தமிழ் - தமிழ் அகரமுதலி - நயங்காட்டுதல் முதல் - நரகி வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
நயங்காட்டுதல் | இன்சொல் முதலியவற்றால் வயப்படுத்துதல் . |
நயச்சொல் | இனியசொல் ; முகமன்வார்த்தை ; இச்சகம் ; அசதியாடல் . |
நயத்தகுதல் | விரும்பல் ; நன்மையாதல் . |
நயத்தல் | விரும்புதல் ; பாராட்டுதல் ; சிறப்பித்தல் ; பிரியப்படுத்தல் ; தட்டிக்கொடுத்தல் ; கெஞ்சுதல் ; அன்புசெய்தல் ; பின்செல்லுதல் ; மகிழ்தல் ; இன்பமுறல் ; இனிமையுறுதல் ; இணங்கிப்போதல் ; பயன்படுதல் ; மலிதல் ; மேம்படுதல் ; ஈரம் ஏறுதல் ; நட்பாடல் ; தலைவனைக் கண்ட தலைவி தனது ஆசைப்பாடு கூறும் புறத்துறை . |
நயத்தவிலை | மலிந்த விலை . |
நயந்துசொல்லுதல் | பயன்படச் சொல்லுதல் ; வேண்டிக்கொள்ளுதல் . |
நயத்தோர் | நண்பர் ; கணவர் . |
நயநயவார்த்தை | உறுதியில்லாச் சொல் . |
நயநிலைப்படலம் | நாடகம் . |
நயப்பாடு | பயன் ; மேம்பாடு . |
நயப்பித்தல் | விரும்பும்படி செய்தல் ; மகிழ்வித்தல் ; உடன்படுதல் ; பயன்படுத்தல் ; மலிவாக்குதல் . |
நயப்பு | அன்பு ; விருப்பம் ; இன்பம் ; தலைவி எழிலைப் புகழ்கை ; மலிவு ; இலாபம் ; மேம்பாடு ; நன்மை . |
நயப்புணர்வு | கண்ணோட்டம் . |
நயபயம் | அன்பும் கண்டிப்பும் . |
நயம் | இன்பம் ; அருள் ; மகிழ்ச்சி ; விருப்பம் ; தன்மை ; மேன்மை ; போற்றுகை ; அன்பு ; பக்தி ; நற்பயன் ; மலிவு ; மிகுதி ; பயன் ; நுண்மை ; இனிமை ; நீதி ; கொடையாளி ; கனமும் தேசிகமும் கலந்து பாடும்வகை . |
நயம்பண்ணுதல் | உதவிசெய்தல் . |
நயம்பாடு | காண்க : நயப்பாடு ; அழகுபடுகை . |
நயம்பாடுதல் | இனிமையாய்ப் பாடுதல் ; முகமன் கூறுதல் . |
நயம்பேசுதல் | மகிழப் பேசுதல் ; இனிமையாய் ஒலித்தல் . |
நயமாலி | மனோசிலை என்னும் மருந்து . |
நயமொழி | இன்மொழி ; நலம்பயக்கும் சொல் . |
நயர் | அறிவுடையார் . |
நயவசனம் | இனிய சொல் ; பணிவான சொல் . |
நயவஞ்சகம் | இனிமைகாட்டி ஏமாற்றுகை . |
நயவர் | காதலர் ; நண்பர் ; நீதியுடையோர் . |
நயவருதல் | விரும்புதல் ; நன்மையுண்டாதல் . |
நயவன் | சுவைஞன் . |
நயவார் | பகைவர் . |
நயவார்த்தை | காண்க : நயவசனம் . |
நயவான் | நயப்புள்ளோன் ; ஆதாயக்காரன் ; உபகாரி ; விரும்பாதவன் . |
நயவுரை | இனிய சொல் . |
நயன் | காண்க : நயம் ; நயவான் ; பசை ; உறவு ; கொடையாளி ; விரகு ; உபாயம் , நீதி . |
நயன்மை | நீதி . |
நயனகாசம் | கண்மேற் படர்சதை . |
நயனத்தானம் | துயிலணை . |
நயனதீட்சை | அருட்பார்வையால் சீடனுக்கு ஞானம் உண்டாக்குதல் . |
நயனப்பார்வை | கண்ணோக்கு ; காதல் நோக்கம் . |
நயனம் | கண் . |
நயனமாலை | உருத்திராக்கமாலை . |
நயனமோக்கம் | சிற்பிகள் சிலை முதலியவற்றிற்குக் கண்ணைத் திறந்துவிடுகை . |
நயனமோட்சம் | சிற்பிகள் சிலை முதலியவற்றிற்குக் கண்ணைத்திறந்துவிடுகை . |
நயனரோகம் | கண்ணோய் . |
நயனவாரி | கண்ணீர் . |
நயனை | கண்மணி . |
நயனோற்சவம் | கண்காட்சி ; காட்சிக்கு விருந்தான அழகுமிக்க பொருள் ; விளக்கு . |
நயாசலன் | நீதிநெறி வழுவாதவன் . |
நயிச்சியஞ்செய்தல் | தன்வயப்படுத்துதல் . |
நயிட்டிகப்பிரமசாரி | வாழ்நாள் முழுதும் பிரமசாரியாய்க் கழிப்போன் ; மாணவன் . |
நயிட்டிகர் | நிட்டை தவறாதோர் . |
நயிந்தை | தலைவன் ; ஒரு பட்டப்பெயர் . |
நயினார் | ஆண்டவன் ; தலைவன் ; காண்க : ஐயனார் ; சித்திரகுப்தன் ; சமணர்க்குரிய பட்டப்பெயர் . |
நர்த்தகன் | கூத்தாடுவோன் . |
நர்த்தகி | கூத்தாடுபவள் . |
நர்த்தனம் | கூத்து . |
நரகபாதாளம் | ஆழ்நரகம் . |
நரகம் | உயிர்கள் தீவினையின் பயனை நுகரும் இடம் , பாதாள உலகம் . |
நரகர் | நரகத்தில் வாழ்பவர் . |
நரகரி | நரசிம்மமூர்த்தியாகிய திருமால் . |
நரகல் | மலம் ; தூய்மையின்மை . |
நரகலித்தல் | அருவருத்தல் ; அழுக்குடைத்தாதல் . |
நரகவாய் | நிரயவாய் நரகம் . |
நரகவேதனை | நரகத்தில் நுகரும் துன்பம் . |
நரகன் | நரகத்திலுள்ளோன் ; மாபாவி ; கண்ணபிரனால் கொல்லப்பட்ட ஓர் அசுரன் . |
நரகாரி | நரகாசுரனைக் கொன்றவனான திருமால் . |
நரகாந்தகன் | நரகாசுரனைக் கொன்றவனான திருமால் . |
நரகாலி | கால்நடைகளுக்கு வரும் ஒரு நோய் வகை . |
நரகி | நரகலோகத்துள்ளவள் . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 639 | 640 | 641 | 642 | 643 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நயங்காட்டுதல் முதல் - நரகி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், சொல், காண்க, நீதி, திருமால், முதலியவற்றிற்குக், நயவான், சிலை, தலைவன், சிற்பிகள், நரகம், நரகாசுரனைக், கொன்றவனான, நரகத்தில், நுகரும், இனிய, பட்டப்பெயர், நயவசனம், மேம்பாடு, அன்பு, பயன், நயப்பாடு, நண்பர், விருப்பம், இன்பம், விரும்புதல், கொடையாளி, நயம், மலிவு, தலைவி