முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » நாராயணகோபாலர் முதல் - நாலைங்கள்ளி வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - நாராயணகோபாலர் முதல் - நாலைங்கள்ளி வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
நாராயணகோபாலர் | திருமாலுருவுடையோர் . |
நாராயணகௌளம் | ஒரு பண்வகை . |
நாராயணப்பிரியன் | திருமாலின் நண்பனான சிவபிரான் . |
நாராயணம் | அரசமரம் ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று ; கடல்மீன்வகை . |
நாராயணன் | நீரை இடமாக உடைய திருமால் ; சிவன் ; நான்முகன் ; வருணன் ; சந்திரன் ; திருமாலின் அவதாரமான ஒரு முனிவன் ; நாரைவகை . |
நாராயணாத்திரம் | திருமாலை அதிதேவதையாக உடைய ஒரு அம்பு . |
நாராயணி | துர்க்கை ; திருமகள் ; பார்வதி ; கங்காதேவி ; தண்ணீர்விட்டான்கிழங்கு ; குறிஞ்சி யாழ்த்திறத்துள் ஒன்று . |
நாராயம் | அம்பு ; எழுத்தாணி ; அளவுப் படிவகை . |
நாரி | விலலின் நாண் ; பன்னாடை ; யாழ்நரம்பு ; தேன் ; பெண் ; பார்வதி ; சேனை ; மணம் ; காண்க : நன்னாரி ; இடுப்பு ; கள் . |
நாரிக்குத்து | இடுப்புவலி . |
நாரிகேரம் | காண்க : நாளிகேர(ள)ம் . |
நாரிகேளம் | காண்க : நாளிகேர(ள)ம் . |
நாரிகேளபாகம் | மிக்க வருத்தத்துடன் பொருள்களைக் காணும் இயல்புடைய செய்யுள் நடை வகை . |
நாரிகை | பெண் . |
நாரிப்பிடிப்பு | இடுப்புப் பிடிப்பு . |
நாரிபாகன் | பெண்ணைப் பாகத்தில் கொண்ட சிவபிரான் . |
நாரியங்கம் | கிச்சிலிவகை . |
நாரை | ஒரு நீர்ப்பறவைவகை ; வெண்கொக்கு ; பறவைவகை ; மாட்டின் அலைதாடி . |
நால் | நான்கு ; நாலடியார் என்னும் தமிழ்நூல் . |
நால்கு | நான்கு . |
நால்வகைச்சாந்து | கலவை , பீதம் , புலி , வட்டிகை என்னும் நால்வகையாலான சாந்து . |
நால்வகைச்சேனை | காண்க : நாற்படை . |
நால்வகைச்சொல் | பெயர்ச்சொல் , வினைச்சொல் , இடைச்சொல் , உரிச்சொல் . |
நால்வகைத்தோற்றம் | காண்க : உயிர்த்தோற்றம் . |
நால்வகைப்பா | வெண்பா , ஆசிரியப்பா , கலிப்பா , வஞ்சிப்பா . |
நால்வகைப்பூ | கொடிப்பூ , கோட்டுப்பூ , நீர்ப்பூ , நிலப்பூ . |
நால்வகைப்பொருள் | அறம் ,பொருள் , இன்பம் , வீடு . |
நால்வகைப்பொன் | சாதரூபம் , கிளிச்சிறை , ஆடகம் சாம்பூநதம் . |
நால்வகையரண் | காட்டரண் , மலையரண் , நீர் அரண் , மதிலரண் . |
நால்வகையாச்சிரமம் | நான்குவகை வாழ்க்கை நிலை ; மாணவநிலை , இல்லறநிலை , வனநிலை , துறவுநிலை . |
நால்வகையாழ் | பேரியாழ் , மகரயாழ் , சகோடயாழ் , செங்கோட்டியாழ் . |
நால்வகையிழிச்சொல் | குறளை , பொய் , கடுஞ்சொல் , பயனில்சொல் . |
நால்வகையுகம் | கிரேதா , திரேதா , துவாபரம் , கலி . |
நால்வகையுணவு | உண்ணல் , தின்னல் , நக்கல் , பருகல் . |
நால்வகையுபாயம் | இனியவை கூறல் , வேறுபடுத்தல் , ஈதல் , ஒறுத்தல் (சாம , பேத , தான , தண்டம் ,) . |
நால்வகையூறுபாடு | குத்தல் , வெட்டல் , எய்தல் , எறிதல் . |
நால்வர் | சைவசமய குரவர் நால்வர் ; திருஞான சம்பந்தர் , திருநாவுக்கரசர் , சுந்தரர் , மாணிக்கவாசகர் . |
நால்வாய் | தொங்கும் வாய் ; யானை . |
நால்வாயன் | யானைமுகத்தவனான விநாயகன் ; ஐராவத யானையையுடைய இந்திரன் . |
நால்விதப்பண் | காண்க : நாற்பண் . |
நால்விதப்புண்ணியம் | கொடை , கல்வி , தவம் , ஒழுக்கம் . |
நால்வேதம் | தைத்திரியம் , பௌடியம் , தலவகாரம் , சாமவேதம் , இருக்கு , யசுர் , சாமம் , அதர்வணம் . |
நாலம்பலம் | கோயிலுள் ஒரு பகுதி . |
நாலல் | காண்க : தணக்கு . |
நாலா | பல ; வாய்க்கால் ; பள்ளத்தாக்கு . |
நாலாகாரியம் | பல தொழில் . |
நாலாம்பொய்யுகம் | கலியுகம் . |
நாலாரச்சக்கரம் | சித்திரகவிவகை . |
நாலாரைச்சக்கரம் | சித்திரகவிவகை . |
நாலாவான் | நான்காமவன் . |
நாலாவிதம் | பலவிதம் . |
நாலி | முத்து ; காண்க : கார்த்திகைப்பூ ; கந்தைத் துணி . |
நாலிகம் | எருமை ; காகம் ; தாமரை . |
நாலிககை | மூங்கில் . |
நாலு | நான்கு ; சில ; பல ; நாலடியார் . |
நாலுகட்டு | நாற்புறமும் சுற்றுக்கட்டுத் திண்ணைகொண்ட வீட்டின் பகுதி . |
நாலுசதுரக்கமலம் | காண்க : மூலாதாரம் . |
நாலுதல் | தொங்குதல் ; கழுத்திற் சுருக்கிட்டுக் கொள்ளுதல் . |
நாலைங்கள்ளி | இலைக்கள்ளிமரம் . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 654 | 655 | 656 | 657 | 658 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாராயணகோபாலர் முதல் - நாலைங்கள்ளி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, நான்கு, நாலடியார், என்னும், நால்வர், சித்திரகவிவகை, பகுதி, நாளிகேர, திருமாலின், உடைய, ஒன்று, அம்பு, பார்வதி, பெண், சிவபிரான்