தமிழ் - தமிழ் அகரமுதலி - நரகீலகன் முதல் - நரிதல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| நரகீலகன் | குருவைக் கொலைசெய்தவன் . |
| நரகு | நரகம் . |
| நரகேசரி | காண்க : நரவரி ; மக்களுள் சிறந்தவன் . |
| நரங்கடித்தல் | அழித்தல் . |
| நரங்குதல் | கடையாதல் ; மெலிதல் ; நொறுங்குதல் . |
| நரசிங்கம் | நரனும் சிங்கமும்கூடிய உருவுடன் பிறப்பெடுத்த திருமால் . |
| நரசிங்கமூர்த்தி | நரனும் சிங்கமும்கூடிய உருவுடன் பிறப்பெடுத்த திருமால் . |
| நரசிம்மன் | நரனும் சிங்கமும்கூடிய உருவுடன் பிறப்பெடுத்த திருமால் . |
| நரசீவன் | மனிதன் . |
| நரத்துவம் | மானிடத்தன்மை . |
| நரதுங்கன் | மாந்தரிற் சிறந்தவன் . |
| நரதுதி | மாந்தரைப் புகழ்தல் . |
| நரதேவன் | மக்கள் தலைவனான அரசன் . |
| நரந்தம் | கத்தூரிவிலங்கு ; கத்தூரி ; மணம் ; மணப்புல்வகை ; காகம் ; நாரத்தை . |
| நரப்பிரதிட்டை | மக்களால் நிறுவப்பட்டது . |
| நரப்புக்கருவி | நரம்புடைய யாழ் முதலிய இசைக்கருவிகள் . |
| நரப்புக்கருவியாளர் | யாழ் முதலியன வாசிப்போர் . |
| நரபதி | மக்கட்கும் தலைவனான அரசன் ; சோழ , விசயநகர வேந்தரின் பட்டப்பெயர் . |
| நரபாலன் | மக்கள் தலைவனான அரசன் . |
| நரம் | மாந்தப்பிறவி . |
| நரம்பன் | ஒல்லியானவன் ; ஒரு புகையிலை வகை . |
| நரம்பின்மறை | யாழ்நூல் . |
| நரம்பு | தசைநார் ; நாடி ; இரத்தக்குழாய் ; யாழ் நரம்பு ; இலை முதலியவற்றின் நரம்பு ; வில் நாண் . |
| நரம்புக்கடுப்பு | நரம்புநோய்வகை . |
| நரம்புக்கருவி | நரம்புகள் கொண்ட இசைக்கருவி . |
| நரம்புக்கழலை | நிணநீர் நரம்பின் வீக்கம் . |
| நரம்புக்காய் | நீண்டுமெலிந்த காய் ; முருங்கைக்காய் |
| நரம்புச்சிலந்தி | தோலில் புழுக்களை உண்டாக்கும் ஒரு புண்வகை ; நரம்பின்மேல் உண்டான புண்கட்டி . |
| நரம்புச்சுற்று | நரம்பின் வீக்கம் . |
| நரம்புசன்னி | இழுப்புநோய் . |
| நரம்புப்பல் | காண்க : நரம்புச்சுற்று . |
| நரம்புப்பிசகு | காண்க : சுளுக்கு . |
| நரம்புமண்டலம் | உடம்பிலுள்ள நரம்புகளின் கூறுபாடு . |
| நரம்புவலி | காண்க : நரம்பெரிச்சல் . |
| நரம்புவாங்குதல் | இலை முதலியவற்றின் நரம்பை நீக்குதல் ; குதிகாலின் நரம்பை வெட்டுதலான துன்புறுத்தல் . |
| நரம்புவீக்கம் | விதைவீக்கம் ; காண்க : நரம்புவலி . |
| நரம்பெடுத்தல் | கடுமையாக வேலைபுரியச்செய்தல் ; துணிவைக் கெடுத்தல் ; உடம்பு மிக மெலிந்துபோதல் . |
| நரம்பெரிச்சல் | நரம்புநோய்வகை . |
| நரமடங்கல் | காண்க : நரசிங்கமூர்த்தி . |
| நரமாமிசம் | மனித ஊன் . |
| நரமேதம் | மாந்தரைக் கொன்று செய்யும் வேள்வி . |
| நரல் | செத்தை ; மக்கட்கூட்டம் . |
| நரல்வு | யாழின் உள்ளோசை ; ஒலிக்கை ; எடுத்தலோசை . |
| நரலுதல் | ஒலித்தல் ; கத்துதல் . |
| நரலை | கடல் ; மதிலுறுப்புகளுள் ஒன்று ; ஒலி . |
| நரலோகம் | மக்கள் உலகமான மண்ணுலகம் . |
| நரவரி | நரசிங்கமூர்த்தி . |
| நரவல் | காண்க : நரகல் . |
| நரவாகனம் | மக்களால் சுமக்கப்படும் சிவிகை ; ஊர்தி ; குபேரனது ஊர்தி . |
| நரவாகனன் | நரனை ஊர்தியாகக்கொண்ட குபேரன் . |
| நரளி | கடலை . |
| நரற்றுதல் | ஒலித்தல் ; ஒலிக்கச்செய்தல் . |
| நரன் | மாந்தன் ; அருச்சுனன் ; ஒரு முனிவன் ; ஓர் இயக்கன் . |
| நரா | கன்றுகை . |
| நராங்குதல் | வளர்ச்சி குன்றிப்போதல் . |
| நராதிபன் | அரசன் . |
| நராந்தகம் | இறப்பு . |
| நராந்தகன் | மக்களை அழிக்கும் யமன் ; கொடியோன் . |
| நராந்தகம் | காக்கை . |
| நராப்பற்றுதல் | பழம் முதலியன கன்றிப்போதல் . |
| நராபோகம் | நினைத்திராத வாழ்வு பெறல் ; ஒருவன் போகம் நுகரும் வாழ்நாள் எல்லை . |
| நராயணன் | திருமால் . |
| நராலை | நரகம் . |
| நரி | ஒரு விலங்குவகை ; புலி ; வைக்கோற்புரிக்கருவி . |
| நரிக்குழி | நரிவளை . |
| நரிக்கொன்றை | செங்கொன்றைமரம் . |
| நரிகுளிப்பாட்டுதல் | நல்ல சொற்களால் ஏமாற்றுதல் . |
| நரிச்சல் | வௌவால்வகை . |
| நரித்தல் | காண்க : நரிதல் ; நொறுக்குதல் ; கெடுத்தல் ; நிந்தித்தல் , இகழ்தல் ; திகைத்தல் ; நரித்தன்மை அடைதல் . |
| நரித்தலை | முழங்கால் முட்டு . |
| நரிதல் | வருத்துதல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 640 | 641 | 642 | 643 | 644 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நரகீலகன் முதல் - நரிதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, திருமால், அரசன், நரசிங்கமூர்த்தி, மக்கள், தலைவனான, நரம்பு, யாழ், பிறப்பெடுத்த, சிங்கமும்கூடிய, நரனும், உருவுடன், நரம்பை, நரம்பெரிச்சல், நரம்புவலி, கெடுத்தல், ஊர்தி, நரிதல், நராந்தகம், நரம்புச்சுற்று, ஒலித்தல், நரம்புநோய்வகை, நரகம், மக்களால், சிறந்தவன், முதலியன, நரவரி, நரம்பின், முதலியவற்றின், வீக்கம்

