முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » பகுதிக்கிளவி முதல் - பங்குக்காரன் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - பகுதிக்கிளவி முதல் - பங்குக்காரன் வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
பகுதிக்கிளவி | காண்க : பக்கச்சொல் . |
பகுதிகட்டுதல் | இறைகொடுத்தல் ; பங்கிடுதல் . |
பகுதிப்பொருள்விகுதி | தனக்கு ஒரு பொருளின்றிப் பகுதியின் பொருளிலேயே வரும் விகுதி . |
பகுப்பு | பிரிவு . |
பகுபதம் | பகுதி , விகுதி முதலிய உறுப்புகளாகப் பிரிக்கக்கூடிய சொல் . |
பகுபதவுறுப்பு | பகுதி , விகுதி இடைநிலை , சந்தி , சாரியை , விகாரம் என்னும் சொல்லுறுப்புகள் . |
பகுமூத்திரம் | நீரிழிவு . |
பகுவசனம் | பன்மை . |
பகுவாய் | பிளந்த வாய் ; அகன்ற வாய் ; பிழா , தாழி . |
பகுவொளி | பேரொளி . |
பகுளம் | மிகுதி ; தேய்பிறை . |
பகேசிகை | காயாத மரம் . |
பகை | எதிர்ப்பு ; பகைவன் ; மாறுபாடு ; வெறுப்பு ; தீங்கு ; காண்க : பகைநரம்பு ; வேற்றரசருடன் பகைகொள்ளுகை ; கோளின் பகைவீடு ; காமகுரோதம் முதலிய உட்பகை . |
பகை | எதிர் . |
பகைசாதித்தல் | வன்மங்கொள்ளுதல் . |
பகைஞன் | எதிரி . |
பகைத்தல் | பகைகொள்ளல் ; முரணல் ; அடித்தல் ; சார்தல் . |
பகைத்தி | பகைப்பெண் . |
பகைத்தொடை | காண்க : முரண்தொடை ; மாறுபட்டவற்றின் சேர்க்கை . |
பகைதணிவினை | தூது செல்லுதல் . |
பகைநரம்பு | யாழில் நின்ற நரம்புக்கு மூன்று ஆறாவதாயுள்ள எதிர்நரம்பு . |
பகைப்புலம் | எதிரியின் இடம் ; போர்க்களம் . |
பகைமுனை | போர்க்களம் . |
பகைமேற்செல்லல் | போருக்குச் செல்லுதல் . |
பகைமை | எதிர்ப்பு . |
பகையகம் | போர்க்களம் ; எதிரியின் இடம் . |
பகையாக்கல் | வேற்றரசருடன் பகைகெள்ளுகை . |
பகையாளி | காண்க : பகைவன் . |
பகைவர்க்கம் | காமம் , வெகுளி , கடும்பற்றுள்ளம் , மானம் , உவகை , மதம் என ஆன்மாவின் உட்பகைகளாயுள்ள ஆறு குற்றங்கள் . |
பகைவன் | எதிரி . |
பகோளம் | வானமண்டலம் . |
பங்கக்கேடு | இகழ்ச்சி , அவமானம் . |
பங்கசம் | தாமரை . |
பங்கசாதம் | தாமரை . |
பங்கதாளம் | தாளவகை . |
பங்கப்படுதல் | சிறுமையடைதல் . |
பங்கம் | தோல்வி ; குற்றம் ; அவமானம் ; வெட்கம் ; விகாரம் ; கேடு ; நல்லாடை ; சிறுதுகில் ; இடர் ; துண்டு ; பங்கு ; பிரிவு ; காண்க : பங்கதாளம் ; குளம் ; அலை ; சேறு ; புழுதி ; பாவம் ; முடம் ; பந்தயம் . |
பங்கம்பாலை | காண்க : ஆடுதின்னாப்பாளை ; அரிவாள்முனைப்பூண்டு . |
பங்கம்பாளை | காண்க : ஆடுதின்னாப்பாளை ; அரிவாள்முனைப்பூண்டு . |
பங்கமழிதல் | மானமிழத்தல் . |
பங்கயச்செல்வி | தாமரையிலுள்ள திருமகள் . |
பங்கயத்தவன் | பிரமன் . |
பங்கயப்படு | தாமரைமடு . |
பங்கயப்பீடிகை | புத்தரின் பாதங்கள் அமைந்த பதுமபீடம் . |
பங்கயம் | சேற்றில் தோன்றும் தாமரை ; தாமரை வடிவான ஆயுதவகை ; நாரை . |
பங்கயன் | கதிரவன் ; தாமரையில் தோன்றிய நான்முகன் . |
பங்கயனாள் | பிரமனுக்குரிய உரோகிணிநாள் . |
பங்கயாசனன் | கதிரவன் ; தாமரையில் தோன்றிய நான்முகன் . |
பங்கவாசம் | சேற்றில் வாழும் நண்டு . |
பங்களப்படை | பதர்போன்ற கூட்டுப்படை . |
பங்களம் | பதர்க்குவியல் ; பயனற்றது ; காண்க : பங்களப்படை . |
பங்களன் | வங்காள நாட்டன் . |
பங்கறை | அழகின்மை ; அழகில்லாதவர் . |
பங்கன் | பாகமுடையவன் ; இவறலன் , ஒன்றுங் கொடாதவன் . |
பங்காரம் | பொன் ; வரம்பு . |
பங்காரு | பொன் . |
பங்காலி | வௌவால் . |
பங்காளம் | ஒரு நாடு ; ஒரு பண்வகை . |
பங்காளி | கூட்டாளி ; தாயாதி ; வங்காளநாட்டான் . |
பங்கி | ஆடவரின் மயிர் ; விலங்குகளின் மயிர் வகை ; பாகம் பெற்றுக்கொள்வோன் ; சாதிலிங்கம் . |
பங்கிடுதல் | பகுத்துக்கொடுத்தல் ; ஏற்படுத்துதல் . |
பங்கித்தல் | வெட்டுதல் ; பகுத்தல் . |
பங்கியடித்தல் | கஞ்சாப்புகை குடித்தல் ; கஞ்சா இளகம் உண்ணுதல் . |
பங்கிலம் | தெப்பம் . |
பங்கீடு | பங்கிடுதல் ; கணக்கு ; திட்டம் ; உபாயம் . |
பங்கு | பாகம் ; பாதி ; பக்கம் ; நிலம் ; முடம் ; முடவன் ; சனி ; தலைப்பாகை . |
பங்குக்காணி | கூட்டுப்பங்கான நிலம் . |
பங்குக்காரன் | பங்குக்குடையவன் ; ஊர்களில் மிகுதியான நிலமுடையவன் . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 697 | 698 | 699 | 700 | 701 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பகுதிக்கிளவி முதல் - பங்குக்காரன் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, தாமரை, பகைவன், போர்க்களம், விகுதி, பங்கிடுதல், கதிரவன், தாமரையில், சேற்றில், அரிவாள்முனைப்பூண்டு, முடம், ஆடுதின்னாப்பாளை, தோன்றிய, நான்முகன், பாகம், நிலம், மயிர், பொன், பங்களப்படை, பங்கு, பங்கதாளம், பகைநரம்பு, வேற்றரசருடன், பகுதி, எதிர்ப்பு, விகாரம், வாய், எதிரி, செல்லுதல், அவமானம், பிரிவு, சொல், இடம், எதிரியின், முதலிய