முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » நஞ்சுபாய்ச்சுதல் முதல் - நட்பாளர் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - நஞ்சுபாய்ச்சுதல் முதல் - நட்பாளர் வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
நஞ்சுபாய்ச்சுதல் | வஞ்சகஞ் செய்தல் ; ஆயுதம் முதலியவற்றுக்கு நஞ்சு ஏற்றுதல் . |
நஞ்சுபிடித்தம் | நஞ்சுக்கொடி தங்குதலால் உண்டாகும் நோய் . |
நஞ்சுமுறிச்சான் | காண்க : நஞ்சறப்பாய்ஞ்சான் . |
நஞ்சுவிழியரவு | திட்டிவிடம் . |
நஞ்சுறுதல் | மனம் உருகுதல் . |
நஞ்சூட்டுதல் | ஆயுதம் முதலியவற்றிற்கு விடமேற்றுதல் ; நஞ்சைக் கலந்து கொடுத்தல் . |
நஞ்செடுத்தல் | நஞ்சு முறித்தல் . |
நஞ்சை | நன்செய் . |
நட்சத்திரகண்டகி | காண்க : அன்னாசி . |
நட்சத்திரச்சக்கரம் | விண்மீன் வட்டம் ; சந்திர மண்டலத்திற்குரிய நட்சத்திரங்கள் ; கலப்பைச் சக்கரம் முதலியன போலச் சோதிடங் கணித்தற்குரிய சக்கரவகை . |
நட்சத்திரச்சீரகம் | பெருஞ்சீரகம் . |
நட்சத்திரதீபம் | ஒரு விளக்குவகை . |
நட்சத்திரநேமி | சந்திரன் ; திருமால் ; துருவமீன் . |
நட்சத்திரப்பொருத்தம் | பத்துவகைக் கலியாணப் பொருத்தங்களுள் மணமக்களின் நட்சத்திரப் பொருத்தம் . |
நட்சத்திரம் | அசுவினி முதலாக இரேவதி இறுதியாகவுள்ள இருபத்தேழு நாள்மீன் ; வானமண்டலத்தில் தோன்றும் மீன் ; சந்திரன் நாண்மீனில் தங்கிச்செல்லும் காலம் . |
நட்சத்திரமண்டலம் | விண்மீன் வட்டம் . |
நட்சத்திரமாதம் | அசுவினி முதல் இருபத்தேழு விண்மீன்களைக்கொண்டு கணக்கிடும் மாதம் . |
நட்சத்திரமாலை | விண்மீன் கூட்டம் ; விண்மீன்கள் செறிந்து தோன்றும் பால்வீதி மண்டலம் ; சந்திரனுக்குரித்தான இருபத்தேழு விண்மீன்கள் ; இருபத்தேழு பாடல்கொண்ட பிரபந்தவகை ; ஒரு சோதிட நூல் . |
நட்சத்திரவீதி | சந்திரன் திரியும் வானவழி ; விண்மீன்கள் செறிந்து தோன்றும் பால்வீதி மண்டலம் . |
நட்சத்திரேசன் | சந்திரன் . |
நட்டசந்திரன் | ஆவணி மாதத்து வளர்பிறைச் சதுர்த்திப் பிறை . |
நட்டணை | கூத்து ; கோமாளிக்கூத்து ; கொடுமை ; நடிப்பு ; கணவன் மனைவி போன்றவருள் ஒற்றுமையின்மை ; யோசனையின்மை ; பொறுமையின்மை . |
நட்டணைக்காரன் | செருக்குக் கொண்டவன் . |
நட்டதுட்டி | வருவாய்க் குறைவு . |
நட்டநடு | நடுமையம் . |
நட்டநடுநாள் | உச்சிக்காலம் ; உரியகாலம் . |
நட்டநடுப்பெற | நடுமத்தியில் ; மரியாதையின்றி ; உலகப்பழியைக் கவனியாது . |
நட்டபாடை | குறிஞ்சிப் பண்வகை . |
நட்டம் | நடனம் ; பிரத்தியயம் ஆறனுள் ஒன்று ; இழப்பு ; நேர்நிலை ; கோவணம் மட்டும் கட்டிக்கொண்டு ஆடையின்றி இருக்கை ; இழந்த பொருளைப்பற்றி நிமித்தத்தால் அறியும்கலை . |
