முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » பஞ்சாமிலம் முதல் - பட்டடைக்கழனி வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - பஞ்சாமிலம் முதல் - பட்டடைக்கழனி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| பஞ்சாமிலம் | இலந்தை , புளியாரை , நெல்லி , எலுமிச்சை , மாதுளை என்னும் ஐவகைப் புளிப்புள்ள மரங்கள் . |
| பஞ்சாய் | கோரைவகை ; தூபக்கால் . |
| பஞ்சாய்க்கோதை | காண்க : பஞ்சாய்ப்பாவை . |
| பஞ்சாய்ப்பறத்தல் | விரைவாய் நடத்தல் ; நிலை குலைந்திருத்தல் . |
| பஞ்சாய்ப்பாவை | பஞ்சாய்க்கோரையாற் செய்த பாவை . |
| பஞ்சாயத்தார் | நியாய சங்கத்தார் . |
| பஞ்சாயத்து | ஐவர் கூடிய நியாய சபை ; வழக்கு விசாரணை . |
| பஞ்சாயம் | ஐந்து பேர் கூடிய நியாய சங்கம் ; கோரைவகை . |
| பஞ்சாயுதபாணி | ஐம்படைக் கையனான திருமால் . |
| பஞ்சாயுதம் | திருமால் தரிக்கும் ஐம்படைகளான சக்கரம் , வில் , வாள் , தண்டு , சங்கம் , இவை முறையே சுதரிசனம் , சார்ங்கம் , நாந்தகம் , கௌமோதகி , பாஞ்சசான்னியம் எனப் பெயர் பெறும் ; காண்க : ஐம்படைத்தாலி . |
| பஞ்சாயுதன் | காண்க : பஞ்சாயுதபாணி . |
| பஞ்சார்த்தல் | பஞ்சடைதல் . |
| பஞ்சாரம் | ஐந்து சரம்கொண்ட கழுத்தணி ; குதிரை , எருது இவற்றின் வயது ; ஆடையில் பஞ்சு எழும்பியுள்ள நிலை ; பறவை அடைக்கும் கூடு . |
| பஞ்சாலை | பஞ்சு அரைக்கும் ஆலை . |
| பஞ்சாவமுதம் | காண்க : பஞ்சாமிர்தம் . |
| பஞ்சான் | பச்சைக்குழந்தை ; செடிவகை ; மீன்வகை . |
| பஞ்சான்மா | அந்தர ஆன்மா , சீவான்மா , தத்துவ ஆன்மா , பூத ஆன்மா , மந்திர ஆன்மா என்பன . |
| பஞ்சானனம் | ஐம்முகமுடைய சிங்கம் . |
| பஞ்சானனன் | ஐம்முகத்தோனான சிவன் . |
| பஞ்சானுங்குஞ்சும் | குழந்தைகுட்டிகள் . |
| பஞ்சி | பஞ்சு ; பஞ்சணை ; வெண்துகில் ; காண்க : இலவு ; செவ்வரக்கு ; சடைந்தது ; பெருந்தூறு ; வருத்தம் ; சோம்பல் ; பஞ்சாங்கம் . |
| பஞ்சிகம் | தாளிக்கொடி . |
| பஞ்சிகை | கணக்கு ; பஞ்சாங்கம் ; உரைநூல் . |
| பஞ்சிதம் | விண்மீன் . |
| பஞ்சிநாண் | பூணூல் . |
| பஞ்சியடர் | கொட்டிய பஞ்சு . |
| பஞ்சியூட்டுதல் | மகளிர் பாதங்களில் செம்பஞ்சுக் குழம்பு பூசுதல் . |
| பஞ்சீகரணம் | ஐம்பூதக் கூறுகளின் சேர்க்கை . |
| பஞ்சு | பருத்தி ; சீலை ; பருத்திச்செடி ; செவ்வரக்குச் சாயமிட்ட பஞ்சு ; விளக்குத் திரி ; கவறாட்டத்தில் வழங்கும் குழூஉக்குறி . |
