முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » நுழைத்தல் முதல் - நூலாக்கலிங்கம் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - நுழைத்தல் முதல் - நூலாக்கலிங்கம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| நுழைத்தல் | புகுத்தல் . |
| நுழைதல் | புகுதல் ; பதிதல் ; சேர்ந்துகொள்ளுதல் ; நுண்மையாதல் ; இடைச்செருகப் படுதல் ; கூரிதாதல் ; சாடை சொல்லுதல் ; கடத்தல் ; மட்டுக்கட்டுதல் . |
| நுழைநரி | நரி ; நயவஞ்சகன் . |
| நுழைபுலம் | நுண்ணறிவு . |
| நுழைவழி | திட்டிவாசல் . |
| நுழைவாசல் | திட்டிவாசல் . |
| நுழைவாயில் | திட்டிவாசல் . |
| நுழைவு | நுண்மை ; கூரிய புத்தி . |
| நுள்ளல் | காண்க : நுளம்பு . |
| நுள்ளான் | சிற்றெறும்பு . |
| நுள்ளு | கிள்ளு ; சிறுதுண்டு . |
| நுள்ளுதல் | கிள்ளுதல் . |
| நுளம்பு | சிறுகொசு ; பெருங்கொசு . |
| நுளுப்புதல் | கழப்புதல் . |
| நுளை | வலையர்சாதி ; ஈனம் ; குருடு . |
| நுளைச்சி | நுளைச்சாதிப் பெண் , நெய்தல்நிலப் பெண் . |
| நுளையன் | இழிந்தோன் ; நெய்தல்நிலத்தான் . |
| நுறுக்குதல் | பொடியாக்குதல் . |
| நுறுங்கு | குறுநொய் . |
| நுறுங்குதல் | பொடிபடுதல் ; சிதைதல் . |
| நுன் | உனது ; நீ என்பது வேற்றுமையுருபு ஏற்கும்போது பெறும் வடிவம் . |
| நுனி | முனை ; நுண்மை . |
| நுனித்தல் | கூராக்குதல் ; கூர்ந்து நோக்குதல் ; ஆராய்ந்து கூறுதல் ; கருதுதல் . |
| நுனிநா | நாக்கின் நுனி . |
| நுனிப்பு | கூர்ந்தறிகை . |
| நுனிப்புல்மேய்தல் | மேல்வாரியாய்ப் புல் மேய்தல் ; மேலெழுந்தவாரியாகப் படித்தல் . |
| நுனை | முனை , |
| நூ | ஒர் உயிர்மெய்யெழுத்து (ந் +ஊ) எள் ; யானை அணிகலன் . |
| நூக்கம் | உயரம் ; நூக்கமரம் ; தோதகத்திமரம் . |
| நூக்கல் | நெய்வார் கருவியுள் ஒன்று . |
| நூக்கு | காண்க : நூக்கம் . |
| நூக்குதல் | தள்ளுதல் ; ஊசலாட்டுதல் ; அசைத்தல் ; தூண்டுதல் ; எறிதல் ; முறித்தல் ; நீக்குதல் ; பரிகாரம் செய்தல் ; சாத்துதல் . |
| நூங்கர் | தேவர் . |
| நூங்கு | பெருமை ; மிகுதி . |
| நூங்குதல் | மிகுதியாயிருத்தல் . |
| நூடி | சிற்றேலம் . |
| நூத்தல் | நொதுத்தல் ; தளர்தல் ; அழித்தல் . |
| நூதல் | அவிதல் . |
| நூதனம் | புதுமை ; புதியது . |
| நூதனன் | புதியவன் ; புதியதில் விருப்பமுடையவன் ; புதியதை உண்டாக்குபவன் . |
| நூப்பு | தணிப்பு . |
| நூபம் | எருது ; எருக்கஞ்செடி . |
| நூபுரம் | பாதகிண்கிணி ; சிலம்பு . |
| நூர்த்தல் | அவித்தல் ; ஆற்றுதல் . |
| நூர்தல் | அவிதல் ; ஆறுதல் ; பதனழிதல் . |
| நூரல் | அவிதல் ; ஆறுதல் ; பதனழிதல் . |
| நூல் | பஞ்சிநூல் ; பூணூல் ; மங்கலநாண் ; எற்றுநூல் ; ஆண்குறியிலுள்ள நரம்பு ; ஆண்குறி ; ஆயுதவகை ; சாத்திரம் ; ஆகமம் ; ஒரு நாடக நூல் ; ஆலோசனை . |
| நூல்கேட்டல் | பாடங்கேட்டல் . |
| நூல்சோர்த்தல் | நூலைப் பதனிடுதல் . |
| நூல்பிடித்தல் | சுவரொழுங்கு பார்க்க நூலைப் பிடித்தல் . |
| நூல்புடைத்தல் | மரத்தின் நேர்மையறிய நூலால் தெறித்துக் குறியிடுதல் . |
| நூல்போடுதல் | காண்க : நூல்புடைத்தல் ; நியாஞ்செய்தல் ; பூணூற் கலியாணஞ் செய்தல் . |
| நூல்போதல் | கல்வியில் தேர்ந்தவன் ஆதல் ; கைம்பெண்ணாதல் . |
| நூல்யாப்பு | தொகுத்தல் , விரித்தல் , தொகைவிரி , மொழிபெயர்ப்பு என நான்கு வகையாக இயற்றப்படும் நூலின் அமைப்பு ; ஒரு புடைவைவகை . |
| நூல்வல்லோர் | கல்விமான்கள் ; அமைச்சர் . |
| நூல்வழக்கு | செய்யுள் வழக்கு ; சாத்திரமுறை . |
| நூல்விடுதல் | சிலந்தி முதலியன நூற்கூடு கட்டுதல் ; மனநிலையின் ஆழம் பார்த்தல் . |
| நூல்வெண்மாடம் | காண்க : நூன்மாடம் . |
| நூலச்சு | நெசவுக்கருவியின் உறுப்புவகை ; கம்பிச்சட்டம் . |
| நூலட்டவணை | நூலின் பொருளடக்கம் ; நூலின் வகைகளைத் தொகுத்துரைக்கும் தொகுநூல் . |
| நூலவையார் | அறநூலோதினோர் . |
| நூலறிபுலவர் | அறநூல்கள் முதலியன உணர்ந்த அமைச்சர் . |
| நூலறிவு | கல்வியறிவு . |
| நூலாக்கலிங்கம் | நூற்கப்படாத நூலால் இயன்ற ஆடை , பட்டாடை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 680 | 681 | 682 | 683 | 684 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நுழைத்தல் முதல் - நூலாக்கலிங்கம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, நூலின், திட்டிவாசல், அவிதல், நூல்புடைத்தல், நூலைப், நூலால், நுண்மை, முதலியன, அமைச்சர், நூல், பதனழிதல், முனை, நுனி, நூக்கம், செய்தல், ஆறுதல், நுளம்பு, பெண்

