தமிழ் - தமிழ் அகரமுதலி - நட்பு முதல் - நடுக்குடி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| நட்பு | சிநேகம் ; உறவு ; சுற்றம் ; நண்பன் ; யாழின் நாலாம் நரம்பு ; காதல் ; அரசாங்கம் ஆறனுள் ஒன்றாகிய நட்பரசர் ; கையூட்டு ; மாற்றரசரோடு நட்புச்செய்கை . |
| நட்புக்காட்டுதல் | சிநேகபாவங் காட்டுதல் ; குழந்தைகட்குத் தின்பண்டம் உதவுதல் ; இலஞ்சம் கொடுத்தல் . |
| நட்புவைத்தல் | சிநேகஞ்செய்தல் . |
| நடக்குமிடம் | செல்வாக்குள்ள இடம் . |
| நடக்கை | ஒழுக்கம் ; செல்கை ; வழக்கு . |
| நடத்தல் | நடந்துசெல்லுதல் ; ஒழுகுதல் ; பரவுதல் ; நிகழ்தல் ; நிகராதல் ; நிறைவேறுதல் . |
| நடத்துதல் | நடக்கச்செய்தல் ; அழைத்துப்போதல் ; செயல்புரிதல் ; கற்பித்தல் ; செலுத்துதல் ; அரைத்தல் . |
| நடத்தை | காண்க : நடக்கை ; செல்வாக்கு ; இயல்பு . |
| நடத்தைக்காரன் | செல்வாக்குள்ளவன் . |
| நடத்தைக்காரி | விலைமகள் . |
| நடத்தைகெட்டவள் | விலைமகள் . |
| நடத்தைப்பிழை | ஒழுக்கத்தவறு . |
| நடந்தசெய்தி | உண்மைநிகழ்ச்சி . |
| நடந்துகொள்ளுதல் | மேலோரிடத்து ஒழுகுதல் . |
| நடந்துவருதல் | நிகழ்தல் . |
| நடந்தேறுதல் | நிறைவேறுதல் . |
| நடப்பன | காலால் நடந்துசெல்லும் உயிர்வகை . |
| நடப்பிப்பு | சிக்கனம் ; மேற்பார்வை . |
| நடப்பு | நடத்தை ; போக்குவரவு ; தீய காமத்தொடர்பு ; கருமாந்தரத்துக்கு முதல் நாளில் கல்நடுஞ் சடங்கு ; செல்லுதற்குரிய இடம் ; தற்காலம் ; தாலிவாங்குகை . |
| நடப்புக்காரன் | காண்க : நடத்தைக்காரன் . |
| நடப்புவட்டி | நடைமுறை வட்டி . |
| நடப்புவிலை | தற்கால விலை . |
| நடபடி | நடத்தை ; செயல் ; நிகழ்ச்சி ; வழக்கம் ; ஒழுக்கம் . |
| நடபாவி | படியுள்ள கிணறு . |
| நடம் | கூத்து . |
| நடம்பயிலுதல் | காண்க : நடமாடுதல் . |
| நடமண்டனம் | அரிதாரம் . |
| நடமாட்டம் | நடக்கை ; வலிமை ; செல்வாக்கு ; பழக்கம் ; கூடுமிடம் ; நடனம் . |
| நடமாடுதல் | நடத்தல் ; உலாவுதல் ; திரிதல் ; ஊடாடுதல் ; வழங்குதல் ; கூத்தாடுதல் ; பரவியிருத்தல் ; துன்பம் முதலியவற்றால் அடைபட்டிருந்து வெளிவருதல் . |
| நடமாளிகை | கோயிற் பிராகாரம் . |
| நடமாளிகைமண்டபம் | கோயிற் பிராகாரம் . |
| நடராசன் | சிவபெருமானின் பல மூர்த்தங்களுள் ஒன்றான நடனமாடும் உருவம் . |
| நடல் | ஊன்றுகை . |
| நடலம் | செருக்கு ; அதிநாகரிகங் காட்டுகை ; பாசாங்கு ; வீண்செலவிடுகை ; இகழ்ச்சி . |
| நடலம்பண்ணுதல் | அதிநாகரிகம் காட்டுதல் . |
