முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » நாட்காலம் முதல் - நாட்பொருத்தம் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - நாட்காலம் முதல் - நாட்பொருத்தம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| நாட்காலம் | விடியற்காலம் ; ஏற்ற பருவம் . |
| நாட்காலை | விடியற்காலம் ; ஏற்ற பருவம் . |
| நாட்குறித்தல் | ஏற்ற நாளைக் கணித்தறிதல் . |
| நாட்கூலி | அற்றைக்கூலி . |
| நாட்கூறு | முற்பகல் . |
| நாட்கொடி | சிறப்புநாளை அறிவித்தற்குக் கட்டுங் கொடி ; அரசன் நாடோறுஞ் செய்த வெற்றிக்கு அறிகுறியாகக் கட்டிய கொடி . |
| நாட்கொல்லி | ஆயுளைப் போக்குபவனான யமன் ; வீண்காலம் போக்குபவன் . |
| நாட்கொள்ளுதல் | நன்னாளில் தொழில் தொடங்குதல் ; அரச சின்னங்களாகிய குடை , வாள் முதலியவற்றைப் புறவீடு விடுதல் . |
| நாட்கோள் | அரச சின்னங்களைப் புறவீடு விடுதல் . |
| நாட்செய்தல் | நல்ல வேளையில் செயலில் இறங்குதல் . |
| நாட்செல்லுதல் | நெடுங்காலம் நிற்றல் ; வயதாதல் . |
| நாட்செலவு | நாள் கழிகை ; அன்றாடம் ஆகும் பணச்செலவு . |
| நாட்சோறு | காலையுணவு ; மணம் செய்யப் புகுவோர்க்கு அவர் உறவினர் கொடுக்கும் விருந்து . |
| நாட்டம் | நோக்கம் ; கண் ; பார்வை ; அழகு ; ஆராய்ச்சி ; சோதிடநூல் ; செவ்வழி யாழ்த்திற வகையுள் ஒன்று ; விருப்பம் ; ஐயம் ; திரிதல் ; நிலைநிறுத்துகை ; நாட்டுத் தலைமை ; ஐயம் ; வாள் . |
| நாட்டம்கார் | ஒரு நிலத்தைப் பயிரிடுவதற்குச் சிறந்த உரிமையுடையோன் . |
| நாட்டமிலி | குருடன் . |
| நாட்டமைதி | நாடு குழப்பமின்றி இருக்கும் நிலை ; நாட்டின் சிறப்பிற்குரியவான செல்வம் , விளைவு , செழுவளம் . செங்கோல் , நோயின்மை , குறும்பின்மை . |
| நாட்டவன் | நாட்டுப்புறத்தவன் நாட்டான் . |
| நாட்டாசாரம் | நாட்டுவழக்கம் . |
| நாட்டாண்மை | ஊரதிகாரம் ; செயலாற்றும் திறம் . |
| நாட்டார் | தேசத்தார் ; ஊர்ச்சபையார் ; தென்னார்க்காட்டு மாவட்டத்திலுள்ள ஒரு வேளாள வகுப்பார் செம்படவர் , கள்ளர் குலப் பட்டப்பெயருள் ஒன்று . |
| நாட்டாள் | கூலிவேலை செய்வோன் . |
| நாட்டியக்காரன் | கூத்தன் . |
| நாட்டியக்காரி | நாட்டியம் ஆடுபவள் ; பகட்டுக் காரி . |
| நாட்டியப்பிரியன் | சிவபிரான் ; நடனப்பிரியன் ; கருத்து ; பகட்டன் . |
| நாட்டியம் | கை முதலியவற்றால் காட்டும் குறிப்பு ; கூத்து . |
| நாட்டிருவமுது | காலைப் படையற்பொருள் . |
| நாட்டிலமிர்து | நாட்டில் விளையும் செந்நெல் , சிறுபயறு , பசுநெய் , கரும்பு , வாழை ஆகிய பொருள்கள் . |
| நாட்டு | நிலை ; சுவர் எழுப்புகையில் குறுக்கே வைக்கும் கல் . |
| நாட்டுக்கவுண்டன் | கொங்கு வேளாளரிற் பெருஞ்செல்வன் . |
| நாட்டுக்காவல் | நாடுகாக்குந் தொழில் . |
| நாட்டுக்குற்றம் | ஊருக்குத் தீது விளைப்பனவாகிய விட்டில் , கிள்ளை , யானை , தன்னரசு இழப்பு , மிகுகாற்று , மிகுமழை , வேற்றரசு . |
| நாட்டுச்சந்தம் | பட்டிக்காட்டுத்தனம் . |
| நாட்டுச்சரக்கு | உள்நாட்டுப் பண்டம் . |
| நாட்டுச்சார்பு | மருதநிலம் . |
| நாட்டுச்சிறப்பு | நாட்டுவளம் . |
| நாட்டுத்தேவர் | நாட்டில் வணங்கப்படும் தேவர்கள் ; அந்தணர் . |
| நாட்டுதல் | நடுதல் ; படைத்தல் ; நிலைநிறுத்துதல் ; எழுதுதல் ; வாழவைத்தல் . |
| நாட்டுப்படை | அறுவகைப் படையுள் நாட்டு மக்களாலியன்ற படை . |
| நாட்டுப்பழம் | நாட்டு வாழைப்பழம் ; ஒட்டுக்கனி அல்லாத பழம் . |
| நாட்டுப்புறத்தான் | பட்டிக்காட்டான் . |
| நாட்டுப்புறம் | பட்டிக்காடு . |
| நாட்டுப்போக்கு | நாட்டுவழக்கம் ; பொதுவாக வழங்கும் முறை . |
| நாட்டுவழக்கம் | நாட்டுப்பழக்கம் . |
| நாட்டுவளப்பம் | நாட்டின் செழிப்பு : நாட்டு வழக்கம் ; நாட்டு அமைதி . |
| நாட்டுவளம் | நாட்டுச் சிறப்பு ; நாட்டு அமைதி . |
| நாட்டை | ஒரு பண்வகை . |
| நாட்பட்டிருத்தல் | நெடுங்கால மிருத்தல் . |
| நாட்படுதல் | நாட்செல்லுதல் : நெடுங்காலந் தங்குதல் ; தற்காலத்துக்குத் தகுதியற்றதாதல் . |
| நாட்பணம் | முன்பணம் , அச்சாரம் . |
| நாட்பணிவிடை | அன்றாட வேலை ; நன் முகூர்த்தத்திற் செய்யும் வேலை . |
| நாட்பறை | நாழிகைப் பறை . |
| நாட்பார்த்தல் | மங்கலச் செயல்களுக்கு நல்லநாள் பார்த்தல் . |
| நாட்பு | காண்க : ஞாட்பு . |
| நாட்பூ | அன்றலர்ந்த பூ . |
| நாட்பொருத்தம் | காண்க : நட்சத்திரப்பொருத்தம் ; செய்யுள் முதன்மொழிப் பொருத்தத்துள் ஒன்று . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 649 | 650 | 651 | 652 | 653 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாட்காலம் முதல் - நாட்பொருத்தம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், நாட்டு, ஒன்று, நாட்டுவழக்கம், ஏற்ற, நாட்டில், நாட்டியம், நாட்டுவளம், காண்க, வேலை, அமைதி, நாட்டின், ஐயம், தொழில், கொடி, பருவம், வாள், புறவீடு, விடியற்காலம், நாட்செல்லுதல், விடுதல், நிலை

