முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » பதினெண்கீழ்க்கணக்கு முதல் - பந்தடித்தல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - பதினெண்கீழ்க்கணக்கு முதல் - பந்தடித்தல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| பதினெண்கீழ்க்கணக்கு | நாலடியார் , நான்மணிக்கடிகை , இன்னா நாற்பது , இனியவை நாற்பது , கார் நாற்பது , களவழி நாற்பது , ஐந்திணை ஐம்பது , ஐந்திணை எழுபது , திணைமொழி ஐம்பது , திணைமாலை நூற்றைம்பது , திருக்குறள் , திரிகடுகம் , ஆசாரக்கோவை , பழமொழி , சிறுபஞ்சமூலம் , முதுமொழிக்காஞ்சி , ஏலாதி , கைந்நிலை என்னும் பதினெட்டு நூல்கள் . |
| பதினென்குடிமக்கள் | ஓடாவி(ஓடஞ்செய்பவர்) ,கன்னார் , குயவர் , கொல்லர் , கோவியர்(இடையர்) , ஓச்சர் , தச்சர் , தட்டார் , நாவிதர் ; பள்ளர் ; பாணர் ; பூமாலைக்காரர் ; எண்ணெய் வாணியர் , உப்புவாணியர் , இலைவாணியர் , வண்ணார் , வலையர் , வெட்டியான் ஆகிய குடிமக்கள் . |
| பதினெண்புராணம் | மச்சம் , கூர்மம் , வராகம் , வாமனம் , பதுமம் , வைணவம் , பாகவதம் , பிரமம் , சைவம் , இலிங்கம் , பௌடிகம் , நாரதீயம் , காருடம் , பிரமகைவர்த்தம் , காந்தம் , மார்க்கண்டேயம் , ஆக்கினேயம் , பிரமாண்டம் என்பன . |
| பதினெண்மொழி | பதினெண் நாட்டார்க்குரிய மொழியான அங்கம் , அருணம் , கலிங்கம் , காம்போசம் ; கொங்கணம் , கோசலம் , கௌசிகம் , சாவகம் , சிங்களம் , சிந்து , சீனம் , சோனகம் , திரவிடம் , துளுவம் , பப்பரம் , மகதம் , மராடம் , வங்கம் என்பன . |
| பதினோராடல் | அல்லியம் , கொட்டி , குடை , குடம் , பாண்டரங்கம் , மல் , துடி , கடையம் , பேடு , மரக்கால் , பாவை என்னும் பதினொரு வகையான கூத்துகள் . |
| பதுக்கம் | ஒளிப்பு ; கபடம் ; பதுங்குந்தன்மை ; மன்னிக்கை ; கண்ணி . |
| பதுக்காய் | உள்ளான்குருவி ; பருத்துக் குள்ளமாய் உள்ளவன் . |
| பதுக்குதல் | ஒளித்துவைத்தல் . |
| பதுக்கை | கற்குவியல் ; இலைக்குவியல் ; மணற்குன்று ; சிறுதூறு ; பாறை . |
| பதுக்கைக்கடவுள் | மணற்குன்றின் மேலுள்ள நடுகல் தெய்வம் . |
| பதுங்கலன் | பின்னிற்பவன் ; கூச்சமுள்ளவன் . |
| பதுங்குதல் | ஒளித்தல் ; பதிவிருத்தல் ; மறைதல் ; பின்னிற்றல் ; காண்க : பதுங்குபிடித்தல் . |
| பதுங்குபிடித்தல் | மேல்தளத்துக்குச் சிறுகல் பாவுதல் . |
| பதுமகேசரம் | புன்னைமரம் . |
| பதுமகோசிகம் | தாமரைக்காய் உருவமாகக் கைகுவித்து ஐந்து விரலையும் அகல விரித்துக் காட்டும் இணையாவினைக்கைவகை . |
| பதுமநாபன் | உந்தித் தாமரையோனாகிய திருமால் . |
| பதுமநிதி | குபேரனது ஒன்பான் நிதியுள் ஒன்று . |
| பதுமபந்து | சூரியன் ; தேனீ . |
| பதுமபீடத்தன் | பிரமன் . |
| பதுமபீடம் | தாமரை வடிவாகச் செய்யப்பட்ட இடம் . |
| பதுமம் | தாமரை ; காண்க : பதுமரேகை ; பதினெண் புராணத்துள் ஒன்று ; காண்க : பதுமபீடம் ; பதுமநிதி ; ஆசனவகை ; முடியுறுப்பு ஐந்தனுள் ஒன்று ; அபிநயத்துக்குரிய ஆண் கைகளுள் ஒன்று ; சோதிநாள் ; மாணிக்கவகை . |
| பதுமமணி | தாமரைக்கொட்டை . |
| பதுமயோனி | தாமரையில் பிறந்த பிரமன் . |
| பதுமராகம் | மாணிக்கவகை . |
| பதுமரேகை | ஒருவனது நற்பேற்றைக் குறிப்பதாகக் கருதுப்படும் தாமரை வடிவான கைக்கோடு . |
| பதுமவியூகம் | தாமரை வடிவமாக வகுக்கப்பட்ட படையணி . |
| பதுமவீசம் | தாமரைமணி . |
| பதுமன் | பிரமன் ; எண்வகை நாகத்துள் ஒன்று . |
| பதுமாக்கன் | தாமரை போன்ற கண்களையுடைய திருமால் . |
| பதுமாசனம் | இரு கால்களையும் மடக்கி அமரும் தாமரை மலர்போன்ற இருக்கைநிலை . |
| பதுமாசனன் | தாமரையில் வீற்றிருக்கும் பிரமன் . |
| பதுமாசனி | தாமரையில் வீற்றிருக்கும் திருமகள் . |
| பதுமாசனை | தாமரையில் வீற்றிருக்கும் திருமகள் . |
| பதுமாஞ்சலி | இரு கையையும் தாமரைக்காய் உருவமாகக் கூட்டும் இணைக்கைவகை . |
| பதுமாவதி | காண்க : பதுமாசனி(ளை) . |
| பதுமினி | நால்வகைப் பெண்டிருள் உயர் இலக்கணம் உடையவள் . |
| பதுமுகம் | காண்க : பதுமாசனம் ; நறும்பண்டவகை . |
| பதுமை | திருமகள் ; காளி ; கற்பிற் சிறந்த சூரபன்மன் மனைவி ; திருமகள் தோன்றிய பொய்கை ; ஓரிதழ்த்தாமரை ; பாவை ; சிலை ; பதுமநிதி . |
| பதைத்தல் | துடித்தல் ; வருந்துதல் ; நடுங்குதல் ; ஆத்திரமடைதல் ; செருக்கடைதல் . |
| பதைபதைத்தல் | மிகத் துடித்தல் . |
| பந்தகம் | கட்டு ; முடிச்சு ; பற்று ; அடைமானம் ; சார்ந்திருத்தல் . |
| பந்தடித்தல் | பந்து விளையாடுதல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 717 | 718 | 719 | 720 | 721 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதினெண்கீழ்க்கணக்கு முதல் - பந்தடித்தல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், தாமரை, காண்க, ஒன்று, தாமரையில், நாற்பது, திருமகள், பிரமன், வீற்றிருக்கும், பதுமநிதி, பதுமபீடம், மாணிக்கவகை, துடித்தல், பதுமாசனி, பதுமாசனம், பதுமரேகை, திருமால், பதுமம், என்னும், ஐம்பது, ஐந்திணை, என்பன, பதினெண், தாமரைக்காய், பதுங்குபிடித்தல், பாவை, உருவமாகக்

