தமிழ் - தமிழ் அகரமுதலி - நற்சாரி முதல் - நன்மை வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
நற்சாரி | நவச்சாரம் . |
நற்சிலை | கருங்கல் . |
நற்சீரகம் | நச்சீரகம் ; கருஞ்சீரகம் ; சன்னச்சீரகம் . |
நற்செங்கல் | காவிக்கல் . |
நற்செய்தி | நல்ல செய்தி . |
நற்சொல் | நன்னிமித்தமொழி . |
நற்பலம் | வெட்பாலைமரம் . |
நற்பிரியம் | மிக்க அன்பு ; பற்பாடகச்செடி . |
நற்பு | நன்மை . |
நற்புத்தி | நல்லறிவு . |
நற்பேறு | சிறந்த செல்வம் ; நல்லூழ் . |
நற்போர் | அறநெறி தவறாத சண்டை , அறப்போர் . |
நற்றம் | நற்குணம் . |
நற்றரித்தல் | நன்றாக நிலைத்தல் . |
நற்றவம் | வீடு பெறுதற்குச் செய்யுந் தவம் . |
நற்றாய் | பெற்ற தாய் . |
நற்றிறம் | நன்மை ; நீதிநெறி ; நோன்பு . |
நற்று | நன்மை . |
நற்றுடி | புன்னாகமரம் ; வேர் . |
நற்றுணை | நல்வாழ்வுக்குத் துணைநிற்கும் பொருள் . |
நற்றுளி | அத்திப்பிசின் ; அத்திமரம் . |
நற்றோழி | அருமைத்தோழி . |
நற | தேன் ; கள் . |
நறநறப்பு | மனவேற்றுமை . |
நறவம் | தேன் ; கள் ; பால் ; மணம் ; காண்க : மயிற்கொன்றை ; ஞாழல் ; குங்குமமரம் ; அனிச்சமரம் . |
நறவு | தேன் ; கள் ; மணம் ; மணக்கொடிவகை ; சேரநாட்டிலுள்ள ஓர் ஊர் . |
நறளை | மரவகை ; பிரண்டைவகை . |
நறா | கள் ; தேன் : மணம் . |
நறுக்கரிசி | பாதி வெந்த சோறு . |
நறுக்கு | துண்டு ; ஓலைச்சீட்டு ; நாகசுரத்தின் நாக்கு . |
நறுக்குத்திப்பிலி | தேசாவரம் என்னும் சரக்கு . |
நறுக்குதல் | வெட்டுதல் ; துண்டித்தல் ; நொறுக்குதல் . |
நறுக்குமூலம் | கண்டதிப்பிலி ; வெட்டிவேர் . |
நறுகுமுறுகெனல் | பெறாமைக்குறிப்பு . |
நறுசுவொறுசாக | செட்டாக ; நேர்த்தியாக . |
நறுஞ்சுதை | தூய ஆவின் பால் . |
நறுதடி | அடைகல் . |
நறுந்தாது | முப்பத்திரண்டு ஓமாலிகைகளுள் ஒன்றான மணச்சரக்கு . |
நறுந்தொடை | மணமுள்ள மாலை . |
நறுநறெனல் | பல்லைக்கடித்தற் குறிப்பு ; சுரசுரப்புக் குறிப்பு . |
நறுநாற்றம் | நல்ல மணம் . |
நறுநெய் | பசுவின் நெய் . |
நறும்பிசின் | காண்க : கரியபோளம் ; பிசின்வகை . |
நறும்புகை | மணப்புகை . |
நறும்புன்னை | காண்க : நறுந்தாது . |
நறுமடி | அழகிய துகில் . |
நறுமண் | மகளிர் கூந்தலில் தேய்த்துக்கொள்ளும் வாசனை மண்வகை . |
நறுமருப்பு | இஞ்சி . |
நறுமா | எளியது ; எளியவன் ; புறக்கணிப்பு , அலட்சியம் ; வெறுமை ; புல்லன் . |
நறுமாதுளம் | தித்திப்பு மாதுளை . |
நறுமுதல் | பல்லைக்கடித்தல் ; பல்லாற்கடித்தல் . |
நறுமுறுத்தல் | முறுமுறுத்தல் ; உறுமுதல் ; பொறாமைகொள்ளுதல் . |
நறுமுறெனல் | முறுமுறுத்தற்குறிப்பு . |
நறுமை | நன்மை ; நன்மணம் . |
நறுமொறுத்தல் | காண்க : நறுமுறுத்தல் . |
நறுவட்டாணி | மிகு திறமை ; பொருளின்றி நயமாய்ப் பேசுந் திறம் . |
நறுவியது | நல்லது ; மணப்பண்டம் . |
நறுவிலி | ஒரு மரவகை ; பெருநறுவிலி . |
நறை | கள் ; தேன் ; நறும்புகை ; மணம் ; மணப்பண்டம் ; மணக்கொடிவகை ; குற்றம் . |
நறைக்காய் | சாதிக்காய் . |
நன்கலந்தருநன் | இரத்திணப் பணித்தட்டான் . |
நன்கனம் | நன்றாக . |
நன்காடு | சுடுகாடு ; இடுகாடு . |
நன்கு | அழகு ; மிகுதி ; நல்லது ; நலம் ; நிலைபேறு ; நன்னிமித்தம் ; மகிழ்ச்சி ; மிகவும் ; இதம் . |
நன்குமதித்தல் | சிறப்பித்தல் . |
நன்கொடை | பரிசில் ; உதவிப்பொருள் ; தருமம் . |
நன்செய் | நெல்லும் கரும்பும் விளையும் வயல் . |
நன்சொல் | இன்சொல் ; நற்போதனை . |
நன்பகல் | உச்சிக்காலம் . |
நன்பகலந்தி | உச்சிக்காலம் . |
நன்பால் | நல்லொழுக்கம் . |
நன்பு | நன்மை ; செவ்வையாய் . |
நன்பொருள் | மெய்ப்பொருள் ; மகன் . |
நன்மக்கள் | நல்ல பிள்ளைகள் ; சான்றோர் . |
நன்மார்க்கம் | நன்னெறி , நல்வழி . |
நன்முகம் | அழகிய முகம் ; இன்முகம் ; தாராளம் . |
நன்முத்து | சிப்பியிலிருந்து எடுக்கும் முத்து . |
நன்மை | நலம் ; பயன் ; உதவி ; சிறப்பு ; நன்னெறி ; நற்குணம் ; ஆக்கம் ; நற்செயல் ; நல்வினை ; வாழ்த்துமொழி ; மிகுதி ; மேம்பாடு ; புதுமை ; அழகு ; நல்லருள் ; காண்க : நன்மையாதல் . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 645 | 646 | 647 | 648 | 649 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்சாரி முதல் - நன்மை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், நன்மை, காண்க, தேன், மணம், நல்ல, மணப்பண்டம், நல்லது, அழகு, மிகுதி, நலம், நறுமுறுத்தல், நன்னெறி, உச்சிக்காலம், நறுந்தாது, பால், நன்றாக, நற்குணம், மணக்கொடிவகை, மரவகை, நறும்புகை, குறிப்பு, அழகிய