தமிழ் - தமிழ் அகரமுதலி - படாபஞ்சனம் முதல் - படிமேடை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| படாபஞ்சனம் | முற்றும் அழிதல் . |
| படாம் | சீலை ; திரைச்சீலை ; பெருங்கொடி ; கூடாரம் ; முகபடாம் . |
| படாம்வீடு | கூடாரம் . |
| படாமுரசு | ஓயாது ஒலிக்கும் பேரிகை . |
| படார் | சிறுதூறு . |
| படார்படாரெனல் | வெடித்தல் ஒலிக்குறிப்பு . |
| படாரர் | கடவுள் ; பூச்சியர் . |
| படாரன் | பாம்பாட்டி . |
| படாரிடுதல் | படாரென வெடித்தல் . |
| படாரெனல் | படாரென வெடித்தல் . |
| படாவஞ்சனம் | முழுக் கற்பனை ; கொடுஞ்சூழ்ச்சி ; முற்றும் அழிக்கை . |
| படாவஞ்சனை | முழுக் கற்பனை ; கொடுஞ்சூழ்ச்சி ; முற்றும் அழிக்கை . |
| படி | கற்படி ; ஏணிப்படி ; நிலை ; தன்மை ; அங்கவடி ; தராசின் படிக்கல் ; நூறு பலங் கொண்ட நிறையளவு ; நாட்கட்டளை ; நாழி ; அன்றாடச் செலவுக்குக் கொடுக்கும் பொருள் ; உபாயம் ; உதவி ; நிலைமை ; விதம் ; வாயில் நிலையின் கீழ்க் குறுக்குக்கட்டை ; உடம்பு ; மரபுவழி ; தகுதி ; முறைமை ; வேதிகை ; தாழ்வாரம் ; நீர்நீலை ; ஒத்த பிரதி ; பகை ; பூமி ; உவமை ; ஓர் உவமவுருபு . |
| படி | (வி) வாசி , படியென் ஏவல் . |
| படிக்கட்டளை | நாட்கட்டளை . |
| படிக்கட்டு | சோபனக்கட்டு ; நிறைகல் . |
| படிக்கம் | எச்சில் உமிழும் கலம் ; முழுக்குநீர் முதலியவற்றைச் சேர்க்கும் பாண்டம் . |
| படிக்கல் | நிறைகல் . |
| படிக்காசு | நாட்செலவுக்குக் கொடுக்கும் பணம் ; இரகுநாத சேதுபதியின் அவைக்களப் புலவர் . |
| படிக்காரம் | சீனக்காரம் . |
| படிக்காரன் | நாளுணவுக்காக வேலை செய்வோன் ; படிகொடுப்போன் . |
| படிக்கால் | ஏணி . |
| படிக்குப்பாதி | சரிபாதி . |
| படிகட்டுதல் | உணவுக்கு வேண்டிய பணத்தைச் செலுத்துதல் ; நிறைத் தடைகட்டுதல் ; படிக்கல் அமைத்தல் . |
| படிகம் | பளிங்கு ; கூத்து ; விளாம்பட்டை ; பிச்சை . |
| படிகமிடுதல் | காண்க : பழுக்கச்சுடுதல் . |
| படிகாரன் | வாயிற் காவலன் . |
| படிகால் | தலைமுறை . |
| படிகை | யானை மேலிடும் தவிசு ; காண்க : நந்தியாவட்டம் . |
| படிச்சந்தம் | ஒன்றைப்போன்ற வடிவு . |
| படிச்செலவு | அன்றாடச் செலவு . |
| படிசம் | தூண்டில் . |
| படிசியேற்றம் | சிற்றேற்றம் . |
| படிசு | நிலைமை ; ஒத்த அமைப்பு . |
| படித்தரம் | கோயில் முதலியவற்றுக்கு உதவும் நாட்கட்டளை ; ஒழுங்கு ; நடுத்தரம் . |
| படித்தல் | வாசித்தல் ; கற்றல் ; சொல்லுதல் ; துதித்தல் ; பழகுதல் . |
