தமிழ் - தமிழ் அகரமுதலி - நல்லறம் முதல் - நவக்கிரகம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| நல்லறம் | நல்வாழ்க்கை , இல்வாழ்க்கை , மேன்மையான தருமம் ; சமயதருமம் ; நல்லொழுக்கம் . |
| நல்லறிவு | நற்புத்தி ; நற்போதனை ; ஒரு நீதி நூல் . |
| நல்லாக | நன்றாக . |
| நல்லாங்கு | நன்மை . |
| நல்லாச்சி | நல்லம்மாள் ; சிற்றன்னை . |
| நல்லாடை | சிறந்த துகில் . |
| நல்லாப்பு | நன்மை . |
| நல்லாய்ச்சி | சிறிய தாய் முறையாள் . |
| நல்லார் | நற்குணமுடையோர் ; பெரியோர் ; கற்றார் ; மகளிர் . |
| நல்லாள் | நற்குணமுடையவள் ; தக்கவர் . |
| நல்லாறு | நல்வழி . |
| நல்லாறுடையான் | நல்வழிச் செல்வோன் . |
| நல்லி | பெண் ; முதுகெலும்பு ; விலங்குக் காலின் எலும்பு . |
| நல்லிசை | மறையாத புகழ் . |
| நல்லிருப்பு | வாளாவிருத்தல் ; நல்வாழ்வு . |
| நல்லிளம்படியர் | அழகிய இளம்பெண்டிர் . |
| நல்லினம் | நல்லவர் கூட்டம் ; பசுக்கூட்டம் . |
| நல்லுயிர் | மனைவிக்கு உயிர்போன்ற கணவன் . |
| நல்லுறவு | நெருங்கின உறவு . |
| நல்லூழ் | புண்ணியம் , தவப்பயன் . |
| நல்லெண்ணம் | நல் நினைவு . |
| நல்லெண்ணெய் | எள்ளிலிருந்து எடுக்கும் எண்ணெய் . |
| நல்லேர்கட்டுதல் | நல்லவேளையில் பருவத்திற்குரிய உழவைத் தொடங்குதல் . |
| நல்லேறு | இடபம் ; ஆண்எருமை . |
| நல்லொழுக்கம் | நன்னடக்கை ; ஒழுக்கம் . |
| நல்லோர் | அறிஞர் ; மகளிர் . |
| நல்வசி | சூலம் . |
| நல்வழி | நல்லொழுக்கம் ; ஔவையார் இயற்றிய நீதிநூல் . |
| நல்வாக்கு | நன்னிமித்தமான சொல் ; வேண்டுகோட் சொல் ; வாழ்த்துரை . |
| நல்வார்த்தை | காண்க : நல்வாக்கு ; சிறந்த செய்தி . |
| நல்வாழ்வு | இன்பமான இல்லற வாழ்க்கை ; சீருஞ்சிறப்புமாய் வாழ்கை . |
| நல்விதி | தவப்பயன் . |
| நல்வினை | அறச்செயல் ; முற்பிறப்பிற் செய்த புண்ணியச் செயல் . |
| நலக்குதல் | கசங்கச்செய்தல் ; அழுக்காக்குதல் ; நன்மைபயத்தல் . |
| நலங்கனிதல் | அன்பு முற்றுதல் ; அழகு முற்றுதல் . |
| நலங்கிடுதல் | மணமக்களுக்கு எண்ணெய் சீயக்காய் மஞ்சட்பொடி முதலியவற்றைப் பூசுஞ்சடங்குசெய்தல் ; மணமக்களுக்கு நலங்கு நடத்துதல் . |
| நலங்கு | நறுங்கூட்டு ; ஒரு கலியாணச் சடங்கு ; ஒரு மருந்து . |
| நலங்குதல் | நொந்துபோதல் ; வருந்துதல் ; நுடங்குதல் ; கசங்குதல் . |
| நலஞ்சாற்றுதல் | அரசன் ஆணையை வெளியிடுதல் . |
| நலத்தல் | நலமாதல் ; விரும்புதல் . |
| நலந்தட்டுதல் | விதையடித்தல் . |
| நலப்பாடு | நன்மை ; ஆதாயம் ; நற்பேறு . |
| நலப்பு | நன்மை ; வெற்றி . |
| நலம் | நன்மை ; இன்பம் ; உதவி ; கண்ணோட்டம் ; அழகு ; அன்பு ; ஆசை ; குணம் ; பயன் ; புகழ் ; உயர்வு ; நல்வாழ்வு ; நிறம் ; செம்மைநிறம் ; விருச்சிகராசி ; எருதின் விதை ; சுக்கு ; அறம் . |
| நலம்பாடு | தகுதி . |
| நலம்பாராட்டல் | தலைவியின் அழகைத் தலைவன் வியந்துரைக்கும் அகத்துறை . |
| நலம்பாராட்டு | தலைவியின் அழகைத் தலைவன் வியந்துரைக்கும் அகத்துறை . |
| நலம்பாராட்டுதல் | அலங்கரித்தல் , ஒப்பனை செய்தல் . |
| நலம்பொலம் | நன்றுதீது . |
| நலவர் | நல்லோர் . |
| நலவல் | நாவல்மரம் . |
| நலவு | நன்மை ; மன்னிப்புக் கேட்கும் மொழி . |
| நலி | நோய் . |
| நலித்தல் | துன்புறுத்தல் . |
| நலிதல் | சரிதல் ; மெலிதல் ; வருந்தல் ; அழிதல் ; நெருக்கல் . |
| நலிபு | ஆய்தவெழுத்திற்குச் செய்யுளில் வழங்கும் ஒரு பெயர் . |
| நலிபுவண்ணம் | ஆய்தவெழுத்துப் பயின்றுவருஞ் சந்தப்பாட்டு . |
| நலிவு | துன்பம் ; கேடு . |
| நவ்வல் | காண்க : நலவல் . |
| நவ்வார் | பகைவர் . |
| நவ்வி | பெண்மான் ; மான்குட்டி ; இளமை ; அழகு ; அத்தநாள் ; காண்க : நவ்வு . |
| நவ்வு | மரக்கலம் . |
| நவ்வுதல் | முழுதும் நம்புதல் ; ஆசையோடு எதிர் பார்த்திருத்தல் . |
| நவக்கிரகம் | சூரியன் , சந்திரன் , செவ்வாய் , புதன் , வியாழன் , சுக்கிரன் , சனி , இராகு , கேது ஆகிய ஒன்பது கோள்கள் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 642 | 643 | 644 | 645 | 646 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நல்லறம் முதல் - நவக்கிரகம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், நன்மை, சொல், அழகு, நல்வாழ்வு, காண்க, நல்லொழுக்கம், தலைவியின், நலங்கு, மணமக்களுக்கு, அழகைத், வியந்துரைக்கும், நவ்வு, நலவல், அகத்துறை, தலைவன், முற்றுதல், தவப்பயன், மகளிர், புகழ், எண்ணெய், நல்லோர், அன்பு, சிறந்த, நல்வாக்கு, நல்வழி