நட்டமாய்நிற்றல் | அடங்காதிருத்தல் . |
நட்டராகம் | காண்க : நட்டபாடை . |
நட்டவம் | காண்க : நட்டுவம் . |
நட்டவர் | நண்பர் . |
நட்டழிவு | நடவுச்சேதம் . |
நட்டாத்திசூத்திரம் | கொள்ளைப்பொருள் . |
நட்டாமுட்டி | நடுத்தரமானது ; வஞ்சகம் ; கீழ்மை ; ஒரு நூல் . |
நட்டாமுட்டிவேலை | சில்லறை வேலை . |
நட்டார் | நண்பர் ; உறவினர் . |
நட்டாற்றில்விடுதல் | கேட்டில் கைவிட்டுப் போதல் ; ஆற்றின் நடுவில் விடுதல் . |
நட்டி | இழப்பு . |
நட்டியும்குட்டியும் | சிறியதும் , குறியதும் , சின்னஞ்சிறிது . |
நட்டு | உப்புக் கொட்டிவைக்கும் மேடை ; நாட்டியம் ; காண்க : நட்டுவன் , நாட்டியக்காரன் ; கீழ்மை ; சரிநடு ; நட்டம் . |
நட்டுக்கதை | கட்டுக்கதை ; நிந்தைமொழி . |
நட்டுச்சினை | நண்டுமுட்டை . |
நட்டுமுட்டு | ஆடல்பாடல் ; மத்தளக்காரனும் தாளக்காரனும் ; நடனத்துக்குரிய கருவிகள் . |
நட்டுமுட்டுக்காரர் | நட்டுவ மேளக்காரர் . |
நட்டுவம் | நாட்டியம் பழக்கி ஆட்டுவிக்குந் தொழில் . |
நட்டுவன் | நாட்டியம் பயிற்றும் ஆசிரியன் . |
நட்டுவாக்காலி | கவ்விக்கொட்டும் தன்மையுள்ள ஒரு சிற்றுயிரிவகை . |
நட்டுவாய்க்காலி | கவ்விக்கொட்டும் தன்மையுள்ள ஒரு சிற்றுயிரிவகை . |
நட்டுவிழல் | தலைகீழாய் விழுதல் ; மெய்க்குற்றம் ஐந்தனுள் தலைசாய்கை ; செருக்குறுதல் . |
நட்டுவிழுதல் | தலைகீழாய் விழுதல் ; மெய்க்குற்றம் ஐந்தனுள் தலைசாய்கை ; செருக்குறுதல் . |
நட்டுவைத்தல் | மரக்கன்று முதலியவற்றை நடுதல் ; குடும்பம் முதலியவற்றை நிலைநிறுத்துதல் . |
நட்டுவைத்தவன் | ஆதரித்தவன் . |
நட்டோடு | நண்டின் மேலோடு . |
நட்டோர் | காண்க : நட்டார் . |
நட்பாடல் | நட்புச்செய்தல் . |
நட்பாராய்தல் | நட்புக்குரியாரை ஆராயுந்திறம் . |
நட்பாளர் | உற்ற நண்பினர் ; அரசர் உறுதிச் சுற்றத்துள் நம்பிக்கைக்குரிய நண்பர் . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 633 | 634 | 635 | 636 | 637 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நஞ்சுபாய்ச்சுதல் முதல் - நட்பாளர் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, சந்திரன், இருபத்தேழு, தோன்றும், நண்பர், நாட்டியம், விண்மீன்கள், விண்மீன், தன்மையுள்ள, கவ்விக்கொட்டும், நட்டுவன், சிற்றுயிரிவகை, முதலியவற்றை, தலைகீழாய், நட்டார், செருக்குறுதல், ஐந்தனுள், மெய்க்குற்றம், விழுதல், தலைசாய்கை, இழப்பு, செறிந்து, பால்வீதி, அசுவினி, வட்டம், நஞ்சு, மண்டலம், நூல், நட்டுவம், ஆயுதம், நட்டம், நட்டபாடை, கீழ்மை