முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » நச்சுப்பொய்கை முதல் - நஞ்சுண்டோன் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - நச்சுப்பொய்கை முதல் - நஞ்சுண்டோன் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| நச்சுப்பொய்கை | நச்சுநீர் நிறைந்த நீர்நிலை . |
| நச்சுமரம் | எட்டி முதலிய நஞ்சுள்ள மரம் . |
| நச்சுமழை | விடாத சிறுதூறல் ; காலம் தப்பிப் பெய்து கேடு விளைக்கும் மழை . |
| நச்சுவாக்கு | தீச்சொல் . |
| நச்சுவாய் | கேடு விளைவிக்கும் வாய் . |
| நச்சுவாயன் | ஓயாமற் பிதற்றுபவன் . |
| நச்சுவிறகு | கள்ளி , எருக்கு முதலிய நஞ்சாரமுள்ள விறகுகள் . |
| நச்சுவேலை | தொந்தரவை உண்டாக்கும் வேலை ; எளிதில் செய்யலாகாத சிக்கலான பணி . |
| நச்செலி | சுண்டெலி ; மூஞ்சூறு ; நஞ்சுள்ள எலிவகை . |
| நச்செழுத்து | நூலின் முதற் செய்யுளில் முதலெழுத்தாக அமைக்கத்தகாத எழுத்துகள் . |
| நசல் | நோய் . |
| நசலாளி | நோயாளி . |
| நசற்காரன் | நோயாளி . |
| நசனை | மாணிக்கக் குற்றத்துள் ஒன்று . |
| நசாரி | எட்டிமரம் . |
| நசித்தல் | அழிதல் ; குறைதல் ; சாதல் ; அழித்தல் ; அரைத்தல் ; கசக்குதல் ; அடக்கிப் பேசுதல் ; எளிதாக்குதல் . |
| நசிதல் | அழிதல் ; நசுங்குதல் ; குறைதல் ; அடக்கிப் பேசப்படுதல் ; நிலைமை சுருங்குதல் ; திரைதல் . |
| நசிந்துகொடுத்தல் | பழுத்து மெதுவாயிருத்தல் ; இணங்குதல் . |
| நசிப்பு | அழிவு . |
| நசியம் | மூக்கிலிடும் மருந்து ; மூக்குப்பொடி . |
| நசியல் | நெரிந்தது ; தட்டையானது ; வளைந்து கொடுப்பது . |
| நசியலன் | கழப்புணி . |
| நசிவு | நெரிவு ; நிந்தை ; கேடு . |
| நசிவுகாணுதல் | நைந்து சேதப்படுதல் ; மனம் வேறுபடுதல் ; நிலையற்றிருத்தல் . |
| நசிவுகாயம் | ஊமைக்காயம் . |
| நசிறாண்டி | தொந்தரவு செய்வோன் ; ஒன்றுங்கொடாதவன் , இவறலன் . |
| நசிறாணி | தொந்தரவு செய்வோன் ; ஒன்றுங்கொடாதவன் , இவறலன் . |
| நசினை | காண்க : நசனை . |
| நசுக்கான் | சிறியது . |
| நசுக்கு | நெரிவு ; சிறியது . |
| நசுக்குணி | சிறியது ; கூழையன் ; பின்னிடுவோன் ; தொந்தரவுசெய்வோன் . |
| நசுக்குதல் | நசுங்கச்செய்தல் ; கழப்பிப் பேசுதல் ; தடுத்தல் ; கீழ்ப்படுத்துதுல் ; அடித்தல் . |
| நசுக்குநசுக்கெனல் | ஒட்டுதற்குறிப்பு ; தொந்தரவு செய்தற் குறிப்பு . |
| நசுகுணி | சிறியது ; கூழையன் . |
| நசுங்கச்சப்பி | உலோபி , கருமி , இவறலன் . |
| நசுங்கடித்தல் | பலங்கெடுத்தல் , நொறுக்கல் . |
| நசுங்கல் | மெலிந்தது ; நைந்த காயம் ; இவறலன் , உலோபி , உறுதியற்றவன் . |
| நசுங்கலன் | உறுதியற்றவன் ; காண்க : நசுக்குணி . |
