முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » பட்டடைமரம் முதல் - பட்டிபோதல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - பட்டடைமரம் முதல் - பட்டிபோதல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| பட்டடைமரம் | இறைச்சிவைத்துக் கொத்தும் மரம் . |
| பட்டடையார் | கடையின் முதலாளி ; மேற்பார்ப்போர் . |
| பட்டணப்பிரவேசம் | ஊர்வலம் . |
| பட்டணம் | பெருநகரம் ; பேரூர் . |
| பட்டணவன் | நெசவுச்சாதிவகை ; பட்டணவனால் நெய்யப்பட்ட ஆடை ; வலைஞர் சாதி . |
| பட்டணை | பட்டுப்படுக்கை . |
| பட்டத்தரசி | தலைமையரசி . |
| பட்டத்தியானை | அரச சின்னங்களுடையதும் அரசன் ஏறுவதற்கு உதவுவதுமான யானை . |
| பட்டத்துத்தேவி | தலைமையரசி . |
| பட்டதாரி | சிறப்புப்பட்டம் பெற்றவன் ; பகட்டுக்காரன் . |
| பட்டந்தரித்தல் | முடிசூடுதல் ; சிறப்புப்பெயர் சூடுதல் . |
| பட்டப்பகல் | நடுப்பகல் . |
| பட்டப்பெயர் | சிறப்புப்பெயர் ; புனைந்து வழங்கும் பெயர் . |
| பட்டபாடு | அனுபவித்த துன்பம் . |
| பட்டம் | பருவம் ; வாள் ; ஆயுதவகை ; நீர்நிலை ; வழி ; நாற்றங்காற்பகுதி ; விலங்கு துயிலிடம் ; படகுவகை ; கவரிமா ; சிறப்புக்கு அறிகுறியாக நெற்றியிலணியும் பொற்றகடு ; மாதர் நுதலணி ; பட்டப்பெயர் ; ஆட்சி ; சட்டங்களை இணைக்க உதவும் தகடு ; காற்றாடி ; சீலை ; பெருங்கொடி ; உயர்பதவி ; பொன் ; பறைவகை ; பலபண்டம் . |
| பட்டமரம் | உலர்ந்துபோன மரம் . |
| பட்டயம் | வாள் ; தாமிரசாசனம் ; பட்டா . |
| பட்டர்பிரான் | பெரியாழ்வார் . |
| பட்டவர்த்தனம் | அரசயானை ; குதிரைச் சாதி ; பார்ப்பனருள் ஒரு சாரார் இடும் நெற்றிக்குறி ; மறைவின்றிப் பேசுபவர் . |
| பட்டவருத்தனம் | அரசயானை ; குதிரைச் சாதி ; பார்ப்பனருள் ஒரு சாரார் இடும் நெற்றிக்குறி ; மறைவின்றிப் பேசுபவர் . |
| பட்டவர்த்தனர் | பட்டந்தரித்த சிற்றரசர் . |
| பட்டவருத்தனர் | பட்டந்தரித்த சிற்றரசர் . |
| பட்டறிவு | நுகர்ச்சி , அனுபவம் . |
| பட்டறை | தொழிற்சாலை ; அடைகல் ; தோணிதாங்கி ; தலையணையாக உதவும் மணை ; அதிர்வேட்டுக் குழாய்கள் பதிக்கப்பட்ட கட்டை ; வீட்டின் உத்திரம் ; வீட்டின் தளத்திலிருந்து எழுப்பவேண்டும் அளவில் எழுப்பிய சுவர் ; மக்கள் கூட்டம் ; தொழிலாளர் சமுதாயம் . |
| பட்டறைக்கேணி | பாசனத்துக்குப் பயன்படும் கிணறு . |
| பட்டறைநிலம் | கிணற்றுப் பாசனமுள்ள நன்செய் நிலம் . |
| பட்டன் | புலவன் ; கோயில் அருச்சகன் ; பெரியாழ்வார் ; சுவாமி ; உண்மை பேசுபவன் . |
