முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » தேவதாடம் முதல் - தேவார்ப்பணம் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - தேவதாடம் முதல் - தேவார்ப்பணம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| தேவதாடம் | இராகு ; தீ . |
| தேவதாமரை | பதுமநிதி . |
| தேவதாயம் | கோயிலுக்கு விடப்பட்ட பூமி முதலிய தருமம் . |
| தேவதாரம் | ஐந்தருக்களுள் ஒன்று ; வண்டு கொல்லிமரம் ; நெட்டிலிங்கமரம் ; மதகரி வேப்பமரம் . |
| தேவதாரு | ஐந்தருக்களுள் ஒன்று ; வண்டு கொல்லிமரம் ; நெட்டிலிங்கமரம் ; மதகரி வேப்பமரம் . |
| தேவதானம் | கோயிலுக்கு விடப்பட்ட வரி இல்லா நிலம் . |
| தேவதீபம் | கண் . |
| தேவதுந்துபி | தேவவாத்தியம் . |
| தேவதூடணம் | தெய்வநிந்தை . |
| தேவதூதன் | தெய்வச்செய்தி கொண்டு வருவோன் . |
| தேவதூபம் | வெள்ளைக் குங்கிலியம் . |
| தேவதேவன் | பரம்பொருள் . |
| தேவதேவு | பரம்பொருள் . |
| தேவதை | தெய்வம் ; பேய் . |
| தேவநகர் | கோயில் ; துறக்கம் . |
| தேவநாகரம் | வடநாட்டில் உண்டாகி வழங்கும் ஆரிய மொழியின் வடிவெழுத்து . |
| தேவநாகரி | வடநாட்டில் உண்டாகி வழங்கும் ஆரிய மொழியின் வடிவெழுத்து . |
| தேவநாயகன் | தேவர்கள் தலைவன் . |
| தேவப்பசு | காமதேனு . |
| தேவப்பிரமா | நாரதன் . |
| தேவப்புள் | தெய்வத்தன்மையுள்ள பறவையான அன்னம் . |
| தேவபதம் | வானம் ; அரசர் முன்னிலை . |
| தேவபதி | இந்திரன் . |
| தேவபாடை | தேவர்களின் மொழியான வடமொழி . |
| தேவபாணி | தேவரை வாழ்த்தும் பாட்டுவகை . |
| தேவபூமி | தேவலோகம் . |
| தேவபோகம் | காண்க : தேவதானம் . |
| தேவம் | கடவுள் ; அனிச்சை ; காண்க : குழிநாவல் ; மாமரம் . |
| தேவமாதா | தேவர்களின் தாயான அதிதி ; கன்னிமரியாள் . |
| தேவமானம் | தேவர்க்குரிய காலவளவு . |
| தேவயாத்திரை | தலயாத்திரை ; கோயில்மூர்த்தியின் புறப்பாடு . |
| தேவயானம் | கடவுளர் ஊர்தி ; அர்ச்சிசு முதலாகிய தேவதைகளைக் கடந்து மோட்சத்துக்குச் செல்லும் வழி . |
| தேவயானை | இந்திரன் பட்டத்து யானையான ஐராவதம் ; முருகன்தேவி . |
| தேவர் | கடவுளர் ; நால்வகைத் தேவவகையார் ; ஐவகைத் தெய்வசாதியினர் ; திருவள்ளுவர் ; திருத்தக்கதேவர் ; உயர்ந்தோரைக் குறிக்கும் சொல் ; அரசர் துறவியர் முதலியோருடைய சிறப்புப்பெயர் ; முக்குலத்தோரின் பட்டப் பெயர் . |
| தேவர்கோன் | தேவர்க்கு அரசனான இந்திரன் . |
| தேவரகசியம் | தேவர்க்கு மட்டும் தெரிந்த செய்தி . |
| தேவரகண்டன் | திருவாரூர்ச் சிவபெருமான் . |
| தேவரங்கம் | பணிப்புடைவை . |
| தேவரடியார் | தேவதாசிகள் . |
| தேவரம்பை | தெய்வப்பெண் ; தெய்வலோகத்து நாடக மகளிருள் ஒருத்தி . |
| தேவரன் | கணவனுடன் பிறந்தான் . |
| தேவராசன் | தேவர்களுக்கு அரசனான இந்திரன் . |
| தேவராட்டி | தெய்வமேறி ஆடுகிறவள் . |
| தேவராலயம் | தேவர்க்கு இருப்பிடமான மகாமேரு . |
| தேவராளன் | தெய்வமேறி ஆடுகிறவன் . |
| தேவரான் | காமதேனு . |
| தேவருணவு | தேவரின் உணவான அமுதம் . |
| தேவலகன் | கோயில் அருச்சகன் . |
| தேவலன் | நன்னெறி நடப்போன் ; பார்ப்பான் ; காண்க : தேவரன் . |
| தேவலோகம் | துறக்கம் . |
| தேவவசனம் | கடவுள் திருவாக்கு . |
| தேவவருடம் | தேவர்க்குரியதும் முந்நூற்றறுபத்தைந்து மானுட ஆண்டு கொண்டதுமான ஆண்டு . |
| தேவவிரதன் | தேவனை வழிபடுவோன் ; வீடுமன் . |
| தேவளம் | கோயில் . |
| தேவன் | கடவுள் ; அருகன் ; அரசன் ; கொழுந்தன் ; பரிசைக்காரன் ; ஈட்டிக்காரன் ; மடையன் ; முக்குலத்தோருக்கு வழங்கும் பட்டப்பெயர் . |
| தேவனம் | தாமரை ; சூதாட்டம் . |
| தேவாங்கம் | பட்டுச்சீலை . |
| தேவாங்கு | உடல் இளைத்துத் தோன்றும் ஒரு விலங்குவகை ; வேலைப்பாடு அமைந்த ஆடை வகை . |
| தேவாசிரியன் | திருவாரூரில் உள்ள ஆயிரக்கால் மண்டபம் . |
| தேவாசுரம் | தேவர்க்கும் அசுரர்க்கும் நடந்த பெரும்போர் . |
| தேவாத்துமா | அரசமரம் . |
| தேவாதிதேவன் | முதற்கடவுள் . |
| தேவாதீனம் | தெய்வத்தின் முடிவு . |
| தேவாபீட்டை | தேவர்களுக்கு உகந்ததாகிய வெற்றிலை . |
| தேவாமுதம் | காண்க : தேவருணவு . |
| தேவாயதனம் | கடவுளர்க்குரிய கோயில் . |
| தேவாயுதம் | வானவில் . |
| தேவார்ப்பணம் | தெய்வத்துக்குப் படைத்த பொருள் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 616 | 617 | 618 | 619 | 620 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தேவதாடம் முதல் - தேவார்ப்பணம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், கோயில், காண்க, இந்திரன், கடவுள், வழங்கும், தேவர்க்கு, தேவலோகம், காமதேனு, தேவர்களின், அரசர், கடவுளர், தேவருணவு, ஆண்டு, தெய்வமேறி, தேவர்களுக்கு, அரசனான, தேவரன், வடிவெழுத்து, ஆரிய, வண்டு, கொல்லிமரம், நெட்டிலிங்கமரம், ஒன்று, ஐந்தருக்களுள், கோயிலுக்கு, விடப்பட்ட, மதகரி, வேப்பமரம், உண்டாகி, சொல், வடநாட்டில், துறக்கம், தேவதானம், பரம்பொருள், மொழியின்

