தமிழ் - தமிழ் அகரமுதலி - படங்கம் முதல் - படாப்பழி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| படங்கம் | கூடாரம் ; சண்பகமரம் . |
| படங்கன் | கடல்மீன்வகை . |
| படங்கான் | கடல்மீன்வகை . |
| படங்கு | கூடாரம் ; மேற்கட்டி ; ஆடை ; இடுதிரை ; பெருங்கொடி ; மெய்போற் பேசுகை ; சாம்பிராணிப்பதங்கம் ; அடிப்பாகம் ; பெருவரிச்சல் ; பாதத்தின் உட்பகுதி . |
| படங்குந்திநிற்றல் | முன்காலை ஊன்றி நிற்றல் . |
| படங்குந்திவீடு | கூடாரம் . |
| படதீபம் | ஒரு விளக்குவகை . |
| படப்பம் | மருங்கில் ஊர்சூழ்ந்த நகரம் . |
| படப்பு | பனங்கொட்டை சேகரித்து உலர்த்தும் கொல்லை ; வைக்கோற்போர் . |
| படப்பை | தோட்டப்பகுதி ; புழைக்கடை ; பக்கத்திலுள்ள இடம் ; ஊர்ப்புறம் ; நாடு ; மருதநிலத்தூர் ; பசுக்கொட்டில் ; பனங்கொட்டை சேகரித்து உலர்த்தும் கொல்லை . |
| படப்பொறி | பாம்பின் படத்திலுள்ள புள்ளிகள் ; துத்திச்செடி . |
| படபடத்தல் | பேச்சு முதலியவற்றில் விரைதல் ; குளிர் முதலியவற்றால் நடுங்குதல் ; கோபக்குறிப்பு ; ஒலி உண்டாதல் . |
| படபடப்பு | பேச்சு முதலியவற்றில் விரைவு ; நடுக்கம் . |
| படபடெனல் | துடித்துப்பேசல் , அசைதல் , வெடித்தல் , கடுமை , விரைவு , களைப்பு முதலிய குறிப்புகள் . |
| படம் | சீலை ; சித்திரச்சீலை ; திரைச்சீலை ; சட்டை ; போர்வை ; ஓவியம் எழுதின படம் ; பெருங்கொடி ; விருதுக்கொடி ; யானைமுகப்படாம் ; பாம்பின் படம் ; காற்றாடி ; பாதத்தின் முற்பகுதி ; உடல் . |
| படம்பிடித்தல் | ஒளியின் உதவியால் கருவி கொண்டு உருவத்தைப் பிடித்தல் . |
| படம்புகுதல் | சட்டையிடுதல் . |
| படமஞ்சரி | ஒரு பண்வகை . |
| படமரம் | நெய்வார் கருவியுள் ஒன்று . |
| படமாடம் | கூடாரம் . |
| படமாளிகை | கூடாரம் . |
| படமெடுத்தல் | பாம்பு படத்தை விரித்து நிற்றல் ; ஒளிப்படம் பிடித்தல் . |
| படர் | செல்லுகை ; ஒழுக்கம் ; வருத்தம் ; நோய் ; நினைவு ; பகை ; மேடு ; துகிற்கொடி ; படைவீரர் ; எமதூதர் ; ஏவல் செய்வோர் ; இழிமக்கள் ; தேமல் ; தூறு ; வழி ; தறுகண்மை . |
| படர் | (வி) தொடர் , படர்என் ஏவல் . |
| படர்க்கை | சொற்களுக்குரிய மூவிடங்களுள் தன்மை முன்னிலைகள் இல்லாத இடம் . |
| படர்கொடி | நின்று வளராத படருங்கொடி ; கொடிவகை . |
| படர்ச்சி | செலவு ; நல்லொழுக்கம் ; கொடி ஓடுகை ; விதி ; பரந்த வடிவம் ; பரவுதல் . |
| படர்தல் | ஓடுதல் ; கிளைத்தோடுதல் ; பரவுதல் ; பெருகுதல் ; அகலுதல் ; விட்டுநீங்குதல் ; வருந்துதல் ; அடைதல் ; நினைத்தல் ; பாடுதல் . |
