தமிழ் - தமிழ் அகரமுதலி - நாய்த்திசை முதல் - நாராசம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| நாய்த்திசை | தென்மேற்குத் திசை . |
| நாய்த்தீற்றி | நாய்க்குரிய இழிவான உணவு . |
| நாய்த்துளசி | கஞ்சாங்கோரைப் பூண்டு . |
| நாய்நாக்கி | இலைக்கள்ளிமரம் . |
| நாய்நாக்கு | இலைக்கள்ளிமரம் . |
| நாய்ப்புடல் | ஒரு கொடிவகை . |
| நாய்ப்புடடோல் | ஒரு கொடிவகை . |
| நாய்வேட்டம் | நாயின் உதவிகொண்டு ஆடும் வேட்டை ; நாய்கள் வேட்டையில் உயிர்களை வருத்துவதுபோன்ற தொல்லை . |
| நாய்வேளை | ஒரு பூடுவகை . |
| நாயக்கன் | படைத்தலைவன் ; வடுகருள் ஒரு சாராரின் சாதிப் பெயர் ; வன்னியர் , வேடர் , இருளர் முதலிய தமிழ்ச்சாதியாரின் பட்டப் பெயர் . |
| நாயகத்தி | காண்க : நாயகி . |
| நாயகப்பத்தி | நாடகமாடும் தலைமையிடம் . |
| நாயகப்பானை | கோயிலில் பொங்கலிடும் பெரியபானை . |
| நாயகம் | தலைமை ; மேம்பாடு ; சிறப்பின் மிக்கது ; வேலைக்காரரின் தலைவன் ; காண்க : நாயகமணி ; கிரந்திநாயகச்செடி . |
| நாயகம்பண்ணுதல் | முதன்மை செலுத்தல் . |
| நாயகமணி | மணிமாலை நடுவிலே கோத்திருக்கும் பெருமணி ; அணிகலன்களின் நடுவில் அமைக்கும் இரத்தினம் . |
| நாயகமுத்து | மாலையின் நடுவிலே அமைந்த பெருமுத்து . |
| நாயகமேனி | மரகதப்பச்சை . |
| நாயகன் | தலைவன் ; கணவன் ; அரசன் ; கடவுள் ; நடத்துவோன் ; கதைத் தலைவன் . |
| நாயகாதிபன் | அரசன் . |
| நாயகி | மனைவி ; தலைவி ; பார்வதி ; கதைத் தலைவி ; ஒரு பண்வகை . |
| நாயரஞ்சி | நாயுருவிச்செடி . |
| நாயன் | கடவுள் ; அரசன் ; தலைவன் . |
| நாயன்தே | சுவாமி என்ற பொருள்படும் தொடர் . |
| நாயன்மார் | தலைவர் ; பெரியபுராணத்தில் கூறப்பெறும் சிவனடியார்கள் ; கடவுளர் . |
| நயானகாரன் | நாகசுரம் வாசிப்போன் . |
| நாயனம் | நாகசுரம் . |
| நாயனாய்ச்சியர் | உமையும் சிவனும் ; தலைவனும் தலைவியும் . |
| நாயனார் | தலைவர் ; கடவுள் ; சிவன் ; சிவனடியார் ; தந்தை ; திருவள்ளுவர் ; சில சாதியாரின் பட்டப்பெயர் . |
| நாயாட்டம் | உளைச்சல் ; பேயாட்டம் . |
| நாயாடி | வேட்டையாடுவோன் ; திருவிதாங்கூரில் உள்ள காட்டுச் சாதியார் . |
| நாயிகை | தலைவி . |
| நாயில் | காண்க : ஞாயில் . |
| நாயிறு | காண்க : ஞாயிறு . |
| நாயிறுதிரும்பி | காண்க : ஞாயிறுவணங்கி . |
| நாயிறுவணங்கி | காண்க : ஞாயிறுவணங்கி . |
| நாயுருவி | ஒரு பூண்டுவகை . |
| நாயுள்ளி | நரிவெண்காயம் . |
| நாயுறக்கம் | பொய்யுறக்கம் . |
| நாயோட்டம் | குதிரைநடையில் ஒன்று . |
| நாயோட்டுமந்திரம் | திருவைந்தெழுத்தில் ' சி ' என்னும் எழுத்து . |
| நார் | மட்டை முதலியவற்றின் நார் ; கயிறு ; வில்லின் நாண் ; பன்னாடை ; கல்நார் ; அன்பு . |
| நார்க்கயிறு | கொச்சைக்கயிறு . |
| நார்ச்சீலை | மரவுரி ; காண்க : நார்மடி . |
| நார்ப்பட்டு | காண்க : நார்மடி . |
| நார்மட்டை | நார் உரிக்கத் தகுதியான பனைமட்டை . |
| நார்மடி | பட்டாடை போல்வதும் நாரால் செய்ததுமான ஆடைவகை . |
| நாரகர் | நரகத்துக்குரிய பாவிகள் . |
| நாரங்கம் | காண்க : நாரத்தை . |
| நாரசிங்கம் | உபபுராணத்துள் ஒன்று ; மருந்து வகை . |
| நாரசசிங்கன் | காண்க : நாரசிங்கம் . |
| நாரணவன் | கிருமிவகை ; மாட்டுநோயுள் ஒன்று . |
| நாரணன் | திருமால் . |
| நாரணி | துர்க்கை . |
| நாரணியவன் | துர்க்கையை உடையவனான சிவபிரான் . |
| நாரத்தம் | சடாமாஞ்சில் என்னும் மருந்து ; காண்க : வசம்பு . |
| நாரத்தம்புல் | ஒரு புல்வகை . |
| நாரத்தை | ஒரு சிறுமரவகை ; கடாரநாரத்தை ; காட்டுநாரத்தை ; கொழுஞ்சிவகை . |
| நாரதம் | மேகம் ; பெரிய யாழ்வகை ; பதினெண் புராணத்துள் ஒன்று . |
| நாரதன் | பிரமபுத்திரராகிய பெருமுனிவர் ; புத்தருள் ஒருவர் ; கலகஞ் செய்பவன் . |
| நாரதீயம் | பதினெண் புராணத்துள் ஒன்று ; ஓர் உபபுராணம் . |
| நாரநிதி | நீர்நிலையாகிய கடல் . |
| நாரப்புண் | காண்க : நரம்புச்சிலந்தி . |
| நாரம் | நீர் ; பாசி ; மக்கட்கூட்டம் ; நீர்வாழ் புள் ; பசுவின்கன்று ; ஆன்மாக்கள் ; மரவகை . |
| நாரன் | காமமூட்டுவோனான மன்மதன் . |
| நாராங்கி | கதவின் தாழ்ப்பாள் ; காண்க : நாதாங்கி . |
| நாராசம் | இருப்புச் சலாகை ; இரும்பாணி ; எழுத்தாணி ; குறுக்குச் சந்து ; விட்டம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 653 | 654 | 655 | 656 | 657 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாய்த்திசை முதல் - நாராசம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, ஒன்று, தலைவன், கடவுள், அரசன், நார், நார்மடி, தலைவி, நாரத்தை, கொடிவகை, பெயர், நாரசிங்கம், மருந்து, புராணத்துள், பதினெண், என்னும், நாயகி, கதைத், நாயகமணி, இலைக்கள்ளிமரம், தலைவர், ஞாயிறுவணங்கி, நாகசுரம், நடுவிலே

