தமிழ் - தமிழ் அகரமுதலி - தேதேயெனல் முதல் - தேர்ந்தவன் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| தேதேயெனல் | இசைக்குறிப்பு . |
| தேந்தேமெனல் | இசைக்குறிப்பு . |
| தேநீர் | காண்க : தேத்தண்ணீர் . |
| தேப்பை | தெப்பம் . |
| தேபூசை | தெய்வவழிபாடு . |
| தேம் | இனிமை ; நறுமணம் ; தேன் ; தேனீ ; வண்டு ; கள் ; ஈரம் ; மதம் ; நெய் ; இடம் ; நாடு ; திக்கு ; ஏழாம் வேற்றுமைச் சொல்லுருபு . |
| தேம்பல் | தேம்புதல் ; வாட்டம் ; இளைத்தல் ; குறைந்த நிலை ; வருத்தம் ; விம்மியழுதல் ; பழம்பூ ; காண்க : தேமல் . |
| தேம்புதல் | வாடுதல் ; மெலிதல் ; வருந்துதல் ; விம்மியழுதல் ; அழிதல் ; நுகர உரியதாதல் ; வலி குறைதல் . |
| தேமம் | ஈரம் . |
| தேமல் | சுணங்கு ; ஒர் உடற்புள்ளிவகை ; மேகப் படை ; தோலைப்பற்றி வரும் நோய்வகை . |
| தேமா | மாமரவகை ; நேர்நேர் என வரும் சீரைக் குறிக்கும் வாய்பாடு . |
| தேமாங்கனி | நேர்நேர்நிரை எனவரும் சீரைக் குறிக்கும் வாய்பாடு . |
| தேமாங்காய் | நேர்நேர்நேர் எனவரும் சீரைக் குறிக்கும் வாய்பாடு . |
| தேய்கடை | தேய்ந்தது ; வளர்ச்சியற்றது . |
| தேய்கடைப்பிள்ளை | வளராப்பிள்ளை . |
| தேய்த்தல் | உரைசச்செய்தல் ; துலக்குதல் ; குரைத்தல் ; செதுக்குதல் ; அழித்தல் ; துடைத்தல் ; எண்ணெய் முதலியன அழுந்தப் பூசுதல் . |
| தேய்த்துக்குளி | எண்ணெய் முழுக்கு . |
| தேய்தல் | உரைசுதல் ; குறைதல் ; மெலிதல் ; வலிகுன்றல் ; கழிதல் ; அழிதல் ; சாதல் . |
| தேய்தவளை | தேரை . |
| தேய்ந்துமாய்ந்துபோதல் | கவலையால் உடல் மெலிதல் . |
| தேய்நீர் | காண்க : தேநீர் . |
| தேய்ப்புணி | செட்டுள்ளவன் . |
| தேய்ப்புத்தாள் | உப்புத்தாள் . |
| தேய்பிறை | குறைமதி ; இருட்பக்கமாகிய கிருட்டினபக்கம் . |
| தேய்மானம் | தேய்வு ; பொன்னை உரைத்தலால் உண்டாகும் குறைவு ; சிக்கனம் ; சோம்பல் . |
| தேய்வு | குறைபாடு ; பொன்னை உரைத்தலால் உண்டாகும் குறைவு ; இழிவு ; மெலிவு ; அழிவு . |
| தேய்வை | சந்தனக்குழம்பு . |
| தேயசு | காண்க : தேசு . |
| தேயப்பரிச்சேதம் | இடத்தால் அளவிடுகை ; ஒரு நாட்டில் உண்டென்பது வேறு நாட்டில் இல்லையென்பது . |
| தேயம் | நாடு ; இடம் ; உடல் ; பொன் ; பொருள் ; களவு ; அழகு ; புகழ் ; அறிவு ; பெருமை ; வீரியம் . |
| தேயவியற்கை | நாட்டுவழக்கம் . |
| தேயன் | நினைக்கப்படுவோன் ; திருடன் . |
