முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » பக்கவெட்டுப்போடுதல் முதல் - பகல்செய்வான் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - பக்கவெட்டுப்போடுதல் முதல் - பகல்செய்வான் வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
பக்கவெட்டுப்போடுதல் | கூச்சங்காட்டுதல் . |
பக்கவேர் | பக்கத்திற் செல்லும் வேர் . |
பக்கறை | துணியுறை ; குழப்பம் ; பல்லில் கறுப்புக்கறை ஏற்றுகை ; பை . |
பக்காத்திருடன் | பேர்போன திருடன் . |
பக்கி | பறவை ; ஒன்றும் ஈயாதவன் ; குதிரை வண்டி . |
பக்கிசைத்தல் | ஒலி விட்டிசைத்தல் ; வேறுபடுத்திக் கூறுதல் . |
பக்கிடுதல் | வெடித்தல் ; வடுப்படுதல் ; திடுக்கிடுதல் . |
பக்கிணி | ஓர் இரவும் அதற்கு முன்பின்னுள்ள இருபகல்களும் . |
பக்கிராசன் | பறவைகளுக்கு அரசனான கருடன் . |
பக்கிரி | முகமதியப் பரதேசி ; பிச்சைக்காரன் . |
பக்கு | பிளவு ; கவர்படுகை ; பை ; மரப்பட்டை ; புண்ணின் அசறு ; பற்பற்று ; பொருக்கு . |
பக்குப்பக்கெனல் | அச்சக்குறிப்பு ; மிகுதிக்குறிப்பு ; திடீரென்று எழும் ஒலிக்குறிப்பு ; வெடிக்கச் சிரித்தற்குறிப்பு ; அடுத்தடுத்து உண்டாகும் ஒலிக்குறிப்பு . |
பக்குவகாலம் | தகுதியான காலம் ; பெண் பூப்படையுங்காலம் . |
பக்குவசாலி | தகுதியுள்ளவன் ; ஆன்மபக்குவம் உள்ளவன் . |
பக்குவஞ்சொல்லுதல் | மன்னிப்புக் கேட்டல் ; செய்வகை கேட்டல் . |
பக்குவப்படுதல் | பூப்படைதல் ; தகுதியாதல் ; ஆன்மபரிபாகம் அடைதல் . |
பக்குவம் | தகுதி ; முதிர்ச்சி ; ஆத்துமபரிபாகம் ; ஆற்றல் ; மன்னிப்பு ; பூப்படைகை . |
பக்குவமாதல் | காண்க : பக்குவப்படுதல் . |
பக்குவர் | கருமகாண்டிகர் , ஞானகாண்டிகர் , பக்திகாண்டிகர் எனப்படும் வைதிக ஒழுக்கத்தவர் ; மருத்துவர் . |
பக்குவன் | தகுதியுள்ளோன் . |
பக்குவாசயம் | இரைப்பை . |
பக்குவி | தகுதியுடையவன்(ள்) ; பூப்படைந்தவள் . |
பக்குவிடுதல் | பிளத்தல் ; தோலறுதல் . |
பக்கெனல் | சிரிப்பின் ஒலிக்குறிப்பு ; அச்சம் ; வியப்பு முதலியவற்றின் குறிப்பு ; வெடித்தற்குறிப்பு ; விரைவுக்குறிப்பு . |
பக்தன் | தெய்வபக்தியுள்ளவன் . |
பக்தாதாயம் | நெல்வருவாய் . |
பக்தி | கடவுள் , குரு முதலியோரிடத்து வைக்கும் அன்பு ; வழிபாடு . |
பகட்டன் | ஆடம்பரக்காரன் . |
பகட்டு | ஆடம்பரம் ; தற்பெருமை ; ஒளி ; கவர்ச்சி ; ஏமாற்று ; அதட்டு . |
பகட்டுதல் | வெளிமினுக்குதல் ; வேடங்காட்டுதல் ; ஆடம்பரங்காட்டுதல் ; வெருட்டுதல் ; தற்புகழ்ச்சி செய்தல் ; அருவருத்தல் ; பொலிவுபெறுதல் ; மயங்குதல் ; வஞ்சித்தல் ; கண்மயங்கப் பண்ணுதல் ; அதட்டுதல் . |
பகட்டுமுல்லை | முயற்சியான் வந்த இளைப்பாலும் பாரம் பொறுத்தலாலும் மனைக்கிழவனை உழுகின்ற எருதுடன் உவமிக்கும் புறத்துறை . |
பகடக்காரன் | எத்தன் ; வீண் ஆரவாரக்காரன் ; சூழ்ச்சிக்காரன் . |
பகடம் | தற்பெருமை ; அதட்டு ; நிறங்கொடுக்கை ; சிலம்பம் ; வெளிவேடம் . |
பகடி | பரிகாசம் ; விகடம் ; சிரிப்பு உண்டாக்குபவன் ; வெளிவேடக்காரன் ; கூத்தாடி ; கூத்துவகை ; வினை . |
பகடு | பெருமை ; பரப்பு ; வலிமை ; எருது ; எருமைக்கடா ; ஏர் ; ஆண்யானை ; தெப்பம் ; ஓடம் ; சந்து . |
பகடை | சூதின் தாயத்தில் ஒன்று ; எதிர்பாராத நற்பேறு ; சக்கிலியச் சாதிப்பெயர் . |
பகடையடித்தல் | இடம்பச் சொல் சொல்லுதல் . |
பகண்டை | கவுதாரிவகை ; சிவற்பறவை ; விகடப்பாடல் ; நறையால் என்னும் பூடுவகை . |
பகந்தரம் | மலவாயில் புரைவைத்த புண் . |
பகபகெனல் | தீ எரியும்போது உண்டாகும் ஒலிக்குறிப்பு ; பசியால் வயிறு எரிதற்குறிப்பு . |
பகம் | ஐசுவரியம் , வீரியம் , புகழ் , திரு , ஞானம் , வைராக்கியமென்னும் அறுகுணம் ; பெண்குறி ; கொக்கு ; குயில் ; காண்க : கொக்குமந்தாரை ; காக்கட்டான்கொடி . |
பகர் | ஒளி ; காண்க : பங்கம்பாளை . |
பகர்ச்சி | சொல் . |
பகர்த்துதல் | பெயர்த்து எழுதுதல் . |
பகர்தல் | சொல்லுதல் ; விற்றல் ; கொடுத்தல் ; உணர்த்துதல் ; ஒளிர்தல் ; பெயர்தல் . |
பகர்நர் | விற்குநர் . |
பகரம் | ஒளி ; அழகு ; பதிலாக . |
பகரி | காண்க : ஆவிரை . |
பகரிப்பு | பகட்டு ; ஒளி . |
பகல் | பகுக்கை ; நடு ; நடுவுநிலை ; நுகத்தாணி ; முகூர்த்தம் ; அரையாமம் ; மத்தியானம் ; பகற்போது ; பிறரோடு கூடாமை ; கட்சி ; இளவெயில ; அறுபது நாழிகைகொண்ட நாள் ; ஊழிக்காலம் ; சூரியன் ; ஒளி ; வெளி ; கமுக்கட்டு . |
பகல்செய்வான் | பகற்பொழுது செய்யும் சூரியன் . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 695 | 696 | 697 | 698 | 699 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கவெட்டுப்போடுதல் முதல் - பகல்செய்வான் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், ஒலிக்குறிப்பு, காண்க, சொல், அதட்டு, சொல்லுதல், சூரியன், தற்பெருமை, பகட்டு, கேட்டல், பக்குவப்படுதல், உண்டாகும்