தமிழ் - தமிழ் அகரமுதலி - நிமிடம் முதல் - நியாயபோதனை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| நிமிடம் | நிமையம் , காலநுட்பம் ; தாளத்தின் காலவகை பத்தனுள் ஒன்று . |
| நிமிடன் | மிகத்திறமையாளன் . |
| நிமிடி | சுறுசுறுப்புள்ளவன் . |
| நிமிடிபாதம் | கண்டிப்பு ; பிடிவாதம் . |
| நிமிடு | திறமையான வேலை . |
| நிமிடுதல் | நெருடுதல் . |
| நிமிண்டி | ஓர் எறும்புவகை ; சிறு திருடன் . |
| நிமிண்டுதல் | கசக்குதல் ; கிள்ளுதல் ; பிறர் அறியாமற் சிறியதாக எடுத்தல் . |
| நிமித்தக்காரன் | வருஞ்செயல் சொல்வோன் . |
| நிமித்தகாரணம் | காரணம் மூன்றனுள் குடத்துக்குக் குயவன்போலக் காரியத்தோடு சேராத காரணம் . |
| நிமித்தத்துவம் | ஏதுத்தன்மை . |
| நிமித்ததானம் | தென்புலத்தார்க்குச் செய்யுஞ் சடங்கினுள் ஒன்று . |
| நிமித்தம் | காரணம் ; காண்க : நிமித்தகாரணம் ; சகுனம் ; அடையாளம் ; இலக்கு ; பொருட்டு ; சபிண்டீகரணத்தில் இறந்தோர்க்குப் பிரதிநிதியாய் வரிக்கப்பெற்றவர்க்குரிய இடம் . |
| நிமித்திகப்புலவர் | அரசரின் உறுதிச் சுற்றத்தார் ஐவருள் வருவது கூறவல்ல கணியர் ; குறிசொல்லுபவர் . |
| நிமித்திகர் | அரசரின் உறுதிச் சுற்றத்தார் ஐவருள் வருவது கூறவல்ல கணியர் ; குறிசொல்லுபவர் . |
| நிமித்தியம் | சகுனம் ; காரணம் . |
| நிமிதல் | வாய்நெளிதல் . |
| நிமிர்த்துதல் | நேர் நிற்கச் செய்தல் ; வளைவு நீக்குதல் ; சீர்ப்படுத்துதல் ; நன்றாகப் புடைத்தல் . |
| நிமிர்தல் | உயர்தல் ; நீளுதல் ; வளர்தல் ; ஏறுதல் ; பரத்தல் ; நுடங்குதல் ; நடத்தல் ; ஓடுதல் ; மிகைத்தல் ; தூரமாதல் ; உயர்ந்ததாதல் ; நெருங்குதல் ; உறுதியாதல் ; இடையிடுதல் ; முயலுதல் ; இறுமாத்தல் ;கோள் மீளத் திரும்புதல் . |
| நிமிரல் | நிமிர்கை ; சோறு . |
| நிமிளன் | காண்க : நிமிடி ; கெட்டிக்காரன் . |
| நிமிளை | செவ்வெண்மையான கல்வகை . |
| நிமை | இமை . |
| நிமைத்தல் | இமைத்தல் . |
| நியக்கரணம் | இகழ்வு , அவமதிப்பு . |
| நியக்கி | மான் . |
| நியக்குரோதம் | ஆலமரம் . |
| நியசித்தல் | வைத்தல் ; பதித்தல் . |
| நியதம் | அடக்கம் ; எப்பொழுதும் . |
| நியதி | கட்டுப்பாடு ; செய்கடன் ; ஒழுக்கவிதி ; ஊழ் ; முறைமை ; வரையறை ; எப்பொழுதும் . |
| நியதிச்சொல் | காண்க : நியதிப்பெயர் . |
| நியதித்தல் | உறுப்புகளை மந்திரத்தால் தெய்வங்கட்கு உரியனவாக்குதல் . |
| நியதிப்பெயர் | ஏற்புடைய மொழி . |
| நியதிபண்ணுதல் | நீக்குதல் . |
| நியதுதல் | விடுதல் . |
| நியதேந்திரியன் | ஐம்பொறிகளை அடக்கினவன் . |
| நியந்தா | கட்டளையிடுவோன் ; கடவுள் . |
