தமிழ் - தமிழ் அகரமுதலி - நாண்மீன் முதல் - நாதான் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| நாண்மீன் | அசுவினி முதலிய விண்மீன் . |
| நாண்முதல் | அதிகாலை . |
| நாண்முல்லை | போரின்பொருட்டுக் கணவன் பிரிந்த இல்லிலே தலைவி தற்காத்துத் தங்கிய நிலைமை கூறும் புறத்துறை . |
| நாண்முழவு | காலை முரசு ; நாழிகைப் பறை . |
| நாண்மேயல் | காலை மேய்ச்சல் . |
| நாண்மை | வெட்கம் ; மகளிர் கூச்சம் . |
| நாணக்கேடு | வெட்கமின்மை . |
| நாணகம் | நாணயம் . |
| நாணநாட்டம் | தலைவி நாணும் வகையால் அவளுக்குத் தலைவனுடன் கூட்டமுண்மையை ஆராய்ந்தறிகை . |
| நாணம் | வெட்கம் ; அறிவு ; பயபக்தி ; மானம் ; தணிகை ; கூச்சம் ; மகடூஉக் குணம் நான்கனுள் ஒன்று . |
| நாணயக்காரன் | காசுக்கடைக்காரன் ; செயலில் நேர்மையாக நடப்பவன் . |
| நாணயஞ்செலுத்துதல் | செயலில் தகுதிகாட்டுதல் . |
| நாணயத்தப்பு | நேர்மை தவறுகை . |
| நாணயம் | நேர்மை ; மனச்சாட்சி ; செயல் முதலியன குறித்த பயன் தவறாமை ; நேர்த்தியானது ; முத்திரையிடப்பட்ட காசு ; கட்டுப்பாடு ; விலங்கின் மூக்கிலிடுங் கயிறு ; இயற்கை நிகழ்ச்சி . |
| நாணயவான் | நேர்மை தவறாதவன் . |
| நாணயவேலை | நேர்த்தியான வேலை . |
| நாணல் | ஒரு புல்வகை ; வெட்கப்படுதல் ; வளைதல் ; தருப்பைவகை . |
| நாணற்கரும்பு | கரும்புவகை . |
| நாணாளும் | தினந்தோறும் . |
| நாணி | நாணமுடையாள் ; வில்நாண் . |
| நாணிக்கொள்ளுதல் | காண்க : நான்றுகொள்ளுதல் . |
| நாணித்தல் | நாணுதல் . |
| நாணிலி | நாணம் அற்றோர் . |
| நாணிழல் | காலைநிழல் . |
| நாணீர் | புதுப்புனல் . |
| நாணு | நாணம் . |
| நாணுகம் | குதிரை . |
| நாணுதல் | வெட்கப்படுதல் ; மனங்குன்றுதல் ; பயபக்தி காட்டுதல் ; அஞ்சுதல் ; பிணங்குதல் ; அடங்குதல் ; குவிதல் . |
| நாணுவம் | நாகணவாய்ப்புள் . |
| நாணுவரையிறத்தல் | பத்து அவத்தையுள் நாண் நீங்குதலாகிய அவத்தைவகை . |
| நாணெறிதல் | நாணைத் தெறித்து ஒலியெழுப்புதல் . |
| நாணேற்றுதல் | வில்லை வளைத்து நாணைக் கொளுவுதல் . |
| நாணேறிடுதல் | வில்லை வளைத்து நாணைக் கொளுவுதல் . |
| நாணையம் | காண்க : நாணயம் . |
| நாத்தலைமடிவிளி | சீழ்க்கை . |
| நாத்தழும்பிருத்தல் | பலமுறை சொல்லுதலால் நாவுக்குப் பழக்கமுண்டாதல் . |
| நாத்தழும்புதல் | பலமுறை சொல்லுதலால் நாவுக்குப் பழக்கமுண்டாதல் . |
| நாத்தழும்பேறுதல் | பலமுறை சொல்லுதலால் நாவுக்குப் பழக்கமுண்டாதல் . |