| நசுங்கலான் | உறுதியற்றவன் ; காண்க : நசுக்குணி . |
| நசுங்குதல் | நசுக்கப்படுதல் ; பிதுங்துதல் ; கசங்குதல் ; செயல்கெடுதல் ; நழுவிவிடுதல் ; நிலை குலைதல் . |
| நசுநசுத்தல் | தடுமாறுதல் ; விடாது தூறிக்கொண்டிருத்தல் ; ஈரமாயிருத்தல் ; தொடக் குழைதல் ; தாராளமின்றியிருத்தல் ; தொந்தரவு செய்தல் . |
| நசுநசெனல் | மழை தூறற்குறிப்பு ; ஈரக்குறிப்பு ; தொந்தரவு செய்தற்குறிப்பு ; வளைந்து கொடுத்தற் குறிப்பு ; மனம் சஞ்சலப்படுதற் குறிப்பு . |
| நசுபிசெனல் | மழை தூறற்குறிப்பு ; ஈரக்குறிப்பு ; தொந்தரவு செய்தற்குறிப்பு ; வளைந்து கொடுத்தற் குறிப்பு ; மனம் சஞ்சலப்படுதற் குறிப்பு . |
| நசுவல் | இவறலன் , உலோபி , முயற்சியற்றவர் ; மெலிந்தது ; குழப்பமானது ; மலம் ; மெலிந்தவர் ; தொந்தரவு செய்வோன் . |
| நசை | ஆசை ; அன்பு ; நம்பிக்கை ; எள்ளல் ; குற்றம் ; ஈரம் . |
| நசைகுநர் | காண்க : நசையுநர் . |
| நசைதல் | விரும்புதல் ; அன்புசெய்தல் . |
| நசைநர் | நண்பர் . |
| நசையுநர் | நண்பர் . |
| நசையுரை | காதற்பேச்சு . |
| நசைவினை | நற்செயல் . |
| நசைவு | தரையில் உண்டாகும் ஈரம் . |
| நஞ்சபாதம் | குதிரைக்குற்றங்களுள் ஒன்று . |
| நஞ்சம் | நஞ்சு . |
| நஞ்சறப்பாய்ஞ்சான் | காண்க : கொடிப்பாலை ; படுவங்கீரை . |
| நஞ்சறுப்பான் | காண்க : கொடிப்பாலை ; படுவங்கீரை . |
| நஞ்சன் | தீயவன் . |
| நஞ்சி | குன்றிமணி . |
| நஞ்சீடு | நஞ்சு இடப்படுகை . |
| நஞ்சு | விடம் ; தீயது ; குழந்தை பிறந்தபின் வெளிப்படும் தசை முதலியன . |
| நஞ்சுக்கொடி | கொப்பூழ்க்கொடி ; குழந்தை பிறந்தபின் வெளிப்படும் தசை முதலியன . |
| நஞ்சுச்சுரம் | மகப்பேற்றுக் காய்ச்சல் . |
| நஞ்சுண்டம் | மரவகை . |
| நஞ்சுண்டான் | நஞ்சுண்ட சிவபிரான் . |
| நஞ்சுண்டை | மரவகை . |
| நஞ்சுண்டோன் | சிவபிரான் ; கள்ளர் பட்டப் பெயர் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 632 | 633 | 634 | 635 | 636 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நச்சுப்பொய்கை முதல் - நஞ்சுண்டோன் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், தொந்தரவு, காண்க, இவறலன், குறிப்பு, சிறியது, செய்வோன், நசுக்குணி, உறுதியற்றவன், உலோபி, வளைந்து, மனம், கேடு, நஞ்சு, மரவகை, ஈரம், சஞ்சலப்படுதற், கொடுத்தற், சிவபிரான், முதலியன, பிறந்தபின், செய்தற்குறிப்பு, நண்பர், கொடிப்பாலை, படுவங்கீரை, குழந்தை, நசையுநர், வெளிப்படும், கூழையன், அழிதல், குறைதல், ஒன்று, நசனை, நஞ்சுள்ள, நோயாளி, அடக்கிப், பேசுதல், மெலிந்தது, தூறற்குறிப்பு, முதலிய, ஒன்றுங்கொடாதவன், நசுங்குதல், நெரிவு, ஈரக்குறிப்பு