| தேயாமண்டிலம் | தேய்ந்து குறையாத சூரிய மண்டலமான ஆதித்தமண்டிலம் . |
| தேயாமணி | வைரமணி . |
| தேயாமதி | முழுநிலா . |
| தேயிலை | தேயிலைச்செடி ; தேயிலைத்தூள் . |
| தேயு | நெருப்பு ; மயக்கம் . |
| தேயுசகா | தீயின் நண்பனான காற்று . |
| தேயுடலி | காண்க : தேவாங்கு . |
| தேயுலிங்கம் | அக்கினி வடிவமாகத் திருவண்ணாமலையில் உள்ள சிவலிங்கம் . |
| தேர் | இரதம் ; சிறுதேர் ; காண்க : கொல்லாவண்டி ; உரோகிணிநாள் ; கானல் ; பௌத்த முனிவர் . |
| தேர்க்கவி | காண்க : இரதபந்தம் . |
| தேர்க்கால் | தேர்ச்சக்கரம் ; குயவனின் சக்கரம் . |
| தேர்க்குடம் | காண்க : தேர்க்குழிசி ; தேர்முடி ; தேரின் அலங்காரக்குடம் . |
| தேர்க்குழிசி | தேரின் சக்கரக்குடம் . |
| தேர்க்கூம்பு | கொடிஞ்சிமரம் ; தேரின் முடி . |
| தேர்க்கொடி | தேரில் கட்டிய கொடி . |
| தேர்க்கொடிஞ்சி | கைக்கு உதவியாகத் தேர்த் தட்டின் முன்னே நடப்பட்ட உறுப்பு ; தேரின் நுகக்காலை இணைக்கும் அடிமரம் ; கொடிஞ்சி மரம் ; இரதத்தின் சிகரம் . |
| தோக்கொடுங்கை | தேரின் வெளிப்பக்கத்து வளைவு . |
| தேர்க்கொற்றன் | தேரோட்டுவோன் . |
| தேர்ச்சி | ஆராய்ச்சி ; கல்வி ; தெளிவு ; பயிற்சி ; தேர்வில் வெற்றிபெறுகை ; ஆலோசனை . |
| தேர்ச்சித்துணைவர் | மந்திரத்தலைவர் ; அமைச்சர் ; நட்பினர் . |
| தேர்ச்சில் | தேர்ச்சக்கரம் . |
| தேர்ச்சிவரி | உறவினர்க்குத் தன் துன்பங்களைத் தெரிவிக்கும் கூத்துவகை . |
| தேர்ச்சினை | தேர்மொட்டு . |
| தேர்த்தட்டு | தேரின் உட்பரப்பு . |
| தேர்த்தல் | கலத்தல் . |
| தேர்த்தானை | தேர்ப்படை . |
| தேர்த்திருநாள் | கோயில் தேர்த்திருவிழா . |
| தேர்தல் | ஆராய்தல் ; சிந்தித்தல் ; அறிதல் ; தெளிதல் ; தெரிந்தெடுத்தல் ; தேடுதல் ; உறுதி செய்தல் ; கொள்ளல் ; பயிற்சியடைதல் ; ஐயுறுதல் . |
| தேர்ந்தவன் | அறிஞன் ; கற்றவன் ; புலவன் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 614 | 615 | 616 | 617 | 618 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தேதேயெனல் முதல் - தேர்ந்தவன் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, தேரின், குறிக்கும், மெலிதல், வாய்பாடு, சீரைக், உரைத்தலால், பொன்னை, தேய்வு, உடல், உண்டாகும், குறைவு, தேநீர், தேர்க்குழிசி, தேர்ச்சக்கரம், நாட்டில், எண்ணெய், எனவரும், அழிதல், நாடு, தேமல், விம்மியழுதல், குறைதல், வரும், ஈரம், இடம், இசைக்குறிப்பு, தேம்புதல்

