தமிழ் - தமிழ் அகரமுதலி - பரதவர் முதல் - பரமபதம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| பரதவர் | நெய்தல்நில மக்கள் ; தமிழ்நாட்டுக் குறுநில மன்னருள் ஒருசாரார் ; வணிகர் . |
| பரதவருடம் | காண்க : பரதகண்டம் . |
| பரதவித்தல் | வருந்துதல் ; இரங்குதல் . |
| பரதன் | இராமன் தம்பி ; பரதநூல் செய்தோன் ; ஓரரசன் . |
| பரதாரம் | பிறன்மனைவி . |
| பரதாரி | பிறன்மனை விழைவோன் . |
| பரதி | நாடகி , கூத்தாடுபவள் . |
| பரதெய்வம் | முழுமுதற் கடவுள் . |
| பரதேகம் | நுண்ணுடம்பு . |
| பரதேசம் | அயல்நாடு ; காண்க : பரதேசயாத்திரை . |
| பரதேசயாத்திரை | திருமணச்சடங்கில் காசியாத்திரை போதல் . |
| பரதேசி | கதியற்றவன் ; அயல்நாட்டான் ; இரவலன் ; தேசயாத்திரை செய்வோன் . |
| பரதேவதை | காண்க : பரதெய்வம் . |
| பரந்தவட்டம் | கைம்மணி . |
| பரந்தவர் | இரந்து திரிவோர் . |
| பரந்தாமம் | வைகுண்டம் . |
| பரந்தாமன் | திருமால் . |
| பரநாரிசகோதரன் | பிறர்பெண்டிரை உடன்பிறந்தாளாகக் கருதுபவன் . |
| பரநியாசம் | தெய்வத்தினிடம் அல்லது குருவிடம் ஆன்மபாரத்தை வைத்தல் . |
| பரப்ப | மிக . |
| பரப்பாழ் | வானவெளி . |
| பரப்பிரமம் | முழுமுதற் கடவுள் ; உலகியலறிவு அற்றவன் ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று . |
| பரப்பு | இடவிரிவு ; உலகம் ; மிகுதி ; தொகுதி ; அளவு ; ஒரு நிலவளவு ; கடல் ; முகடு ; நிவேதனப் பொருள் ; கதவுநிலையின் மேலுள்ள மண்தாங்கிப் பலகை ; படுக்கை ; வரிக்கணக்கு . |
| பரப்புதல் | பரவச்செய்தல் ; செய்தி முதலியன பரப்பல் ; விரித்தல் ; ஒழுங்கின்றி வைத்தல் ; நிலைபெறுதல் ; பெருகக் கொடுத்தல் . |
| பரபக்கம் | பிறர்மதக் கொள்கை . |
| பரபட்சம் | பிறர்மதக் கொள்கை . |
| பரபத்தி | சிவபத்தி ; கடவுளின் திருவுருவைக் காணும் பத்தியின் முதலாம் நிலை . |
| பரபத்தியம் | முதல் ; வணிகக் கடன்களைப் பொறுக்கும் மதிப்பு ; கொடுக்கல் வாங்கல் ; சமன்செய்தல் . |
| பரபதம் | காண்க : பரகதி . |
| பரபரத்தல் | தீவிரப்படல் ; மிக விரைதல் ; தன்வயமழிதல் ; சுறுசுறுப்பாதல் ; தினவெடுத்தல் . |
| பரபரப்பு | சுறுசுறுப்பு ; தினவு ; விரைவு . |
| பரபரெனல் | விரைவுக்குறிப்பு . |
| பரபாகம் | பிறர் சமைத்த உணவு ; மேன்மை ; பல வண்ணங்கள் கலத்தலால் உண்டாகும் அழகு ; நற்பேறு ; மிச்சம் . |
| பரபிருதம் | குயில் ; காகம் . |
| பரபுட்டம் | குயில் . |
| பரபுட்டை | விலைமகள் . |
| பரபூர்வை | மறுமணம் செய்தவள் . |
| பரபோகம் | பேரின்பம் . |
| பரம் | உடல் ; கவசம் ; பாரம் ; கேடகவகை ; மேலானது ; திருமால்நிலை ஐந்தனுள் ஓன்று ; கடவுள் ; மேலுலகம் ; திவ்வியம் ; வீடுபேறு ; பிறவிநீக்கம் ; முன் ; மேலிடம் ; அன்னியம் ; சார்பு ; தகுதி ; நிறைவு ; நரகம் ; குதிரைக் கலணை ; அத்திமரம் ; பரதேசி . |
| பரம்படித்தல் | பரம்புச் சட்டத்தால் நிலத்தைச் சமப்படுத்தல் . |
| பரம்பரம் | வழிவழியாக வரும் உரிமை ; வமிசம் ; காண்க : பரம்பரை ; பரம்பரன் ; முத்தி ; ஒன்றுக்கு ஒன்று மேலானது . |
| பரம்பரன் | முழுமுதற் கடவுள் . |
| பரம்பரை | இடையறாத் தொடர்பு ; தலைமுறைத் தொடர்பு . |
| பரம்பு | உழுத கழனியைச் சமப்படுத்தும் பலகை ; பரவிய நிலம் ; மூங்கிற்பாய் ; வரப்பு ; இடவிரிவு ; வரிக்கணக்கு . |
| பரம்புதல் | பரவுதல் ; தட்டையாக விரிதல் ; நிறைதல் . |
| பரம்புப்பலகை | நிலத்தைச் சமப்படுத்தும் பலகை . |
| பரம்பொருள் | மேலான பொருள் ; கடவுள் . |
| பரமகதி | வீடுபேறு ; இறுதிக்காலத்தில் புகும் அடைக்கலம் ; பூரணகதி . |
| பரமகாரணன் | ஆதிகாரணனான கடவுள் . |
| பரமகாருணிகன் | பேரருளாளன் . |
| பரமகுரு | சிறந்த குரு ; ஆசாரியனுக்கு ஆசாரியன் . |
| பரமசண்டாளன் | கொடும்பாவி . |
| பரமசத்துரு | பெரும்பகைவன் . |
| பரமசந்தேகம் | தீரா ஐயம் . |
| பரமசித்தி | காண்க : பரமபதம் . |
| பரமசிவன் | சிவபிரான் . |
| பரமசுதன் | தேவகுமாரர் , இயேசுநாதர் . |
| பரமசுந்தரி | தருமதேவதை . |
| பரமசுவாமி | கடவுள் : அழகர்மலைத் திருமால் . |
| பரமஞானம் | இறையறிவு . |
| பரமண்டலம் | அயல்நாடு ; வீடுபேறு . |
| பரமதம் | பிறசமயம் . |
| பரமநாழிகை | திதி வார யோக கரண நட்சத்திரங்களின் முழு நாழிகை . |
| பரமபதம் | வீடுபேறு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 721 | 722 | 723 | 724 | 725 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பரதவர் முதல் - பரமபதம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், கடவுள், காண்க, வீடுபேறு, பலகை, முழுமுதற், பரதெய்வம், மேலானது, குயில், நிலத்தைச், பரம்பரை, பரமபதம், சமப்படுத்தும், தொடர்பு, பரம்பரன், கொள்கை, பிறர்மதக், திருமால், பரதேசி, பரதேசயாத்திரை, வைத்தல், ஒன்று, வரிக்கணக்கு, பொருள், இடவிரிவு, அயல்நாடு