| நடலமடித்தல் | பாசாங்கு செய்தல் . |
| நடலை | வஞ்சனை ; துன்பம் ; பொய்ம்மை ; பாசாங்கு ; அசைவு . |
| நடவடி | நடத்தை ; செயல் . |
| நடவடிக்கை | நடத்தை ; செயல் . |
| நடவு | நாற்று நடுகை ; நட்ட பயிர் ; நடவுக் கணக்கு . |
| நடவுகம்பு | தளிர்த்துவரும் பொருட்டு நடப்படும் கம்பு . |
| நடவுகாரிகள் | நாற்று நடும் வேலைக்காரிகள் . |
| நடவுகொத்து | வயல் நடுகைக்காகக் கொடுக்கப்படும் கூலி . |
| நடவுசெய்தல் | அரசாளுதல் ; நாற்று நடுதல் . |
| நடவுதல் | செலுத்துதல் ; செயல் நடத்துதல் . |
| நடவுப்பயிர் | முதலில் நட்ட பயிர் . |
| நடவுபோடுதல் | நாற்று நடுதல் . |
| நடவை | வழி ; கடவைமரம் ; வழங்குமிடம் ; உபாயம் ; காண்க : நடவு ; தணக்கமரம் . |
| நடன் | கூத்தன் . |
| நடனசாலை | கூத்துப் பயிலிடம் . |
| நடனம் | கூத்து ; பாசாங்கு ; குதிரை நடை ; இந்திரசாலம் . |
| நடனர் | கூத்தர் . |
| நடனியர் | கூத்தியர் . |
| நடாத்துதல் | காண்க : நடத்துதல் . |
| நடாவுதல் | காண்க : நடவுதல் . |
| நடி | நாட்டியப்பெண் ; ஆட்டம் . |
| நடித்தல் | கூத்தாடுதல் ; பாசாங்குசெய்தல் ; கோலங்கொள்ளுதல் . |
| நடிப்பு | கூத்து ; பாவனைகாட்டல் . |
| நடு | இடை ; மையம் ; வானத்தின் உச்சி ; நடுவுநிலை ; இடுப்பு ; நீதி ; மிதம் ; வழக்கு ; பூமி ; இடைப்பட்டது ; அந்தரியாமியான கடவுள் . |
| நடுக்கட்டு | அரைக்கச்சை ; பெரிய வீட்டின் நடுவிலுள்ள பகுதி . |
| நடுக்கண்டம் | மத்தியத்துண்டு ; மத்தியப்பகுதி . |
| நடுக்கம் | நடுங்குகை ; மிக்க அச்சம் ; துன்பம் ; கிறுகிறுப்பு . |
| நடுக்கல் | நடுங்கல் ; காண்க : நடுக்கல்வாதம் . |
| நடுக்கல்வாதம் | உதறுவாதம் . |
| நடுக்கற்சுரம் | குளிர்காய்ச்சல் . |
| நடுக்கு | காண்க : நடுக்கம் ; மனச்சோர்வு . |
| நடுக்குடி | நடுநிலைமையிலுள்ள குடும்பம் ; ஓர் இனத்தின் தலைமைக் குடி ; நடுவூர்க் குடி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 634 | 635 | 636 | 637 | 638 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நட்பு முதல் - நடுக்குடி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, நடத்தை, நாற்று, பாசாங்கு, செயல், நடக்கை, துன்பம், நடத்துதல், கூத்து, கோயிற், நடவு, பிராகாரம், இடம், பயிர், நடுக்கல்வாதம், குடி, நடுக்கம், நடவுதல், நடுதல், நட்ட, நடனம், செலுத்துதல், வழக்கு, நிறைவேறுதல், நிகழ்தல், ஒழுகுதல், ஒழுக்கம், செல்வாக்கு, நடமாடுதல், நடத்தல், காட்டுதல், விலைமகள், நடத்தைக்காரன், கூத்தாடுதல்

