தமிழ் - தமிழ் அகரமுதலி - நவிர் முதல் - நற்சார்வு வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| நவிர் | ஆண்மயிர் ; முள்முருக்கமரம் ; துரும்பு ; மருதயாழ்த்திறம் ; வாள் ; புன்மை . |
| நவிரம் | ஆண்மயிர் ; உச்சி ; தலை ; மயில் ; மலை ; நன்னன்மலை ; மருதயாழ்த்திறவகை ; புன்மை ; வாள் . |
| நவிரல் | ஒரு மரவகை . |
| நவிலுதல் | சொல்லுதல் ; கற்றல் ; பெரிதொலித்தல் ; பாடுதல் ; செய்தல் ; பழகுதல் ; தாங்குதல் ; விரும்புதல் ; குறித்தல் ; மிகுதல் . |
| நவிழ்த்தல் | அவித்தல் . |
| நவிற்றுதல் | சொல்லுதல் ; ஆராய்தல் ; அதிகாரத்தோடு உரைத்தல் . |
| நவின்றோர்க்கினிமை | நூலின் பத்தழகினுள் ஒன்று . |
| நவீனம் | புதிய முறையில் எழுதப்பட்ட கதை . |
| நவுதல் | நெகிழ்தல் ; மட்கிப்போதல் . |
| நவுரி | எக்காளவகை . |
| நவை | குற்றம் ; இழிவு ; தண்டனை . |
| நவைத்தல் | கொல்லுதல் . |
| நழுக்கம் | ஆழமின்மை ; மழுங்குதல் . |
| நழுக்குதல் | வருத்துதல் ; அரிசியை ஒன்றிரண்டாகக் குற்றுதல் ; மழுங்கச்செய்தல் ; தந்திரமாய் விட்டுவிலகுதல் ; கீறுதல் ; சிறிதுசிறிதாக மலம்போதல் . |
| நழுங்குதல் | மழுங்குதல் ; கீறப்பெறுதல் ; வழுவுதல் . |
| நழுநழுத்தல் | பிடிகொடாது பேசுதல் . |
| நழுப்புதல் | மயங்கச்செய்தல் ; வேலை செய்ய மறுகுதல் . |
| நழுவமுது | கூழ் . |
| நழுவல் | பிடிகொடாது பேசுகை ; மறைந்து சொல்லுகை ; ஓர் அபசுரம் . |
| நழுவுதல் | வழுவுதல் ; தந்திரமாய் நீங்குதல் ; பிடிகொடாது பேசுதல் . |
| நள் | நடு ; இரவு ; உச்சிப்பொழுது ; திருவோணநாள் ; செறிவு . |
| நள்ளலர் | பகைவர் . |
| நள்ளார் | பகைவர் . |
| நள்ளி | நண்டு ; கற்கடகராசி ; உறவு ; கடையெழு வள்ளலுள் ஒருவன் . |
| நள்ளிடை | நடுஇடம் . |
| நள்ளிருணாறி | இரவில் மணக்கும் இருவாட்சிப்பூ . |
| நள்ளிருள் | செறிந்த இருள் . |
| நள்ளு | மருங்கு ; காண்க : நள்ளுதல் . |
| நள்ளுதல் | நட்புக்கொள்ளுதல் ; விரும்புதல் ; அடைதல் . |
| நள்ளுநர் | நண்பர் . |
| நள்ளெனல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
| நள | அறுபதாண்டுக் கணக்கில் ஐம்பதாம் ஆண்டு . |
| நளத்தம் | சடாமாஞ்சில் பூண்டு . |
| நளபாகம் | நளன்செய்த சமையல் போன்றதான உயர்ந்த சமையல் ; நன்றாய்ச் சமைத்த உணவு . |
| நளம் | அகலம் , காண்க : தாமரை ; சிற்ப நூல்களுள் ஒன்று ; நளவசாதி . |
| நளி | அகலம் ; பெருமை ; செறிவு ; குளிர்ச்சி ; கூட்டம் ; செருக்கு ; நிந்தை ; எள்ளல் ; தேள் ; காண்க : வெண்சாரணை . |
| நளிதல் | செறிதல் ; பரத்தல் ; ஒத்தல் . |
| நளிப்பு | காண்க : நளிவு . |
| நளிய | ஓர் உவம உருபு . |
| நளிர் | குளிர்ச்சி ; குளிர்காய்ச்சல் ; பகை ; செறிவு ; பெருமை ; நண்டு . |
| நளிர்வித்தல் | நடுங்கச்செய்தல் . |
| நளிவிடம் | தேள் . |
| நளிவு | செறிவு . |
| நளினக்காரன் | நயப்பேச்சுள்ளவன் ; விகடன் ; எள்ளிநகையாடுவோன் . |
| நளினம் | தாமரை ; தண்ணீர் ; நயச்சொல் ; இங்கிதம் ; நிந்தை ; ஏளனம் . |
| நளினாட்சமாலை | தாமரைமணிமாலை . |
| நளினி | திருமகள் ; தாமரைப் பொய்கை ; ஒரு பண்வகை . |
| நளினை | திருமகள் . |
| நளுக்கல் | நெல்லின் இரண்டாம் குற்று . |
| நளுக்குதல் | நடுக்குதல் . |
| நளுங்கு | ஒரு கிளிஞ்சில்வகை ; காண்க : அழுங்கு . |
| நளுத்தை | ஒரு பண்வகை . |
| நளை | ஏலத்தோல் . |
| நற்கதி | துறக்கம் முதலிய நற்பதவி . |
| நற்கந்தம் | நறுமணம் . |
| நற்காட்சி | நல்லறிவு ; கண்ணுக்கினிமையான காட்சி ; இரத்தினத்திரயத்துள் ஒன்று ; பழுதில்லாத கருத்து . |
| நற்காமம் | ஒத்த காமம் . |
| நற்காலம் | நல்லகாலம் ; ஆங்காலம் ; காலவகை ஆறனுள் ஒன்று . |
| நற்கீர்த்தி | பெரும்புகழ் . |
| நற்கு | நன்மை ; நன்றாக . |
| நற்குடி | காண்க : நற்குலம் . |
| நற்குணம் | நல்ல தன்மை . |
| நற்குலம் | உயர்குடி . |
| நற்குறி | நன்னிமித்தம் . |
| நற்கோள் | புதன் ; வியாழன் , வெள்ளி முதலிய நன்மைசெய்யும் கோள்கள் . |
| நற்சாட்சி | பரிந்துரை ; அனுகூல சாட்சி . |
| நற்சாந்து | சுண்ணச்சாந்து ; சன்னச்சாந்து . |
| நற்சார்வு | நல்லோர் கூட்டம் ; நல்லடைக்கலம் ; அறச்சிந்தை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 644 | 645 | 646 | 647 | 648 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நவிர் முதல் - நற்சார்வு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, ஒன்று, செறிவு, பிடிகொடாது, நிந்தை, கூட்டம், குளிர்ச்சி, தாமரை, பெருமை, தேள், முதலிய, நற்குலம், பண்வகை, திருமகள், நளிவு, அகலம், ஆண்மயிர், மழுங்குதல், தந்திரமாய், விரும்புதல், சொல்லுதல், புன்மை, வழுவுதல், பேசுதல், நள்ளுதல், வாள், நண்டு, பகைவர், சமையல்