| பஞ்சுகொட்டி | பஞ்சு அடிப்பவன் . |
| பஞ்சுத்துய் | பன்னிய பஞ்சுநுனி . |
| பஞ்சுப்பொதி | பஞ்சடைத்த மூட்டை . |
| பஞ்சுரம் | குறிஞ்சி அல்லது பாலை யாழ்த்திறத்துள் ஒன்று . |
| பஞ்சூகம் | பெருமை . |
| பஞ்சேந்திரியம் | மெய் , வாய் , கண் , மூக்கு , செவி என்னும் ஐம்பொறிகள் . |
| பஞ்சை | பஞ்சம் ; வறுமை ; ஏழை ; வலுவில்லான் ; சிறுமைத்தனம் உள்ளவர் . |
| பஞ்சைக்கோலம் | வறுமைவேடம் . |
| பஞ்சைத்தனம் | இவறல் ; வறுமை . |
| பஞ்சைமயிர் | மெல்லிய அல்லது புன்மயிர் . |
| பஞ்சையன் | வறிஞன் . |
| பஞ்ஞிலம் | மக்கள்தொகுதி . |
| பட்கை | பாம்பின் மேல்வாய் நச்சுப்பல் . |
| பட்சணம் | சிற்றுண்டி ; உண்கை ; விலங்கின் உணவு . |
| பட்சணி | உண்போன் ; பெருந்தீனிக்காரன் . |
| பட்சணை | காண்க : பட்சணம் . |
| பட்சதாபம் | இரக்கம் . |
| பட்சபாதம் | ஒருதலைச்சார்பு ; கைகால்களை வலியற்றதாகச் செய்யும் நோய் . |
| பட்சம் | அன்பு ; கட்சி ; சிறகு ; பதினைந்து நாள் கொண்டது ; கோட்பாடு . |
| பட்சாந்தரம் | கொள்ளப்பட்ட கொள்கையினின்று வேறுபட்ட கொள்கை . |
| பட்சி | பறவை ; குதிரை . |
| பட்சித்தல் | உண்ணுதல் ; கவர்தல் ; அழித்தல் . |
| பட்சியம் | பணியாரம் . |
| பட்சிராசன் | காண்க : பக்கிராசன் ; கருடப்பச்சைக்கல் . |
| பட்டகசாலை | கூடம் ; மனையில் உண்ணுமிடம் . |
| பட்டகம் | காண்க : ஆடுதின்னாப்பாளை ; புழுக்கொல்லிக்கொடி . |
| பட்டங்கட்டுதல் | பட்டப்பெயர் சூட்டுதல் ; அரசு முதலிய பதவி அளித்தல் ; திருமணத்தில் மணமக்கள் நெற்றியில் பொற்பட்டங் கட்டுதல் . |
| பட்டடை | அடைகல் ; கொல்லன்களரி ; குவியல் ; தானியவுறை ; தோணிதாங்கி ; தலையணையாக உதவும் மணை ; உட்காரும் பலகை ; அதிர்வேட்டுக் குழாய்கள் பதித்த கட்டை ; நரம்புகளின் இளியிசை ; இறைப்புப் பாசனத்தால் விளையும் கழனி ; கழுத்தணி . |
| பட்டடைக்கழனி | தண்ணீர் இறைத்துப் பயிரிடுங் கழனி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 703 | 704 | 705 | 706 | 707 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பஞ்சாமிலம் முதல் - பட்டடைக்கழனி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, பஞ்சு, ஆன்மா, நியாய, பறவை, கழனி, பட்சணம், பஞ்சாங்கம், குதிரை, அல்லது, வறுமை, திருமால், நிலை, பஞ்சாய்ப்பாவை, கோரைவகை, கூடிய, ஐந்து, என்னும், பஞ்சாயுதபாணி, சங்கம், கழுத்தணி