| நியமக்காரன் | நோன்புபூண்டவன் ; ஒழுக்கமுள்ளவன் . |
| நியமங்கெட்டவன் | ஒழுக்கந் தவறியவன் . |
| நியமச்சூத்திரம் | ஓரிடத்தில் பல விதிகள் நிகழும் நிலையில் ஒன்றை வரையறுக்கும் சூத்திரம் . |
| நியமஞ்செய்தல் | ஏற்படுத்துதல் ; வேலையில் அமர்த்துதல் ; நோன்புகொள்ளல் . |
| நியமம் | செய்கடன் ; விதி ; அட்டயோக விதிமுறைகளில் வழுவாது ஒழுகுதல் ; வரையறுக்கை ; வழக்கு ; உறுதி ; முடிவு ; நகரம் ; கோயில் ; கடைத்தெரு ; வீதி ; இடம் ; மண்டபம் . |
| நியமவிஞ்சனம் | இன்றியமையாச் சாதனம் . |
| நியமனம் | கட்டளை : அமர்த்தம் ; உத்தியோக அமைவு ; ஆணை ; வகைப்படுத்துகை . |
| நியமித்தல் | உத்தியோகம் முதலியவற்றில் அமர்த்துதல் ; தீர்மானித்தல் ; சங்கற்பஞ் செய்தல் ; ஓரிடத்திற் பல விதிகள் நிகழும் நிலையில் ஓன்று அல்லது சிலவே வரும் என்று வரையறுத்தல் ; பிறப்பித்தல் ; கட்டளையிடல் ; வகைப்படுத்துதல் . |
| நியமிதம் | நியமனம்பெற்றது ; உறுதி . |
| நியர் | ஒளி . |
| நியர்ப்புதம் | பதினாயிரங்கோடி . |
| நியாக்கியம் | பொரியரிசி . |
| நியாசம் | வைத்தல் ; கிரியை ; தன்னைக் கடவுளிடம் ஒப்படைத்தல் ; வேம்பு ; ஈடுவைத்த பொருள் . |
| நியாதம் | வைத்தல் ; கிரியை ; தன்னைக் கடவுளிடம் ஒப்படைத்தல் ; வேம்பு ; ஈடுவைத்த பொருள் . |
| நியாமகன் | அமர்த்துபவன் ; ஓட்டுபவன் ; மாலுமி . |
| நியாயக்கேடு | நீதிக்கேடு . |
| நியாயங்காட்டுதல் | காரணங்கூறுதல் . |
| நியாயங்கேட்டல் | வழக்கு விசாரித்தல் . |
| நியாயசபை | நீதிமன்றம் . |
| நியாயத்தப்பு | காண்க : நியாயக்கேடு . |
| நியாயத்தலம் | காண்க : நியாயசபை . |
| நியாயத்தார் | நீதிபதிகள் . |
| நியாயத்தீர்ப்பு | வழக்கில் நீதிபதி கொடுக்கும் தீர்மானம் . |
| நியாயப்பிரமாணம் | நீதிச்சட்டம் . |
| நியாயப்பிரமாணி | ஒழுக்கமுள்ளவன் ; நியாயமுறை தவறாது நடப்பவன் . |
| நியாயப்பரிபாலனம் | நீதியாட்சி . |
| நியாயபோதனை | நன்னெறியுணர்த்துகை ; நீதிமொழி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 662 | 663 | 664 | 665 | 666 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நிமிடம் முதல் - நியாயபோதனை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, காரணம், வைத்தல், அமர்த்துதல், வழக்கு, உறுதி, நிலையில், நிகழும், ஒழுக்கமுள்ளவன், கிரியை, விதிகள், கடவுளிடம், பொருள், நியாயக்கேடு, நியாயசபை, ஈடுவைத்த, வேம்பு, நியதிப்பெயர், ஒப்படைத்தல், தன்னைக், எப்பொழுதும், அரசரின், உறுதிச், சுற்றத்தார், இடம், சகுனம், நிமிடி, நிமித்தகாரணம், ஐவருள், வருவது, நீக்குதல், ஒன்று, செய்தல், குறிசொல்லுபவர், கூறவல்ல, கணியர், செய்கடன்

