முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » தென்னமரம் முதல் - தேங்காய்மரம் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - தென்னமரம் முதல் - தேங்காய்மரம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| தென்னமரம் | தெங்கு . |
| தென்னர் | தெற்கு ; தென்னாட்டவர் ; பாண்டிய அரசர் ; பகைவர் . |
| தென்னல் | காண்க : தென்றல் . |
| தென்னவன் | தென்னாட்டு அரசனாகிய பாண்டியன் ; யமன் ; இராவணன் . |
| தென்னவெல்லம் | தென்னஞ்சாற்றிலிருந்து செய்யும் இனிய கட்டி . |
| தென்னவெனல் | இசைக்குறிப்பு . |
| தென்னன் | காண்க : தென்னவன் . |
| தென்னாசாரியர் | தென்கலை வைணவ ஆசாரியர் . |
| தென்னாதெனாவெனல் | தளாச் சொற்கட்டு . |
| தென்னி | வாழை . |
| தென்னிலை | காண்க : தென்னோலை . |
| தென்னுதல் | கிளம்புதல் ; நெம்புதல் . |
| தென்னுரை | காண்க : தென்மொழி . |
| தென்னுலகு | பிதிரர் உலகம் . |
| தென்னை | தெங்கு . |
| தென்னோலை | தென்னையோலை . |
| தெனாது | தெற்கில் உள்ளது ; தெற்கு . |
| தே | ஒர் உயிர்மெய்யெழுத்து (த்+ஏ) ; தெய்வம் ; கொள்ளுகை ; தலைவன் ; மாடு துரத்தும் ஒலிக்குறிப்பு . |
| தேஎம் | தேயம் , நாடு ; இடம் . |
| தேக்கம் | தேங்குகை ; நீரோட்டத்தின் தடை ; நிறைவு ; மனக்கலக்கம் ; ஏப்பம் ; தடை ; அச்சம் . |
| தேக்கர் | மிகுதி . |
| தேக்கிடுதல் | ஏப்பமிடுதல் ; நிரம்பி வழிதல் ; உணவின் மிகுதியால் அதனில் வெறுப்புநிலை அடைதல் . |
| தேக்கு | தேக்குமரம் ; கமுகமரம் ; தெவிட்டு ; ஏப்பம் ; காண்க : சம்பகம் . |
| தேக்குதல் | நீர் முதலியவற்றை ஒரிடத்தில் தேங்குமாறு கட்டுதல் ; தடைபண்ணுதல் ; நிரம்பப் பருகுதல் ; நிறைதல் ; தெவிட்டுதல் ; ஏப்பம்விடுதல் . |
| தேக்கெறிதல் | தெவிட்டுதல் ; ஏப்பமிடுதல் ; நிறைதல் ; நிரம்பவுண்ணுதல் . |
| தேக்கொக்கு | தேமா . |
| தேகக்கூறு | உடலின் இயல்பாயுள்ள நிலை . |
| தேககாங்கை | உடற்சூடு . |
| தேககாந்தி | உடல் ஒளி , மேனியின் பளபளப்பு . |
| தேககோசம் | தோல் . |
| தேகசம்பந்தம் | புணர்ச்சி ; உறவு . |
| தேகசாரம் | மூளை . |
| தேகசுத்தி | உடலின் தூய்மை ; உடல் தூய்மை செய்யும் சடங்கு . |
| தேகத்தடிப்பு | கரப்பான்வகை . |
| தேகதாரகம் | எலும்பு . |
| தேகதிடம் | உடல்வலிமை . |
| தேகபந்தம் | உடல்மேல் வைக்கும் பற்று . |
| தேகம் | உடம்பு ; கமுகு . |
| தேகயாத்திரை | உடலோம்புதல் ; இறப்பு . |
| தேகரசம் | வியர்வை . |
| தேகராசம் | காண்க : கையாந்தகரை . |
| தேகவியோகம் | உடலிலிருந்து நீங்குதலாகிய சாவு . |
| தேகளி | இடைகழி . |
| தேகளீதீபநியாயம் | இடைகழியில் வைத்த விளக்கு இருபுறமும் ஒளிவீசுதல்போல ஒரு பொருள் இடையிலிருந்து இரண்டிடத்தும் பயின்றுவரும் நெறி . |
| தேகனி | மஞ்சள் . |
| தேகாத்துமவாதம் | உடம்பே ஆன்மா என்று கூறும் சாருவாகமதம் . |
| தேகாந்தம் | உடலின் இறுதியாகிய இறப்பு . |
| தேகாபிமானம் | உடம்பினிடத்து வைக்கும் பற்று . |
| தேகி | ஆன்மா ; புல்லுருவி . |
| தேகியெனல் | ஈ என இரத்தற்குறிப்பு . |
| தேங்காய் | தெங்கங்காய் ; இனிய காய் . |
| தேங்காய்க்கண் | தேங்காயின் மேலிடத்துள்ள முக்கண் . |
| தேங்காய்த்தண்ணீர் | முற்றின தேங்காயின் நீர் . |
| தேங்காய்த்துருவல் | தேங்காய்ப்பருப்பின் துருவிய பூ . |
| தேங்காய்துருவி | தேங்காய்ப்பருப்புத் துருவும் கருவி . |
| தேங்காய்நெய் | தேங்காய்ப்பாலினின்றும் காய்ச்சி எடுக்கப்படும் எண்ணெய் ; கொப்பரையைச் செக்கிலிட்டு ஆட்டி எடுக்கும் எண்ணெய் . |
| தேங்காய்ப்பால் | தேங்காய்த் துருவலினின்று பிழிந்த பால் ; தேங்காய்ப்பாலுடன் சருக்கரையிட்டு ஆக்கும் குடிநீர்வகை . |
| தேங்காய்ப்பூ | காண்க : தேங்காய்த்துருவல் . |
| தேங்காய்மரம் | தென்னைமரம் ; கத்தூரிமண மரவகை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 612 | 613 | 614 | 615 | 616 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தென்னமரம் முதல் - தேங்காய்மரம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, உடலின், வைக்கும், தூய்மை, பற்று, உடல், ஆன்மா, எண்ணெய், தேங்காய்த்துருவல், தேங்காயின், இறப்பு, நிறைதல், இனிய, செய்யும், தென்னவன், தெற்கு, தென்னோலை, ஏப்பம், தெங்கு, நீர், ஏப்பமிடுதல், தெவிட்டுதல்

