முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » நூலாசிரியன் முதல் - நூன்முடிபு வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - நூலாசிரியன் முதல் - நூன்முடிபு வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| நூலாசிரியன் | நூலாக்கியோன் . |
| நூலாம்படை | ஒட்டடை . |
| நூலாம்பூச்சி | சிலந்திப்பூச்சி . |
| நூலார் | கற்றோர் . |
| நூலிழத்தல் | கைம்மையடைதல் . |
| நூலிழந்தாள் | கைம்பெண் . |
| நூலிழை | ஓரிழைநூல் . |
| நூலிழைத்தல் | கதிரிலுள்ள நூலை எடுத்துச் சுற்றுதல் ; நூல்நூற்றல் . |
| நூலுண்டை | நூல் சுற்றிய உண்டை ; நெய்தற்குரிய நூல் சுற்றின குற்றி . |
| நூலூரைப்போர் | ஆசிரியர் . |
| நூலுறிஞ்சி | நெய்வார் கருவியுள் ஒன்று ; நெய்வோன் . |
| நூலெச்சம் | நூலுரைவகை . |
| நூலெடுத்தல் | நூல் விலைக்கு வாங்குதல் ; நூலைச் சிக்கெடுத்தல் . |
| நூலேணி | கயிற்றினால் அமைந்த ஏணி ; பாய்மரத்து ஏணி ; கடல்மீன்வகை . |
| நூலோட்டுதல் | பெருந்தையலிடுதல் . |
| நூலோடுதல் | நெசவுப் பாவோடுகை . |
| நூலோர் | நூலாசிரியர் ; கற்றோர் ; அமைச்சர் ; பார்ப்பனர் . |
| நூவு | எள் . |
| நூவுதல் | நீர்பாய்ச்சுதல் . |
| நூவுநெய் | நல்லெண்ணெய் . |
| நூழல் | நூறல் , அழித்தல் . |
| நூழில் | கொன்றுகுவிக்கை ; மிடைந்த போர் ; வீரனொருவன் பகைமன்னர் சேனையைக் கொன்று தன் வேலைத் திரித்து ஆடுதலைக் கூறும் புறத்துறை ; கொள்ளையடித்தோர் மக்களைக் கொன்றுகுவிக்கும் இடம் ; குவிதல் ; கொடிப்பிணக்கு ; ஒரு கொடிவகை ; கொடிக்கொற்றான் ; திரை ; யானை ; தொளை ; செக்கு . |
| நூழிலர் | வணிகர் . |
| நூழிலாட்டு | கொன்றுகுவித்தல் ; வீரனொருவன்தன் மெய்யில் தைத்த படை பறித்து மாற்றார் மேல் எறிதல் . |
| நூழிலாட்டுதல் | கொன்றுகுவித்தல் . |
| நூழை | சிறுவாயில் ; துளை ; சன்னல் ; குகை ; நுண்மை . |
| நூழைவாயில் | சுருங்கைவழி . |
| நூற்கருத்து | நூற்பொருள் . |
| நூற்கழி | நூற்பந்து ; நூல் சுற்றிய கழி . |
| நூற்கிரந்தம் | சாத்திரம் . |
| நூற்குற்றம் | குன்றக்கூறல் , மிகைபடக் கூறல் , கூறியது , கூறல் , மாறுக்கொளக் கூறல் , வழூஉச்சொற் புணர்த்தல் , மயங்கவைத்தல் , வெற்றெனத் தொடுத்தல் , மற்றொன்று விரித்தல் , சென்றுதேய்ந்திறுதல் , நின்று பயனின்மை என்னும் பத்து வகைப்பட்ட நூலின்கண் அமையலாகாக் குற்றங்கள் . |
| நூற்படுகு | நூற்பாவு . |
| நூற்பயன் | நூலால் எய்தும் பயன் . |
| நுற்பழக்கம் | கல்விப்பயிற்சி . |
| நூற்பா | காண்க : நூற்பாவகவல் ; தறியிற் பிணைக்கும் பாவு . |
| நூற்பாவகவல் | இலக்கணம் முதலியன அமைதற்குரிய அகவல்வகை ; சூத்திர யாப்பு . |
| நூற்புலமை | புத்தக அறிவு . |
| நூற்புறத்திணை | ஆகமத்தால் அமைந்த துணிபுரை . |
| நூற்பொருள் | நூலிற் கூறப்படும் பொருள் . |
| நூற்றந்தாதி | அந்தாதித் தொடையாகப் பாடப்படும் நூறு வெண்பா அல்லது கலித்துறைகொண்ட சிற்றிலக்கியவகை . |
| நூற்றல் | நூற்குதல் , நூலாக்குதல் . |
| நூற்றாண்டு | நூறு ஆண்டுகொண்ட கால அளவு . |
| நூற்றாறு | நூனாழி ; நெசவிற்குதவும் நூல் சுற்றிய சிறுகுச்சி . |
| நூற்றுநிறை | நூறுபலம் . |
| நூற்றுலாமண்டபம் | நூறடி உலாவுதற்குரிய அமுது செய்யும் மண்டபம் . |
| நூற்றுவர் | நூறு என்னும் தொகையினர் ; துரியோதனாதியர் . |
| நூற்றவரைக்கொல்லி | நூறுபேரை ஒருங்கே கொல்லும் பொறிவகை . |
| நூற்றுறை | நூற்பொருள் . |
| நூறாயிரம் | இலக்கம் , இலட்சம் . |
| நூறு | நூறு என்னும் எண் ; மா , பொடி முதலியன ; சுண்ணணாம்பு . |
| நூறு | (வி) அழி . |
| நூறுகோடி | பதினாயிரம் இலட்சங்கொண்ட எண் ; நூறு முனைகளையுடைய வச்சிரப் படை . |
| நூறுதல் | அழித்தல் ; அறைந்துகொள்ளுதல் ; வெட்டுதல் ; நெரித்தல் ;பொடியாக்குதல் ; இடித்தல் ; வளைந்துகொள்ளுதல் ; துரத்தல் . |
| நூறும்புகுதல் | நூறாண்டு வாழ்தல் . |
| நூறை | மலங்குமீன் ; வள்ளிவகை . |
| நூன்மடந்தை | கலைமகள் . |
| நூன்மாடம் | கூடாரம் . |
| நூன்முகம் | பாயிரம் ; நூலின் தொடக்கம் ; நூற்றுறை . |
| நூன்முடிபு | நூலின் உட்பகுதியாய் முடியும் உறுப்பு ; நூற்பொருளினது நோக்கம் ; நூலின் இறுதி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 681 | 682 | 683 | 684 | 685 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நூலாசிரியன் முதல் - நூன்முடிபு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், நூறு, நூல், என்னும், நூலின், கூறல், நூற்பொருள், சுற்றிய, அமைந்த, நூற்றுறை, முதலியன, நூற்பாவகவல், கொன்றுகுவித்தல், அழித்தல், கற்றோர்

