங்கொள்ளாமை ; தூய்மையின்மை ; பிசின் . |
| பயிர்பிடித்தல் | பயிரில் தானியமணி பற்றுதல் . |
| பயிர்வைத்தல் | பயன்தரும் மரஞ்செடிகள் நடுதல் ; நிலச் சாகுபடி செய்தல் . |
| பயிரங்கம் | காண்க : பகிரங்கம் . |
| பயிரவி | காண்க : முடக்கொற்றான் ; பைரவி . |
| பயிரழிவு | விலங்கு , வெள்ளம் முதலியவற்றால் உண்டாகும் பயிர்க்கேடு . |
| பயிராதல் | பயிர் உண்டாதல் ; சினையாதல் . |
| பயிரிடுதல் | நிலத்தில் பயிர்களை உண்டாக்குதல் ; விலங்குகளை அவ்வவற்றின் ஒலிக்குறிகாட்டி அழைத்தல் . |
| பயிரிலி | தரிசுநிலம் . |
| பயிருகம் | பழம்பாசி . |
| பயிரேறுதல் | பயிர்செழித்தல் . |
| பயில் | பழக்கம் ; சொல் ; சைகை ; குழூஉக்குறி . |
| பயில்வான் | மற்போர்புரிவோன் . |
| பயில்வு | பயிற்சி ; செய்கை ; இருப்பு . |
| பயிலல் | எடுத்தலோசை ; கற்றல் . |
| பயிலியம் | குப்பைமேனிப்பூண்டு . |
| பயிலுதல் | தேர்ச்சியடைதல் ; சொல்லுதல் ; பழகுதல் ; சேவித்தல் ; நடமாடுதல் ; தங்குதல் ; கற்றல் ; நிகழ்தல் ; நெருங்குதல் ; பொருந்துதல் ; ஒழுகுதல் ; ஒலித்தல் ; அழைத்தல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 719 | 720 | 721 | 722 | 723 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பயணங்கட்டுதல் முதல் - பயிலுதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, அழைத்தல், பயறு, வினைப்பயன், வரும், அச்சம், பலன், அருவருப்பு, சொல், நான்கனுள், பயனைப்பற்றி, சொல்லுதல், சைகை, கற்றல், ஒன்று, விலங்கு, பயிர், உவமை, பழம், உண்டாதல், மெல்ல, பண்ணுதல், ஆயத்தம், பயணத்துக்கு, பயன், வாவி, பயன்படுதல், பள்ளம், நீர், பால், அமுதம், குழி