| படித்தனம் | கோயில் முதலியவற்றுக்கு உதவும் நாட்கட்டளை . |
| படித்திரம் | சூட்டிறைச்சி . |
| படித்துறை | படிக்கட்டுகள் அமைந்த நீர்த்துறை . |
| படிதம் | கூத்து ; துதி ; மாணிக்கவகை . |
| படிதல் | அடியிற்றங்குதல் ; பரவுதல் ; வசமாதல் ; கையெழுத்துத் திருந்தி அமைதல் ; கீழ்ப்படிதல் ; குளித்தல் ; கண்மூடுதல் ; அமுங்குதல் ; கலத்தல் ; வணக்கமுடன் கீழே விழுதல் ; நுகர்தல் ; பொருந்துதல் . |
| படிப்படி | சிறுகச்சிறுக . |
| படிப்படியாய் | சிறுகச்சிறுக . |
| படிப்படை | காண்க : கூலிப்படை . |
| படிப்பணம் | அன்றாடச் செலவுக்குக் கொடுக்கும் பணம் . |
| படிப்பனவு | படிப்பு . |
| படிப்பனை | படிப்பு ; கல்வி ; படித்தல் ; திறன் . |
| படிப்பாளி | கற்றோன் . |
| படிப்பித்தல் | கற்பித்தல் . |
| படிப்பினை | காண்க : படிப்பனை ; புத்திமதி ; வங்கமணல் ; நீதி . |
| படிப்பு | கல்வி ; வாசிப்பு ; விரகு ; பாடுதல் ; போதனை . |
| படிப்புரை | ஒட்டுத்திண்ணை . |
| படிப்புறம் | கோயிற் பூசாரிகட்கு விடப்படும் மானியம் . |
| படிமக்கலம் | முகம்பார்க்கும் கண்ணாடி . |
| படிமகன் | பூமியின் மகனான செவ்வாய் . |
| படிமத்தாள் | தேவராட்டி . |
| படிமத்தான் | தேவராளன் , தெய்வமாடுவோன் . |
| படிமத்தோன் | தேவராளன் , தெய்வமாடுவோன் . |
| படிமதாளம் | ஒன்பதுவகைத் தாளத்துள் ஒன்று . |
| படிமம் | பிரதிமை ; உருவம் ; மாதிரி ; வடிவம் ; தவவேடம் ; நோன்பு ; சன்னதம் ; காண்க : படிமக்கலம் ; தூய்மை . |
| படிமவுண்டி | நோற்றுப் பட்டினி விட்டுண்ணும் உணவு . |
| படிமா | ஒப்பு ; மாதிரி . |
| படிமானம் | கீழ்ப்படிதல் ; சட்டப்பலகைகளின் இணைப்புப் பொருத்தம் ; அமைவு ; தணிவு . |
| படிமுழுதிடந்தோன் | நிலம் முழுதும் பெயர்த்துத் தூக்கிய திருமால் . |
| படிமேடை | படிப்படியாக உயர்ந்தமைந்த ஆசன வரிசை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 707 | 708 | 709 | 710 | 711 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
படாபஞ்சனம் முதல் - படிமேடை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, நாட்கட்டளை, வெடித்தல், படிப்பு, கொடுக்கும், முற்றும், படிக்கல், அன்றாடச், தெய்வமாடுவோன், படித்தல், உதவும், மாதிரி, கீழ்ப்படிதல், சிறுகச்சிறுக, முதலியவற்றுக்கு, கல்வி, படிமக்கலம், தேவராளன், படிப்பனை, நிறைகல், கற்பனை, கொடுஞ்சூழ்ச்சி, முழுக், படாரென, கூடாரம், அழிக்கை, செலவுக்குக், கூத்து, பணம், ஒத்த, நிலைமை, கோயில்