| நாத்தனார் | கணவனுடன் பிறந்தாள் . |
| நாத்தனாள் | கணவனுடன் பிறந்தாள் . |
| நாத்தாங்கி | காண்க : நாதாங்கி ; இலைக்கள்ளி வகை . |
| நாத்தாங்கிப்பேசுதல் | எண்ணிப் பேசுதல் ; நாக்குழறிப் பேசுதல் . |
| நாத்தி | கணவனுடன் பிறந்தவள் ; ஒன்றுக்கு உள்ளதான ஒரு பொருள் மற்றொன்றுக்கு இல்லாதாகை ; இன்மை ; அழிவு ; தாழ்வாரம் . |
| நாத்திகம் | கடவுள் இல்லை என்னும் கொள்கை ;தெய்வ நிந்தனை . |
| நாத்திகன் | கடவுளும் இருவினைப் பயனும் இல்லை என்னும் கொள்கை உள்ளவன் ; சமய ஒழுக்கம் அற்றவன் . |
| நாத்தூண் | காண்க : நாத்தனார்(ள்) . |
| நாதக்குடம் | சங்கு . |
| நாதக்குமிழ் | விந்து தங்கும் உடலுறுப்பு . |
| நாதக்குழல் | ஊதுகருவி ; விந்துக்குழல் . |
| நாதகிருத்தியர் | நற்செயல்கட்கு அனுப்பப்படும் தேவதூதர் . |
| நாதகீதன் | சிவபிரான் . |
| நாததத்துவம் | ஞானசத்தியின் இருப்பிடமும் சுத்த தத்துவங்களுள் ஒன்றுமாகிய தத்துவம் . |
| நாதம் | சத்தம் ; ஒலி ; வாச்சிய ஒசை ; இசைப்பாட்டு ; சிவபிரானது ஒன்பதுவகை மூர்த்தங்களுள் ஒன்று ; பாதி வட்டமான மந்திரலிபி ; தலைவனையுடைமை ; செம்பால் , சோணிதம் . |
| நாதரவி | உடற்கொழுப்பு . |
| நாதரரூபதரை | பார்வதி . |
| நாதரூபம் | சிவனது ஒலிவடிவு . |
| நாதவத்தம் | காண்க : யானைநெருஞ்சி . |
| நாதவுப்பு | பூமியில் உண்டாகும் உப்பு . |
| நாதன் | தலைவன் ; அரசன் ; கணவன் ; முனிவன் ; குரு ; இறைவன் ; சிவன் ; அருகன் ; தமையன் . |
| நாதாக்கள் | ஞானியர் . |
| நாதாக்கியை | காண்க : நாதரூபதரை . |
| நாதாங்கி | பூட்டு , தாழ்ப்பாள் , சங்கிவி இவற்றை மாட்ட உதவும் கதவுநிலை உறுப்பு . |
| நாதாந்தம் | ஞானநெறிகளுள் ஒன்று . |
| நாதாந்தன் | சிவன் . |
| நாதாந்தி | பொன்னிமிளை . |
| நாதார் | ஏழைக்குடிகள் . |
| நாதான் | தலைவன் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 651 | 652 | 653 | 654 | 655 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாண்மீன் முதல் - நாதான் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, கணவனுடன், ஒன்று, சொல்லுதலால், நேர்மை, நாணம், நாணயம், பலமுறை, நாவுக்குப், பழக்கமுண்டாதல், பிறந்தாள், நாத்தனார், பேசுதல், தலைவன், சிவன், கொள்கை, என்னும், இல்லை, நாதாங்கி, வளைத்து, கூச்சம், பயபக்தி, வெட்கம், காலை, தலைவி, செயலில், வெட்கப்படுதல், நாணைக், கணவன், வில்லை, நாணுதல், கொளுவுதல்