| படர்தாமரை | தோல்மேற் படரும் நோய்வகை ; தேமல்வகை ; அமைதியில்லாதவர் . |
| படர்நோய் | நினைவினால் உண்டாம் வருத்தம் . |
| படர்பயிர் | படர்கின்ற கொடி . |
| படரடி | சிதறவடிக்கை . |
| படரை | ஆவிரை . |
| படல் | ஓர் அடைப்புவகை ; மறைப்புத்தட்டி ; பூந்தடுக்கு ; பாய்மரத்தில் இணைக்கப்பட்ட குறுக்குக்கட்டையிலுள்ள குழி ; உறக்கம் . |
| படலம் | கூட்டம் ; நூற்பகுதி ; கூடு ; மேற்கட்டி ; நேத்திரப்படலம் ; அடுக்கு ; உலகம் ; சுற்றம் ; திலகம் ; மறைப்புத்தட்டி ; அடைப்பு ; இரத்தினக்குற்றம் . |
| படலி | கூட்டம் ; வீட்டின் மேற்கூரை . |
| படலிகை | பெரும்பீர்க்கு ; கைம்மணி ; பூப்பெட்டி ; இளைப்பு ; கண்ணோய்வகை ; வட்டவடிவு ; ஓர் அளவு . |
| படலிடம் | குடிசை . |
| படலியம் | குதிரைச்சேண உறுப்பு . |
| படலை | படர்கை ; பரந்த இடம் ; வாயகன்றபறை ; தாழை ; பூவும் தழையும் விரவித்தொடுத்த மாலை ; கூட்டம் ; குதிரைக் கிண்கிண்மாலை ; குலையிலுள்ள சீப்பு ; அடைப்பு . |
| படலைக்கண்ணி | பச்சிலையும் பூவும் கலந்து தொடுத்த மாலை . |
| படலைமாலை | பச்சிலையும் பூவும் கலந்து தொடுத்த மாலை . |
| படவம் | போர்ப்பறை . |
| படவன் | படகோட்டி . |
| படவாள் | படைவாள் . |
| படவு | சிற்றோடம் . |
| படன் | படைவீரன் ; இழிகுலத்தான் ; யமகிங்கரன் ; பேய் . |
| படனம் | படித்தல் ; மனப்பாடம் . |
| படா | காண்க : குட்டிப்பிடவம் ; பெரிய . |
| படாக்கொட்டில் | காண்க : படமாடம் . |
| படாகி | செருக்கு ; புளுகுகிறவன் . |
| படாகை | கொடி ; நாட்டின் உட்பிரிவு ; குடிசை ; கூட்டம் . |
| படாடோபம் | நடையுடைபாவனையிற் செய்யும் பகட்டு . |
| படாதுபடுதல் | மிகத் துன்புறுதல் . |
| படாந்தரம் | முழுப் பொய் ; கற்பனையால் மிகுத்துக் கூறுகை ; அகாரணம் . |
| படாப்பழி | பெரும்பழி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 706 | 707 | 708 | 709 | 710 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
படங்கம் முதல் - படாப்பழி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், கூடாரம், கூட்டம், இடம், பூவும், மாலை, படம், கொடி, ஏவல், பரந்த, மறைப்புத்தட்டி, பரவுதல், அடைப்பு, தொடுத்த, காண்க, கலந்து, பச்சிலையும், குடிசை, வருத்தம், பிடித்தல், நிற்றல், பனங்கொட்டை, பாதத்தின், பெருங்கொடி, கடல்மீன்வகை, மேற்கட்டி, சேகரித்து, உலர்த்தும், விரைவு, படமாடம், முதலியவற்றில், பேச்சு, கொல்லை, பாம்பின், படர்