| பட்டா | வாள் ; உரிமையாவணம் ; இரும்புப்பட்டம் . |
| பட்டாக்கத்தி | வாள் . |
| பட்டாங்கு | உண்மை ; உள்ள நிலைமை ; சாத்திரம் ; மெய்போல் பேசும் கேலிப்பேச்சு முதலியன ; சித்திரவேலை யமைந்த சேலை . |
| பட்டாசாரியன் | புலவன் ; கோயில் அருச்சகன் ; ஒரு சமய ஆசிரியன் . |
| பட்டாசு | சீனவெடி . |
| பட்டாடை | பட்டுச்சீலை . |
| பட்டாணி | உருதுமொழி பேசும் முகம்மதிய சாதி ; கடலைக்கொடிவகை ; கொண்டியாணி வகை . |
| பட்டாதாரன் | பட்டாவுடம்படிக்கை பெற்றவன் . |
| பட்டாரகன் | கடவுள் ; அருகபதவி பெற்றோன் ; குருதேவன் . |
| பட்டாளம் | 500 முதல் 1000வரை காலாள்கள் கொண்ட படை . |
| பட்டி | பசுக்கொட்டில் ; ஆட்டுக்கிடை ; நில வளவுவகை ; கொண்டித்தொழு ; சிற்றூர் ; இடம் ; காவலில்லாதவர் ; களவு ; பட்டிமாடு ; விபசாரி ; நாய் ; பலகறை ; மகன் ; தெப்பம் ; சீலை ; புண்கட்டுஞ் சீலை ; மடிப்புத் தையல் ; விக்கரமாதித்தன் மந்திரி ; அட்டவணை ; பாக்குவெற்றிலைச்சுருள் ; பூச்செடிவகை . |
| பட்டிக்கடா | பொலிஎருது , பொலிகாளை . |
| பட்டிக்காடு | சிற்றூர் . |
| பட்டிகன் | திருடன் . |
| பட்டிகை | அரைக்கச்சை ; மேகலை ; முலைக்கச்சு ; தெப்பம் ; தோணி ; ஏடு ; அரசபத்திரம் ; சீலை ; தோளிலிடும் யோகபட்டி ; சுவர்த்தலத்தின் சித்திரக்கம்பி ; சீந்திற்கொடி ; காண்க : செவ்வந்தி ; தாழை . |
| பட்டிகைச்சூட்டு | மேகலை . |
| பட்டிடை | காண்க : நந்தியாவட்டம் . |
| பட்டிணி | உணவுகொள்ளாமை . |
| பட்டிநியமம் | காண்க : பட்டிமண்டபம் . |
| பட்டிப்பொங்கல் | மாட்டு மந்தையிலிடும் பொங்கல் . |
| பட்டிபுத்திரன் | பண்டைக்காலத்தில் இளைஞர் விளையாட்டில் இட்டு வழங்கிய பெயர் . |
| பட்டிபெயர்த்தல் | கால்நடையைப் புறம்பே செலுத்துதல் . |
| பட்டிபோதல் | கால்நடை முதலியன பயிரை அழித்தல் ; கண்டபடி திரிதல் ; விபசாரம் செய்தல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 704 | 705 | 706 | 707 | 708 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பட்டடைமரம் முதல் - பட்டிபோதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், வாள், சாதி, சீலை, காண்க, புலவன், கோயில், சிற்றரசர், பேசுபவர், பட்டந்தரித்த, அருச்சகன், வீட்டின், பேசும், தெப்பம், மேகலை, சிற்றூர், முதலியன, மறைவின்றிப், உண்மை, இடும், பெயர், உதவும், பட்டப்பெயர், சிறப்புப்பெயர், தலைமையரசி, பெற்றவன், பட்டா, பெரியாழ்வார், சாரார், மரம், பார்ப்பனருள், குதிரைச், அரசயானை, நெற்றிக்குறி

